சிங்கன்-மகன்
ப்பா ஒரு கதை சொல்லு...!
என்ன கதை தங்கோ...??
சிங்க கதை ப்பா....!
ஹோ... நம்ம கதையா, சொல்லுறேன் கேளு....!!
ஒரு காட்டுல ஒரு சிங்க ராஜா இருந்தாராம், அந்த சிங்க ராஜா தன் குடும்பத்தோட அசந்து தூங்கும்போது காத்திருந்த ஒரு சூழ்ச்சிக்காரன் தன் ஆட்டுக் கூட்டத்தோடு சேர்த்து அந்த சிங்க கூட்டத்தையும் பட்டியில் அடைச்சு பட்டிக்கு காவலா சில காவல் நாய்களையும் நியமிச்சு வச்சானாம், நாய்களை பட்டிக்கு வெளியே காவலுக்கு வச்சுட்டு அந்த சூழ்ச்சிக்காரன் அந்த சிங்க ராஜாவோட காட்டையே கைபற்றி கொண்டானாம், ஏற்கனவே இந்த சிங்க கூட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்த அந்த நாய்களும் இந்த சிங்க கூட்டத்தை பட்டியிலிருந்து மட்டும் வெளியே வர விட்டுட கூடாதுன்னு குரைச்சுகிட்டே இருந்துச்சாம்.
ம்....!
தூங்கி விழிச்சு பார்த்த சிங்க கூட்டத்துக்கு ஒரே அதிர்ச்சியாம், என்னடா அசந்திருந்த நேரம் பார்த்து இப்படி வந்து சிக்கிக்கிட்டோமே, இதிலிருந்து எப்படிடா தப்பிக்கிறதுன்னு தவிச்சு நின்ன போது அந்த பட்டி காரன் சலுகைங்கிற பேருல அப்பப்போ வந்து கொஞ்சம் எலும்பு துண்டு போட ஆரம்பிச்சானாம், முதலில் பட்டியிலிருந்து வெளியே எப்படி போகலாம், தன் காட்டை மீட்டு ஆளலாம்னு நெனச்ச சிங்க கூட்டத்தில் கால போக்கில் சின்ன சின்ன கருத்து வேற்றுமை வரவே சில சிங்கங்கள் தன்னோட மரபு குணத்தையே மறந்து இனிமே இந்த பட்டி தான் நமக்கு கிடைத்த கதி, எலும்பு துண்டு கிடைக்கிறதே என்று அதை உண்டு பிழைத்துக் கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்துச்சாம், பிறகு கொஞ்சம் கொஞ்சமா எல்லா சிங்கங்களுமே பட்டியில் அடைபட்ட ஆடுகளாகவே தன்னை நினைக்க ஆரம்பிச்சுடுச்சாம், இப்போ பட்டி காரணுக்கு சந்தோசம், பட்டியை பராமரிக்க கூட தேவையில்லை கொஞ்சம் எலும்பு துண்டுகளை மட்டும் போட்டால் போதும், அந்த சிங்கங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம் அதன் மூலம் சிங்கத்தின் காட்டை நாம் சுதந்திரமாய் ஆளலாம் என்று ஆண்டு கொண்டிருந்தானாம், எவ்வளவு தான் பழக்கப் படுத்தினாலும் மரபுக் குணம் மாறுமா, எங்கேயாவது வெளி வந்திடும் தானே.
ப்பா அப்போ மரபு குணம் மாறவே மாறாதா....??
அதெல்லாம் பல்லாயிர வருசம் பண்பட்டு வந்த குணங்கள் தங்கோ, அவ்வளவு சீக்கிரத்தில் மாற்றிட முடியாது....!
ஹோ... அப்புறம்....?
எவ்வளவு நாள் தான் காட்டை பிடிங்கிக் கொண்டு பட்டியிலேயே வைத்து விட முடியும், காலம் விட்டுவிடுமா என்ன. சில காலத்திற்கு பிறகு மெதுவாக அந்த சிங்கங்களுக்கு அதுகளோட மரபு குணம் திரும்ப ஆரம்பிச்சதாம், உடனே அந்த சிங்கங்கள் அந்த பட்டியை உடைத்து வெளியே வர நினைத்தமாம், ஆனால் அதற்காகவே காவல் வைக்கப்பட்டிருக்கும் காவல் நாய்கள் விடுவிடுமா என்ன, காவல்கார நாய்கள் உசாராகி குரைத்து தன் எஜமானன் விசுவாசத்தை காட்டி எஸ்ட்ரா எலும்பு துண்டு வாங்கிக் கொள்ள ஆரம்பிச்சுதாம், இப்படியே கொஞ்சகாலம் போச்சாம்.
ம்... அப்புறம் என்னாச்சு....?
பொறுத்து பொறுத்து பார்த்த சிங்க கூட்டம் நீண்ட காலத்திற்கு பிறகு கர்ஜிக்க ஆரம்பித்ததாம், இந்த முறை அந்த நாய்கள் குரைக்கவே தேவை இருக்கவில்லை, சிங்கங்களின் கர்ஜனை பட்டியில் அடைத்தவர்களை பதற்றமாக வைத்ததாம், உடனே பட்டி காரன் விதவிதமான எலும்பு துண்டுகளோடு ஏதாவது ஒரு முட்டாள் சிங்கத்தை தன் கை கூலி ஆக்கிவிட முடியாதா என்ற நட்பாசையில் பட்டியை பலப்படுத்தியபடி சுற்றி சுற்றி வந்தானாம்.
அப்புறம் என்னாச்சு....?
அவன் சூழ்ச்சி காரன் ல்ல, அவன் சூழ்ச்சிக்கு மயங்கி சில சிங்கங்கள் அந்த எழும்பு துண்டுக்கு ஆசை பட்டு ஆடாக கனைக்க முயற்சித்ததாம், ஆனால் பெரும்பான்மை சிங்கங்களின் கர்ஜனைக்கு முன்பு இம்முறை எதுவும் எடுபட வில்லையாம்.
ம்....!
முதலில் காவல் நாய்களை காவலுக்கு வைத்து தோற்று போய், பிறகு சிங்க கூட்டத்தில் பலி ஆடுகளை தேடி பார்த்து தோற்று போன பட்டிக்கு சொந்தக் காரன் இப்போது பட்டி ஆடுகளை தூண்டி விட்டானாம்.
அப்பா ஆடு எப்படி சிங்கத்தை ஜெயிக்க முடியும்....??
ம்... வாய்ப்பில்லை தான், ஆனால் தான் சிங்கம்னு அந்த சிங்க கூட்டத்துக்கு தெரிஞ்சா தானே, அதுதான் அடையாளத்தோட ஆளுமை....!
ம்ம்....!
இப்போது இந்த பட்டி ஆடுகள் எல்லாம் மொத்தமாய் சேர்ந்து நீங்களும் எங்களை போல ஆடுகள் தான், ஆண்டைக்கு அடி பணிந்து விடுங்கள் என்று கோரஸ் பாட ஆரம்பிச்சதுகளாம். நமக்கு பட்டி தான் பாதுகாப்பு, தேவையான அளவு சாப்பாடு கிடைக்குது, வெளியே போனா நாய்கள் பயம்னு ஏதேதோ பாடிச்சுதுகளாம்.
ஹோ, அதுகளுக்கு அதுகள் பிரச்சினை, நம்மளையும் அதுகளோட சேர்க்கிறது தான் பாவம்...!
ஆமா, பாவம் அந்த ஆடுகளுக்கு தெரியவில்லை, அவர்களின் ஆண்டைகளுக்கெல்லாம் ஆண்டைகளை தான் அவர்கள் ஏய்க்க மெனக்கிடுகிறார்கள் என்று.
அப்பா....!!!!
இப்போ அந்த #சிங்க_ராஜா சொன்னாராம்....!?
சொல்லு ப்பா...!
அடேய் ஆடுகளே கவனமாக கேட்டுக்கொள்ளுங்கள், இதுநாள் வரை பட்டியில் இருந்தும் நீங்கள் ஏன் எங்கள் பசிக்கு உணவாகவில்லை என்பதை நீங்கள் யோசிக்கவே இல்லை, இப்போது சொல்கிறோம் கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் இரைக்காகவே வளர்க்கப் படுகிறவர்கள், என்றைக்காக இருந்தாலும் நீங்கள் இரையாக போவது உறுதி, அப்படி இருக்கையில் உங்களை எங்கள் பசிக்கு இரையாக்குவதில் அப்படி என்ன சுவாரஸ்யம் இருந்துவிட போகிறது, அதே வேளை அரவணைத்து சுதந்திரம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்திருந்தோம், உங்களால் காவல் நாய்களிடமிருந்து முதலில் தப்ப முடியுமா, அதனால கோரஸை நிறுத்திட்டு போய் பட்டியில் பாதுகாப்பாக உரங்குங்கள் என்றதாம்.
ம்... அதுதான் ஆடுகளுக்கு நல்லது....!
கோரஸ் பாடும் ஆடுகளுக்கும் காவலிருக்கும் நாய்களுக்கும் அந்த சிங்க கூட்டத்தோட பசியே வேறன்னு புரியல, ஆனால் பட்டியில் அடைத்தவனுக்கு தெரியும், பட்டி உடையும் போது அந்த சிங்க கூட்டம் யார் என்பது உலகிற்கு தெரியும்....☯️
ப்பா எனக்கு தெரியும்....!
நீ என் சிங்க குட்டி தங்கோ.....
☯️ -ஆதி
#சிங்கன் #சிங்கன்_மகன்
Comments
Post a Comment