வன்னியருக்கு 10.5% ஒரு பார்வை

 வன்னியருக்கு 10.5% #இடஒதுக்கீடு கொடுப்பதால் மிகவும் பிற்பட்ட ( MBC) மற்றும் சீர்மரபினரில் ( DNC) உள்ள நூறுக்கும் மேற்பட்ட சாதிகள் பாதிக்கப்படுவார்கள்-

 என்கிற ஒரு தவறான பரப்புரை செய்யப்படுகிறது!


இவர்கள் குறிப்பிடும் MBC + DNC பட்டியலில் ஒரு குறிப்பிட்ட சாதியின் பல பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன! அவை:-


1.கொரவா பிரிவுகள்                 - 23


2.போய ஒட்டர் பிரிவுகள்-         - 10


3.முக்குல பிரிவுகள்.                     -8


4.செட்டி பிரிவுகள் -.                       -5


5.வேட்டுவகவுண்டர் பிரிவு.        -4


6.அம்பலக்காரர் பிரிவுகள்.         -3


7.வலையர் பிரிவுகள்.                   -3


8.மீனவர் பிரிவுகள்.                       -3


9.கொரச்சா பிரிவுகள்.                  -3


10.டொம்மாரா பிரிவுகள்.             -2


11.சாம்பவனோடை பிரிவுகள்   - 2


12.சோகி பிரிவுகள்.                        -2


13.தொட்டிய நாயக்க பிரிவுகள்  -2


14.மொன்ட்கொல்லா பிரிவுகள் .-2


15.முடகம்பட்டி பிரிவுகள்.              -2


16.வண்ணார் பிரிவுகள்.               -2


17.வேட்டைக்காரர் பிரிவுகள்.      -2


18.தொரையர் பிரிவுகள்.               -2


19.வன்னியர் பிரிவுகள்.                 -2


MBC யில் தனிசாதிகள் .             -23

DNC யில் தனிசாதிகள்.              -10


எனவே தனித்த சாதிகளாக ( 19+23+10) - 52 சாதிகளை மட்டும் தான் கணக்கில் கொள்ள வேண்டும்!


இவற்றில் 


போயர் ஒட்டர்

மறவர் கள்ளர்

#வலையர் தாசரி சோகி  செட்டி 

போன்ற சில சாதிகள் பிற்பட்ட இட ஒதுக்கீட்டின் ( BC) கீழும் வகைப்படுத்தப் பட்டுள்ளனர்!


இரவல்லர் பிரிவு பழங்குடியிலும் (ST)  மீனவர் வண்ணார் பிரிவு பட்டியல் சாதியிலும் (SC) உள்ளன!


வன்னியர் உள் இட ஒதுக்கீடு தவறா?


1891 , 1901, 1911,1921 மற்றும் 1931 மக்கள் தொகை கணக்குகளின் அடிப்படையில் தனித்த சாதியாக 

வன்னியர் மக்கள் தொகையே #முதலிடம்!


இரண்டாவது வெள்ளாளர்


 மூன்றாவது #பரையர்! 


நான்காவது பள்ளர்!


முக்குலத்தோர் என்கிற அடிப்படையில் சேர்த்து கணக்கிட்டால் மட்டுமே நான்காவது இடம்!


#அகமுடையார் முழுமையாக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில்(BC) இருப்பதாலும் , கள்ளர் மற்றும் #மறவர் பிரிவுகள் சில மாவட்டங்களில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் ( BC) இருப்பதாலும்


#சீர்மரபினரில் உள்ள முக்குலத்தோரின் மக்கள் தொகையானது நான்கில் ஒரு பங்கு அல்லது அதிக பட்சம் மூன்றில் ஒரு பங்கு தான் இருக்க முடியும்?


முக்குலத்தோரை தவிர்த்து MBC+ DNC பெரிய மக்கள் தொகை கொண்ட சாதிகள்? வலையர் செட்டி வண்ணார் போன்ற சாதிகளை சொல்லலாம்!


 ஆனால் இது போன்ற சாதிகள் பிற்படுத்தப்பட்டோரிலும் ( BC) பட்டியல் சாதியிலும் (SC) உள்ளதால் அவர்களின் மக்கள் தொகையும் முக்குலத்தோருக்கு குறிப்பிட்டது போலதான் இருக்கும்?


மற்றபடி MBC + DNC பட்டியலில் தமிழ்ச் சாதி களை விட #வடுகசாதிகளே அதிகம்! ஆனால் அவர்களும் குறைவான மக்கள் தொகையை கொண்டவர்களே!


எப்படி பார்த்தாலும் MBC+ DNC சாதிப்பட்டியலில் #வன்னியருக்கு எதிராக மற்ற 50 சாதிகள் என்கிற அடிப்படையில் பார்த்தாலும் வன்னியரின் மக்கள் தொகையில் மற்ற சாதிகள் கூட்டு மக்கள் தொகை மூன்றில் ஒரு பங்கு கூட இருக்காது?


மனசாட்சியுடன் அணுகினோம் என்றால் 10.5% தனி இட ஒதுக்கீடு என்பது வன்னியருக்கு #குறைவுதான்!


இதனை MBC/ DNC பிரிவில் உள்ள

சீர்மரபினர் தமிழ்ச் சாதிகள் உணர்ந்து நூறுக்கும் மேற்பட்ட சாதிகள் பாதிக்கப் படுகிறார்கள் என்று தவறாகப் பரப்பாமல்


MBC இட ஒதுக்கீடு வன்னியர் போராட்டம் மூலம் சாத்தியமானது என்று நன்றியுணர்வுடன் தெளிவு பெற்று வன்னியர்களின் உரிமையான 10.5% தனி இட ஒதுக்கீட்டை ஆதரிக்க #மனசாட்சியுடன் முன்வர வேண்டும்!


( குறிப்பாக தமிழ்த்தேசியம் பேசுவோர்)


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போட்ட பதிவு. சகோதரர் ஒருவருக்காக மீள்பதிவேற்றம்.

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்