Posts

Showing posts from November, 2024

குடும்பனின் பார்வையில்

 "கலைஞர்களின் நம்பகத்தன்மை" வெளியே என்ன நடக்கிறது என  தெரியாமல் ஒரு தொடருக்காக எழுதிக் கொண்டிருந்தேன். எழுதி அனுப்பியபின் ரிலாக்ஸாக உணர்ந்தேன்.  வாட்ஸப் ஹோம் குரூப்பில் மகள் சுடர் 'The go giver' நூலில் இருந்து 'The five laws of stratospheric success' பதிந்திருந்தார். இந்நூலை எழுதியவர் பாப் பர்க் ( Bob Burg). வணிகத்துறையில் வெற்றி பெறுவது குறித்த விதிகள் இவை. வணிகம் என்றில்லை.  "நாம் எத்துறையில் ஈடுபட்டிருக்கிறோமோ அதை ஒழுங்குபடுத்த இவரது சில கருத்துகள் உதவலாம்."  பிறகு முகநூலை ஸ்க்ரால் செய்தேன். விடுதலை 2 மேடை அது. இளையராஜாவை திமிர் பிடித்தவர் என்கிறார்கள். அவரது அனுபவம் என்ன? மேதைமை என்ன? வெற்றிமாறனிடம் 'நீ தான் என் குரு!'  என்கிறார். 'உன்னிடம் நான் கற்றுக் கொள்கிறேன்' என்கிறார். சூரி, விஜய்சேதுபதி போன்றோரை இயல்பாக கலாய்க்கிறார்.  Go giver நூல் சொல்லும் விதிகளுள் ஒன்று  the law of authenticity. அதில் பாப் பர்க் சொல்கிறார். ' நீங்கள் வழங்க வேண்டிய மிக மதிப்புமிக்க பரிசு நீங்களே'.  இளையராஜா இச்சமூகத்துக்கு தன்னையே  பரிசளித்தவர்....

குடும்பனின் படிப்பில்

 ஒரு குடம் நஞ்சில் ஒரு துளி அமுது விழுந்தது அமுதை தமக்குள் கரைத்திட நஞ்சுகள் சேர்ந்தன அமுது நஞ்சாக மறுத்து எதிர்த்தது ஒரு குடம் அமுதில் ஒரு துளி வீழ்ந்து குடம் முழுதையும் நஞ்சாக்கிவிடுவோம் ஒரு துளியாய் நீ இருந்து ஒரு குடம் எங்களை எதிர்ப்பதாவென நஞ்சர்கள் ஆவேசமடைந்தனர் அடித்தாலும் உதைத்தாலும் பிய்த்தாலும் அமுதாய் சிதறி மடிவேனேயன்றி நஞ்சாய்மாறேனென அமுது திடமாய் நின்றது அமுதன்பின் பிசுபிசுப்பில் நஞ்சர்கள் ஒட்டி ஒட்டி அமுதாய் திரிய தொடங்கினர் திரிதலின் முழுமையில் பொங்கிய அமுதம் துளி துளியாய் பிரிந்து நஞ்சர்களின் கூட்டங்களில் தனித்தனியாய் வீழ்ந்தது செம்பரிதி