குடும்பனின் பார்வையில்
✒️ ம்..போடுகிற கூட்டம் இருக்கிற வரை வெறுங்கதைகள் நீளத்தான் செய்யும்.
தமிழர் மண்ணுக்கு உரிமை கொண்டாட வேண்டியவர்கள் மடைக் குடும்பர்கள் மட்டும்தான்..
கீழடி அகழாய்வு காட்டும் வரலாற்றுத் தரவுகள் உண்மையைப் பேசும்போது இந்த மண்ணின் ஆதிப் பூர்வீகக்குடிகள் யார் என அடையாளம் காட்டும்.
தொல்காப்பியத்திற்கும் முன்பாகத் தமிழர்கள் பெருங் கல்விப் புலமையோடு வாழ்ந்துள்ளனர்.
திருவள்ளுவருக்கு நிகரான வாழ்வியல் தத்துவத்தைத் தந்த ஓர் அறிவுசார் மைந்தனை இதுவரை உலகம் கண்டதில்லை..
அவரது படைப்பின் உள்ளடக்கத்தைப் போன்றே உருவக் கட்டமைப்பும் ஆச்சரியப்படுத்துகிறது.
புலமையும், கவித்திறனும் அறச்சொல் தந்த வேந்தர்களும் இந்தப் பூமியில் தான் அதிகம் வாழ்ந்துள்ளனர்..
சாதாரண மனிதர்கள் கூட ஆகச்சிறந்த வாழ்க்கைக்கு வழிகாட்டிச்சென்றதோடு அடையாள வேர்களையும் விட்டுச்சென்றுள்ளனர்.
பொத்தாம்பொதுவாகவோ, நாதியத்த வரட்டுச் சித்தாந்தங்களையோ ஒரு போதும் புழுகிச்செல்லவில்லை.
வாழ்வியலுக்கான இலக்கணங்களைத் தாமே வாழ்ந்து அனுபவித்துச் சொல்லிச் சென்றுள்ளனர்.
ஒவ்வொரு பழங்கதையும், விடுகதையும் வாழ்வியலுக்கான துணைக்கருவிகள் என்பது சர்வ காலமும் நிஜமாகிறது...
தொழில்சார்ந்து சமூகம் குழுக்களாகப் பிரிந்து வாழ்ந்தாலும் இசைந்தும், இணைந்தும்,விட்டுக் கொடுத்தும் உலகம் பயன்பெற வாழ்ந்துள்ளனர்.
அபகரித்தவனுக்கு விட்டுக் கொடுப்பதன் மூலமாகப் பதிலடி தந்துள்ளனர் நமது முன்னோர்.
எம் சமூகம் ஏரிப் பாசனத்திற்கு மடை அடைக்கும்போது மாண்டவர்களைத்தான் தெய்வமாக நிறுத்தி வழிபாடு செய்துள்ளனர்.
ஊருக்காக உயிர்த்தியாகம் செய்தவர்கள்தான் மடைக் குடும்பர்கள் என்ற கருத்தியலைப் பொய்யாக்கி மடையர்கள் என்றால் புத்தி கெட்டவர்கள் எனப் பேச வைத்தனர்.
தியாக வரலாறு கேலி செய்யப்பட்டது இங்கேதான்..
தியாகிகள் கல்லறையற்றுப்போனதும், வெறும் பிதற்றல் பேசியவர்கள் உலகமகா ஞானிகளாகக் கட்டமைக்கப்பட்டதும் வஞ்சிக்கப்பட்ட வரலாற்றின் அடையாளங்கள் தாம்.
பக்தி இயக்கங்களின் காலம் என்பது கூட மடையர்களின் வாழ்வியலை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சிதான்.
பிறகான காலங்களில் ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டிய கதையாகிப்போனது..
இதுவரை பேசாத ஒன்றைப் பேசுவோம் ..
தமிழ்ச் சாதிகள் மட்டும் தான் தம் சந்ததிகளுக்கான பெயர் சூட்டலில் தமிழரோடு தொடர்புடைய பெயர்களைச் சூட்டுகின்றன..
மற்றவர்கள் தமது இயக்கங்களுக்கு மட்டும் தமிழர் அடையாளத்தைச் சூட்டிவிட்டு வேடிக்கை காட்டுகின்றனர்.
தமிழரசனும், தமிழ்ச்செல்விகளும் எந்தச் சமூகத்தின் அல்லது எந்தச் சமயத்தின் அடையாளமாக இருக்கிறது என்ற மீள்பார்வை தேவை..
நிலத்தை மையமாக வைத்து அரசாண்ட நிலைமாறி மொழியை வைத்தும், மதத்தை வைத்தும் அரசியல் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன.
அதற்குத் தோதான ஆதரவு மற்றும் மறுப்புக் கதைகளும் கோட்பாடுகளும் உருவாக்கப்பட்டு வலிந்து திணிக்கப்பட்டன..
ஆராய்ச்சி என்ற பெயரில் மொழிக்குடும்பங்கள் உருவாக்கப்பட்டன..
தமிழ்நாட்டில் பேசப்படும் திராவிடம் ஆந்திராவிலும், கேரளத்திலும், கருநாடகத்திலும் இல்லை..
தமிழர்கள் வாழும் நிலப்பரப்புக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்து உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தவரின் பெயர் தெரியாத தமிழர்களாக இன்றையத் தலைமுறை உருவாக்கப்பட்டது.
அப்படி உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கநாடார் ஆவார்.
சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு எனப்பெயர் சூட்ட வேண்டும் என்று 1956 இல் சூலைக்கரை மேட்டில் உண்ணாவிரதமிருந்தார்.
சங்கரலிங்கனாரின் உயிர்த்தியாகத்தால் மலர்ந்ததுதான் தமிழ்நாடு எனும் பெயர்.
ஆனால் எந்தத் தியாகமும் செய்யாமல் வழிவழியாய் அரசுரிமை பெறுவதற்கு அரசியல் களத்தைத் தயார்ப்படுத்தியது யார்?
அதற்குத் துணை நிற்பது யார்யார்?
தந்திர அரசியலில் மடையர்கள் தோற்றுப்போகிறார்கள்..
புத்திசாலிகளும், தந்திர சாலிகளும் வெற்றி பெறுகிறார்கள்.
ஆமாம்...
புராணங்கள், இதிகாசங்கள் அனைத்தையும் மறுத்தோம்..
ஓலைச்சுவடிகளைப் பழைய பொருட்கள் வீடுகளில் இருப்பது நல்லதல்ல என்ற பொய்யுரையை நம்பி போகிப்பண்டிகை அன்று நெருப்பில் இட்டுக் கொளுத்தினோம்.
கொளுத்தியது வெறும் ஓலைச்சுவடிகள் அல்ல நம்முடைய வரலாறு என்பதை இன்னமும் அறியாதிருக்கிறோம்.
1950களுக்குப் பிறகு அரசியல்
வித்தைக்காரர்களின்
கதைகளுக்கு ...ம்.. போட்டோம்..
மடையர்களுக்கு புத்தி கெட்டவர்கள் என்ற பெயர் சூட்டினார்கள்.
அதையும் நாம் மறுக்காமல் ...ம்...போட்டோம்..
புண் ஆறிப்போனது
ஆனால்.....
தழும்புகள் நிரந்தரமானது.
இனியாவது நாம் நமது இழந்த வரலாற்றைப் பேசுவோம்..
ஏமாந்த இடங்களை அடையாளங்கண்டால் மட்டும்தான் இழந்த பெருமிதங்களை அறியமுடியும்.
அடையாளமில்லாத வாழ்க்கை கையேந்தத்தான் கற்பிக்கும்..
இனியாவது கவனம் பெறுமா தேவேந்திரர் திருக்கூட்டம்.
அல்லது சலுகை பறிபோகும் என்ற பொய்யை நம்பியே இருப்பதையும் இழக்குமா⁉️
வாழ்க தேவேந்திரனியம்.
©️✒️மடைக் குடும்பர்.
12.11.2023.
Comments
Post a Comment