குடும்பனின் தமிழ் மரபில்
Rare Book: தெலுங்கை வளர்த்த தமிழகமும் மராத்தியரும் தெலுங்கு மொழியை வளர்த்த பெருமை தெலுங்குச் சோழர்களைச் சாரும் என்றால், தெலுங்கு இலக்கியங்களைச் செழுமைப்படுத்திய பெருமை தமிழகத்தையே சாரும். இரண்டாம் படத்தில், தெலுங்கு மொழி அதிக அளவில் வளர்க்கப்பட்ட பகுதியாகத் தமிழகம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் தெலுங்கு மொழி செழித்தோங்க நாயக்கர்கள் மட்டுமன்றி, மராத்தியர்களுக்கும் பெரும் பங்குண்டு என்பது வியப்பளிக்கும் வரலாற்று உண்மையாகும். பல சுவாரசியமான தகவல்கள் பற்றி இந்நூல் விரிவாக கூறுகின்றது. ஒரு மொழியின் இலக்கியம் அதன் சொந்த மண்ணைத் தாண்டி, வேறொரு பண்பாட்டு நிலத்தில் வேரூன்றி, கிளைபரப்பிச் செழித்து வளர்வது வரலாற்றில் மிக அரிதான ஒரு நிகழ்வாகும். தெலுங்கு இலக்கிய வரலாற்றில் கி.பி. 1600 முதல் 1800 வரையிலான காலகட்டம் "தென்னகப் பள்ளியின் காலம்" (Age of Southern School - தக்ஷிணாந்திர வாங்மயம்) என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது. தென்னகப் பள்ளியின் முக்கியத்துவத்தை முழுமையாக மதிப்பிட, தெலுங்கு இலக்கியத்தின் தொடக்க காலத்திலிருந்து அதன் பல்வேறு காலகட்டங்களின் பரிணாம வளர்ச்சியை நாம் புரிந...