குடும்பனின் புரிதலுக்கு

 பதிவு துறை அமைப்பு

 (Structure of Registration Department, Tamil Nadu)


நிலை அதிகாரியின் பெயர் பணி / பொறுப்பு


1️⃣ Inspector General of Registration (IGR) – பதிவு துறை தலைவர் முழு மாநில அளவில் துறை நிர்வாகம், வழிகாட்டல், கட்டுப்பாடு

2️⃣ District Registrar (Administration) மாவட்ட அளவில் பதிவுகள் கண்காணிப்பு, வழிகாட்டல், புகார் விசாரணை

3️⃣ District Registrar (Audit / Enquiry) சீராய்வு, விசாரணை, பதிவு பிழைகள் ஆய்வு

4️⃣ Sub Registrar நேரடி ஆவண பதிவு, சான்றிதழ் வழங்கல், பத்திர சரிபார்ப்பு


Inspector General of Registration (IGR) – அதிகாரங்கள்


1. மொத்த நிர்வாக கட்டுப்பாடு (Administrative Control)


மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து Sub-Registrar Offices மற்றும் District Registrar Offices மீது மேலாண்மை.


பணியாளர் நியமனம், இடமாற்றம், ஒழுங்கு நடவடிக்கை ஆகியவற்றை பரிந்துரை / நிறைவேற்றுதல்.


2. சட்ட நடைமுறை வழிகாட்டல் (Legal & Procedural Guidance)


Registration Act, 1908, Stamp Act, மற்றும் Rules பற்றிய விளக்கம் / நடைமுறை வழிகாட்டுதல்.


சந்தேகமான ஆவணங்கள், சட்ட பிழைகள் போன்றவற்றில் இறுதி தீர்மான அதிகாரம்.


 3. அனுமதி மற்றும் ரத்து அதிகாரம் (Approval & Cancellation Powers)


மாவட்ட பதிவாளர் அனுப்பும் சட்டப்பூர்வ ஆவணங்கள் / பதிவு ரத்து பரிந்துரைகள் குறித்து தீர்மானம் எடுக்கலாம்.


சிலசமயம் “Rectification”, “Cancellation”, “Note of Rectification” போன்றவற்றுக்கு இறுதி அனுமதி.


 4. சீராய்வு அதிகாரம் (Supervisory & Inspection Power)


பதிவு அலுவலகங்களில் ஆய்வு நடத்தி பிழைகள் இருப்பின் நடவடிக்கை எடுப்பது.


Audit / Enquiry Reports மதிப்பாய்வு செய்து, தேவையான உத்தரவு வழங்குதல்.


5. ஆராய்ச்சி மற்றும் கொள்கை முடிவுகள் (Policy & Reform Decisions)


ஆன்லைன் பதிவு (TNREGINET), e-Stamp, Document Verification System போன்ற புதிய சேவைகள் அறிமுகப்படுத்துவது.


அரசுக்கு பரிந்துரை செய்து, புதிய சட்ட / நடைமுறை மாற்றங்கள் அமல்படுத்துதல்.


 6. முறையீடுகள் / மனுக்கள் தீர்மானம் (Appeal & Review Powers)


Sub Registrar / District Registrar எடுத்த முடிவுகளுக்கு எதிராக வந்த மேல் முறையீடுகள் (Appeals)

குறித்து இறுதி தீர்மானம் வழங்கலாம்.


District Registrar (Administration) – மாவட்ட பதிவு அலுவலர் (நிர்வாகம்)


மாவட்ட அளவில் பதிவு துறையை நிர்வகிக்கும் முக்கிய அதிகாரி.

அவர் Inspector General of Registration (IGR) அவர்களுக்குக் கீழ் செயல்படுகிறார்.


 முக்கிய அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள்:


1. நிர்வாகக் கட்டுப்பாடு (Administrative Control)

மாவட்டத்தின் கீழ் உள்ள அனைத்து Sub-Registrar Offices மீது மேலாண்மை.

பணியாளர் ஒழுங்கு, பணி ஒதுக்கீடு, விடுப்பு அனுமதி போன்றவை.


2. ஆவண சீராய்வு (Scrutiny of Documents)

Sub-Registrar செய்த பதிவுகளில் சந்தேகங்கள் / பிழைகள் இருப்பின் ஆய்வு.

தவறான பதிவு (fraudulent registration) குறித்த விசாரணை.


3. முறையீடு (Appeal Authority)

Sub-Registrar மறுத்த (Refused) பதிவு தொடர்பான முறையீடுகளை (Appeal) பரிசீலித்து தீர்மானம் வழங்கலாம்.


Registration Act, Section 72 – இன் கீழ் அதிகாரம்.


4. Rectification / Cancellation பரிந்துரை

முக்கிய பிழைகள் இருந்தால், “Rectification Note” அல்லது “Cancellation Proposal” IGR-க்கு அனுப்ப முடியும்.


5. Audit / Inspection

Sub-Registrar அலுவலகங்களை ஆய்வு செய்து, சட்ட பிழைகள் / வரி பிழைகள் இருப்பதைச் சரி செய்வது.


6. சான்றிதழ் மற்றும் ரிப்போர்ட் அனுப்பல்

Collector / IGR அலுவலகத்திற்கு மாத / காலாண்டு ரிப்போர்ட் அனுப்புதல்.


Sub Registrar – துணை பதிவு அலுவலர்


இவர் தான் நேரடியாக பத்திர பதிவு செய்யும் அதிகாரி. அவர் பதிவு சட்டம், 1908 (Registration Act, 1908) கீழ் அதிகாரம் பெற்றவர்.


Sub Registrar – அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள்:


1. ஆவண பதிவு (Document Registration)


விற்பனை பத்திரம் (Sale Deed)


தானம் (Gift Deed)


அடமானம் (Mortgage Deed)


விடுதலை ஆவணம் (Release Deed)


பவர்ஆவணம் (Power of Attorney)


உயில் (Will) போன்ற ஆவணங்களை பதிவு செய்ய அனுமதி வழங்குகிறார்.


2. ஆவண சரிபார்ப்பு (Verification of Document)


ஆவணத்தின் சட்டபூர்வம், கையொப்பம், சாட்சிகள், முத்திரை, மதிப்பு (stamp duty) அனைத்தும் சரியாக உள்ளதா எனச் சரிபார்ப்பார்.


3. பதிவு மறுப்பு (Refusal to Register)


சட்டத்திற்கு முரணான, தடை செய்யப்பட்ட அல்லது போலியான ஆவணங்கள் வந்தால் பதிவு மறுக்கும் அதிகாரம் உண்டு.


(Registration Act, Section 71)


4. Encumbrance Certificate & Certified Copy வழங்கல்


EC, Certified Copy போன்றவை வழங்குவது இவரது பொறுப்பு.


5. சட்ட நடைமுறை பராமரிப்பு


Fingerprint, Photograph, Thumb Impression போன்றவை சீராக சேமிக்கப்படுவது உறுதி செய்வார்.


6. வருவாய் சேகரிப்பு


Stamp Duty, Registration Fee, Document Fee ஆகியவற்றை அரசு நிதிக்கே செலுத்துதல்.


மா பேச்சி முத்து BA LLB 

பத்திர பதிவு ஆலோசனை  

சென்னை

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்