குடும்பனின் சங்க இலக்கியங்கள்
[29/10, 17:00] இன்று நம்மிடையே வழக்கத்தில் உள்ள பொய்யான கட்டமைக்கப்பட்ட வரலாறு சங்ககாலம் என்பது கிமு 300- கிபி- 300 என்று வரையறுத்துக் கூறுவது , தமிழர்களின் வரலாறை அசோகனின் வரலாறுக்குப் பின்பாக வைக்கும் கெடுநோக்கம் கொண்டது. கீழடி நாகரிகம் கிமு 800 என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சிவகளை நெல் உமியின் காலம் கிமு 1300 என்கிறது. ஆதிச்ச நல்லூர் அகழாய்வு கிமு 1400 -1600 காலக்கட்டத்தைக் குறிக்கிறது. சிவகளை களைக்கொத்தி காலம் கிமு 3250 எனவருகிறது. காவிரி பூம்பட்டினம் காலம் கிமு 15200 என்று தொன்மையைக் கைகாட்டுகிறது. தொல்காப்பியம் எழுதப்பட்டது கிமு-1500- 2000 என அறிஞர்கள் வரையறை செய்துள்ளனர். தொல்கபிலரின் காலம் கிமு 1000 எனவும் வரலாறு சொல்கிறது. எனவே கிமு 300 என்பதை சங்ககாலம் முடிவுற்ற காலம் எனலாம். வைதீகம் , பௌத்தம், ஜைனம் , காபாலிகம் போன்ற மதங்கள் தமிழகம் நுழைந்தவுடன் தமிழரின் சங்ககால வாழ்வியல் முறை முடிவுக்கு வந்தது. சமூகம் சீர்குலைந்தது. இக்காலத்தில் தான் சிலப்பதிகாரமும், திருக்குறளும் தோன்றின. சங்க இலக்கியங்களில் ஒரு க...