Posts

Showing posts from April, 2025

குடும்பனின் மரபில்

 "ஒத்து வரவில்லை என்றால் விவாகரத்து வாங்கி விடுங்கள் "  என்று பேசுவது சர்வ சாதாரணமாகிவிட்டது இப்போது !🧡✨ மிக கொடூர சூழலில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு விவாகரத்து தேவையே ! அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அன்பில் இசைந்து செல்ல வேண்டிய விஷயங்களுக்கு கூட ஈகோ பார்த்துக் கொண்டும், குடும்ப உறவுகளின் வற்புறுத்தலுக்கும் நண்பர்களின் தேவையற்ற ஆலோசனைகள் ஆகியவை இளம் வயதினர் அதிகம் விவாகரத்தை நாடி செல்ல காரணமாகி விடுகிறது. ஆணைச் சார்ந்து பெண் வாழும் சுழலும் இப்போது இல்லை. இது மிகப் பெரிய காரணம் எனலாம். "உனக்கு என்ன கை நிறைய சம்பாதிக்கிற. உன்னால் உன்னையும் உன் பிள்ளைகளையும் பார்த்துக் கொள்ள முடியும். யோசிக்காதே. தைரியமாய் முடிவெடு"  என்று ஆலோசனைகள் அதிகம் கொடுத்து கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பணம் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமே வாழ்க்கை இல்லை. அதையும் மீறி பல விஷயங்கள் இருக்கின்றது. உங்களுக்கு வேறுறொரு கணவன் கிடைக்கலாம்.அல்லது கணவனென்றால் வேறொரு மனைவி கிடைக்கலாம். ஆனால் உங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் அப்பாக்களோ அல்லது அம்மாக்களோ நிச்சயம் கிடைக்க மாட்டார்கள். பார்ன்...

தாய்மொழிக்கு வந்த சிக்கல்

 பெயர் வெளியிட விரும்பாத ஒரு பெண்மணியின் முகநூல் பதிவு.  கடந்த சனிக்கிழமை அன்று பெங்களூரில் உள்ள என் கணவரோட நண்பர் வீட்டுக்குப் போயிருந்தோம். அவரோட அப்பா பெங்களூர்ல ஓய்வு பெற்ற பல்கலைக்கழக பேராசிரியர். கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, துளு, ஆங்கிலம் என பன்மொழி வல்லுனர். கன்னட மொழி குறித்து ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கிய கன்னடர். அவரிடம் பேச வாய்ப்புக் கிடைத்தது.  அவர் கூறியதும்,  எனது இந்தி மொழி குறித்த சிந்தனையையே மாற்றி விட்டது.  அவர் சொன்ன தகவல்: உங்கள் தமிழகம் போல ஆட்சி செய்யனும்னுதான் நாங்களும் விரும்பறோம். ஆனா இப்ப அங்கேயும் வடமாநில ஆதிக்கம் ஊடுருவத பாக்குறதுக்கு ரொம்ப வேதனையா இருக்கு.  *எங்களப் பாத்து நீங்க திருந்திக்கணும்.*  இங்க பெங்களூர்ல இந்தி மொழி ஆதிக்கம் வந்து பல காலமாச்சு. கொஞ்சம் கொஞ்சமா ஊடுருவி இப்ப எங்களால சமாளிக்க முடியாத அளவு ஆக்கிரமிச்சிட்டாங்க. அவன் வடநாட்டுல இருந்து இங்க வந்து இந்தியில பேசறான்.   "எனக்கு இந்தி மட்டுந்தான் தெரியும்"னு ஆணவமா சொல்றான்.  கன்னடம் தெரியாதுங்கறான். எவரும் உலகத்துல எங்க போனாலும...

குடும்பனின் பார்வையில்

 ✒️ அவமதிப்போரைக் கையெடுத்துக் கும்பிடுவதும் .. பெருமைப்படுத்துவோரை அவமதிப்பதும்  நியாயந்தானா சொல்...⁉️ பட்டியல் வெளியேற்றத்தைத் தடுப்பவர்கள் அல்லது விரும்பாதவர்கள் தான் பாஜகவை எதிர்க்கிறார்கள்.. எதிரான பதிவுகளைப் பரப்பி தேவேந்திரர்கள் மீதான பாஜகவின் நல்லுறவைத் தடுக்கிறார்கள்.. நாம் யாருக்கும் அடிமைகள் அல்ல... அரசியல் ரீதியாக பாஜகவை பல கட்சிகள் எதிர்க்கிறார்கள் அது அவர்களின் அரசியல் நிலைபாடு. நாற்றமெடுப்பதும் திரும்ப புனிதமாவதும் அரசியல் கூட்டணிகளில் சர்வ சாதாரணம். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தனித்தனியாகப் போட்டியிட்ட பாஜகவும் அதிமுகவும் இப்போது கூட்டணி சேர்ந்துள்ளன. தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத கூட்டணியாக உருவெடுத்துள்ளது.. ஏனென்றால் அவர்களது நோக்கம் நிறைவேற இருவரும் கூட்டுச் சேர்வதன் அவசியத்தை இன்று இருவருமே புரிந்து கொண்டனர். கடந்த தேர்தலில் இருவரும் பிரிந்து நின்றதால் குறைந்த வாக்கு எண்ணிக்கையில் பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பைப் பறிகொடுத்ததைத் தேர்தல் முடிவு ஆய்வுகள் சொல்லுகின்றன.. பிரிந்த அரசியல் கட்சிகளே கூட்டணி சேரும்போது மத்திய அரசின் துணையால் தான் பட்டியல் வெளியே...

பாண்டியனின் வழிகாட்டலில்

 மகனே பாண்டியா....☯️ இன்று ஏழாம் அகவையில் அடி எடுத்து வைக்கிறாய், ஏழு வருடங்கள் எப்படி ஓடியது என்று தெரியவில்லை. சரி, அது எப்படித்தான் ஓடிப்போனது என்று நினைவை பின்னோக்கி நகர்த்தினால் நகர்வின் ஒவ்வொரு புள்ளியிலும் நீதான் என் கண் முன் வந்து நிற்கிறாய், இந்த ஏழு ஆண்டுகளாய் நீதானே என் உலகம்....! இந்த தருணத்தில் உனது முதல் பிறந்த நாளுக்கு நான் உனக்கு எழுதிய #பதிவு நினைவுக்கு வருகிறது,  அதில் சொன்னபடி தான் இந்த ஏழு வருடங்களும் நகர்ந்திருக்கிறது நமக்கு, ஒவ்வொரு வருடமும் அந்த பதிவை எடுத்து என்னை நானே புதுப்பித்துக் கொள்கிறேன் மகனே....! இந்த #ஏழு வருட அனுபவத்தை மட்டும் தனியாக சேமித்து உனக்காக என் நினைவடுக்குகளில் பாதுகாத்து வைக்கப் போகிறேன், இன்பங்களை நீ அனுபவித்து தெரிந்து கொள், துன்பங்கள் எப்படி இருக்கும் என்பதை என்னிடம் கேள், நான் இந்த ஏழு வருடங்களிடமிருந்து ஏதோ ஒரு பகுதியை எடுத்து பாடமாக உனக்கு காட்டுவேன், அத்தனை அனுபவங்கள், துன்ப நினைவுகளை தேக்கி வைப்பதில் எனக்கு ஒருபோதும் விருப்பமில்லை மகனே, ஆனால் அப்படியோர் ஆர்வத்தில் நீ அதை எப்போதேனும் தேடிவிட கூடாதே, அதற்காக ஒரு முன் ஏற்பாடு....

குடும்பர்களுக்கான திட்டமிடலில்

 தேவேந்திரகுல வேளாளர் சமுதாய முன்னேற்றத்திற்கான தீர்வுகள் 1.நமது சமுதாயத்திற்கு எந்த தனி மனிதரையும் தலைவராக முன்னிறுத்தாமல் அமைப்பு / சங்கத்தை மட்டும் முன்னிறுத்துதல் 2.ஊர்க்குடும்பு முறைறையை கடைபிடித்தல்  3.கூடியமட்டும் காவல் நிலையம் செல்லுவதை தவிர்த்தல் 4. ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பது 5.பட்டியல் வெளியேற்றம் கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் 6.அனைத்து சங்கங்கள்/ அமைப்புகளை ஒன்றிணைத்து சமுதாய பட்டியல் வெளியேற்றம் மற்றும் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுதல்   7.பட்டியல் வெளியேற்றம் கோரிக்கையை மாநில அரசு நிறைவேற்ற தொடர்ந்து முயற்சி செய்தல்  8.நம்முடைய சமுதாய மக்கள் தொகை அடிப்படையில் நமக்கு சேரவேண்டிய அனைத்து உரிமைகளையும் பெற நடவவடிக்கை எடுத்தல்  9.அதிகாரத்தை கைப்பற்றுதல் 10.பொருளாதார முன்னேற்றம் 11.பொது நீரோட்டத்தில் கலப்பது  12.சமுதாய உணர்வை உண்டாக்குதல்  13.எதிரிக்கு எதிரியை ஆதரித்தல் 14.தேர்தல்களில் வாக்குகளை சரியான முறையில் பயன்படுத்துதல் 15.2026 தேர்தல் திட்டம் 16.படித்தவர்கள் அரசியலுக்கு வருவதை ஊக்குவித்தல்  17.இளைஞர்கள...

குடும்பனின் அரசியல் பார்வையில்

 குடும்பனின் பார்வையில் அரசியல் களம் 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அஇஅதிமுக- பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நாளில் தமிழக பாஜக தலைவராக திரு. நயினார் நாகேந்திரன் நியமிக்கப் பட உள்ளார் என்ற செய்தியும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு செய்திகளையும் தேவேந்திரர்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பதே நமக்கான கேள்வி..???? திமுக கூட்டணிக்கு எதிராக பலமான கூட்டணி உருவாகியிருப்பது வரவேற்கத்தக்கது தான். இருவரும் தனித்தனியாக நின்றால் இவருக்கும் பலவீனம் என்பதைக் கடந்த தேர்தல் நிரூபித்துள்ளது.. தமிழகத்தில் பாஜக ஒன்றும் தீண்டத்தகாத கட்சி இல்லை. ஏற்கனவே திமுக அக்கட்சியோடு கூட்டணி வைத்த வரலாறெல்லாம் உண்டு. சிறுபான்மையினரை எப்போதும் பாஜகவிற்கு எதிரான மனநிலையிலே வைத்துத்தான் தமிழக அரசியல் கட்டமைக்கப்படுகிறது.. அதே அரசியல் தான் தேவேந்திரர்களைப் பட்டியலிலிருந்து வெளியேற விடாமல் தொடர்ந்து கட்டுப்படுத்தியும் வைத்திருக்கிறது.. எத்தனை ஊழல் செய்தாலும் உயர்குடியினராக அறியப்படுபவர்கள் முன் பட்டியல் சமூக அரசியல்வாதிகள் கூட பவ்வியத்தோடு தான் நிற்க வேண்டியிருக்கிறது. தேவேந்திரர்களின் நீண்ட காலக் ...

சிங்கன்-மகன்

 ப்பா ஒரு கதை சொல்லு...! என்ன கதை தங்கோ...?? சிங்க கதை ப்பா....! ஹோ... நம்ம கதையா, சொல்லுறேன் கேளு....!! ஒரு காட்டுல ஒரு சிங்க ராஜா இருந்தாராம், அந்த சிங்க ராஜா தன் குடும்பத்தோட அசந்து தூங்கும்போது காத்திருந்த ஒரு சூழ்ச்சிக்காரன் தன் ஆட்டுக் கூட்டத்தோடு சேர்த்து அந்த சிங்க கூட்டத்தையும் பட்டியில் அடைச்சு பட்டிக்கு காவலா சில காவல் நாய்களையும் நியமிச்சு வச்சானாம், நாய்களை பட்டிக்கு வெளியே காவலுக்கு வச்சுட்டு அந்த சூழ்ச்சிக்காரன் அந்த சிங்க ராஜாவோட காட்டையே கைபற்றி கொண்டானாம், ஏற்கனவே இந்த சிங்க கூட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்த அந்த நாய்களும் இந்த சிங்க கூட்டத்தை பட்டியிலிருந்து மட்டும் வெளியே வர விட்டுட கூடாதுன்னு குரைச்சுகிட்டே இருந்துச்சாம்.  ம்....! தூங்கி விழிச்சு பார்த்த சிங்க கூட்டத்துக்கு ஒரே அதிர்ச்சியாம், என்னடா அசந்திருந்த நேரம் பார்த்து இப்படி வந்து சிக்கிக்கிட்டோமே, இதிலிருந்து எப்படிடா தப்பிக்கிறதுன்னு தவிச்சு நின்ன போது அந்த பட்டி காரன் சலுகைங்கிற பேருல அப்பப்போ வந்து கொஞ்சம் எலும்பு துண்டு போட ஆரம்பிச்சானாம், முதலில் பட்டியிலிருந்து வெளியே எப்படி போகலாம், தன் காட...

குடும்பனின் யோசிப்பில்

 ✒️தேவேந்திரர் வாக்கு தேவேந்திரர்களுக்கே என்ற கொள்கை ஒரு நுண் அரசியல் அவ்வளவுதான்.. அதனை எல்லா இடத்திலும், காலத்திலும் பின்பற்ற இயலாது. வாக்கு அரசியலில் பெரும் புரிதல் தேவைப்படுகிறது.. கூட்டணி இல்லாமல் இனி யாராலும் ஆட்சியதிகாரத்தைப் பெற இயலாது.. ஆக நம்மை ஏற்றுக் கொள்பவர்களுக்கு நாமும் நம்பிக்கையோடு கைமாறு செய்வோம் என்ற நம்பிக்கையை விதைக்க வேண்டும்.. நமக்கான பிரதான கோரிக்கையை வென்றெடுக்க நம்மிடம் உள்ள திட்டங்கள் என்ன? நம்முடைய திட்டங்களை நாமே வென்றெடுக்க முடியுமா அல்லது யாரையாவது சார்ந்து செயல்படுத்த முடியுமா என்பதை யோசிக்க வேண்டும். தேவேந்திரர்கள் மட்டும்தான் அரசியலால், மதத்தால் பிளவு பட்டுக் கிடக்கிறோம் என்பதை விட முரண்பட்டுச் சச்சரவுகளை வளர்த்துக் கொள்கிறோம்.. அரசியலில் நேர்மையை விட தந்து மந்துகள் தான் வெற்றி பெறுகின்றன.. தேர்தல் அரசியலே வேண்டாம் என்றவர்கள் இன்று கூட்டணி அமைத்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். கொள்கைகளை விட்டு வெகுதூரம் விலகி சமரசம் ஆகி இருக்கிறார்கள்.. இன்னும் சொல்லப்போனால் அநியாயத்துக்குத் துணை போகிறார்கள் அல்லது ஆதாயங்களுக்குக் கையேந்துகிறார்கள்.. அவர்களுக்குத் தெ...

குடும்பனின் பார்வையில்

 பிரபாகரனின் மகனையும் ஏனைய 120 தளபதிகளையும் சுடச்சொன்னது கருணா தான் அவருடைய சகா ஒருவரே அவரை சுட்டார் மகிந்த தரப்பு அதிரடி அறிவிப்பு ஈழப்போர் உக்கிர கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது  120 மேற்ப்பட்ட தளபதிகள் சரணடைந்த சம்பவம் இடம்பெற்றது சரணடைந்த தளபதிகள் அவர்களின் பிள்ளைகள் என தனித்தனியே அழைத்து செல்லப்பட்டனர் அதன்போது வவுனியா யோசப் முகாமிற்கு அண்மித்த இரகசிய முகாமில் அடைத்து வைக்கப்பட்ட இவர்கள் பெண்கள் வேறாகவும் ஆண்கள் வேறாகவும் பிரிக்கப்பட்டு பெண்களை நிர்வாணமாக்கி ஒரு அறையில் அடைத்து சித்திரவதைகள் இடம்பெற்றது மட்டும் அன்றி பாலியல் கொடுமைகளும் அரங்கேற்றப்பட்டது இதன்போது குறித்த தளபதிகளை உயிரோடு  விட்டாள் ஆபத்து என கூறிய கருணா அவர்களை முதலில் சுட்டுக்கொல்ல உமாவும் தளபதி ரமேஸ் நடேசன் புலித்தேவன் இவர்களை சித்திரவதை செய்து உண்மைகளை அறிந்து பின் அணுவணுவாய் சித்திரவதை செய்து கொல்லுமாறு கருணா அம்மான் கோட்டபாய ராஜபக்ச விற்கு தகவல் கொடுக்க பின்னர் அதன்படி நடந்தேறியது  வெள்ளைக் கொடியோடு சரணடைந்த புலிகளின் முக்கிய தளபதி, போராளிகள்  .வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விட...