குடும்பனின் பார்வையில்
✒️காற்றிலே கம்பு சுத்துதலும் வீண்... சேற்றிலே கல்லெறிதலும் வீண்.. குளத்தைக் கலக்கி பருந்து கையிலே கொடுப்பதும் வீண்... பட்டியல் வெளியேற்றம் பாஜக அரசால் மட்டுமே சாத்தியம் எனத் தெரிந்தும் பாஜகவை கடுமையாக எதிர்க்கிறவர்கள் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.. இதை எப்படிப் புரிந்துகொள்வது.? வட இந்தியாவில் நிகழும் வன்முறைகளுக்கெல்லாம் பாஜகதான் காரணம் என்று பேசுகிறார்கள்.!!!!! ஆனால் தென் தமிழகத்தில் நடக்கும் தாக்குதல்களுக்கும், கொலைகளுக்கும் யார் காரணம்.? தடுக்கத் தவறுகிறவர்கள் யார்? பொதுத்தேர்தல் பரப்புரையில் செந்தில்பாலாஜி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அப்பட்டமாக மறைத்து அவருக்கு மந்திரி பதவி தந்த கொடுமையை எப்படி அணுகுவது? ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம், மதுவை ஒழிப்போம் எனப் பேசியதெல்லாம் மறந்தா விட்டது..!!!!! ஐடி விங்குகள் மடைமாற்றம் செய்கின்றன.. பட்டியல் வெளியேற்றம் பற்றிப் பேச தேவேந்திரகுல வேளாளர் சமூக எம்பி, எம்எல்ஏ.க்கள் தயாராக இல்லையே.. அந்த கண்றாவிப் பொழப்பு எதற்கு? பட்டியல் வெளியேற்றத்திற்காகத் தன்னால் இயன்ற மட்டும் போராடும் அல்...