Posts

Showing posts from September, 2024

குடும்பனின் பார்வையில்

 ✒️வைக்கோல் படப்பும், பட்டறையும் ... இப்போது மாதிரி முன்பெல்லாம் மாப்பிள்ளை தேடுபவர்கள் மாப்பிள்ளை என்ன வேலை செய்கிறார் என்று கேட்பதில்லை.. மாறாக மாப்பிள்ளை வீட்டாருக்கு எவ்வளவு நிலபுலன்கள் இருக்கிறது என்பதைத்தான் விசாரித்தார்கள்.. அதன் அளவுகோளாக ஒருவரின் வைக்கோல் படப்பையும், நெல் பட்டறையையும் பார்த்தார்கள்.. அவங்க வீட்டு பட்டறைய அண்ணாந்து பாத்தா உருமா கீழ விழுந்துடும் என்பார்கள்.. தலையில் துண்டு கட்டுதல் உருமா என்றழைக்கப்பட்டது. தலைப்பாகை என்பதெல்லாம் பின்னால் வந்த வழக்கு... தேவேந்திரர்களின் வாழ்வியலில் உருமா மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒருவர் இறந்தால் அவருக்கு எண்ணெய் முழுக்குச் சடங்கன்று குடும்பத்தில் மூத்த மகனுக்கு அல்லது அனைத்து ஆண் பிள்ளைகளுக்கும் உருமாக் கட்டும் வழக்கம் இன்று தொடர்கிறது. அது ஒரு சமூகப் பண்பாடு.  அடக்கம் செய்ய பிணத்தைக் குளிப்பாட்டி புதுத் துணியால் சுற்றப்படும்..  அந்தத் துணி தோம்பு  எனப்படுகிறது.  இறந்தவர்களைப் பிணம் என்று அழைக்கும் வழக்கம் எம்மில் இல்லை. இறந்த உடலைச் சவம் என்றே அழைத்தனர். தோம்புத் துணி சிவப்பு நிறத்தில் தான் இருக்கும...

குடும்பனின் வாசிப்பில்

 1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே..  2. தேவைக்கு செலவிடு.  3. அனுபவிக்க தகுந்தன அனுபவி.  4. இயன்ற வரை பிறருக்கு உதவி செய். 5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி. 6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.  7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.  8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.  9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.  10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு.  11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.  12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு.  13. அவ்வப்போது பரிசுகள் அளி.  14. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.  15. பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்கஇயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்!  16. அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்.  17. உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்க...

குடும்பனின் படிப்பில்

 பெற்றோர்கள், பெற்றோர்களாகவே இருங்கள், ஒரு போதும்  நண்பராகாதீர்கள்...! பணி முடிந்து வெகு தொலைவு பயணம் செய்து களைப்புடன் திரும்பிய நான் என் மனைவியை கடும் காய்ச்சலுடன் படுக்கையில் படுத்திருக்கக் கண்டேன். எனக்காக அந்த ஜுரத்திலும் சமையல் செய்து உணவை ட்ரேயில் வைத்து மூடி வைத்திருந்தாள். நான் வழக்கமாக உண்ணும் எல்லாவற்றையும் சமைத்து வைத்திருந்தாள். அவளுக்கு தான் என் மேல் எவ்வளவு கரிசனம். உடல் நலம் சரியில்லாத நேரத்தில் கூட எனக்காக சமைத்து வைத்திருக்கிறாளே. சாப்பிட அமர்ந்த பின் தான் ஏதோ குறைவதை உணர்ந்தேன். டிவி பார்த்துக் கொண்டிருந்த என் வளர்ந்த மகளிடம், செல்லம் என் மாத்திரையையும் தண்ணீரும் எடுத்துக் கொண்டு வா என்று கூறினேன். அவளை நான் தொந்தரவு செய்ததை விரும்பாமல் கண்ணை உருட்டி அவள் அதிருப்தியைத் தெரிவித்து விட்டு நான் கேட்டதைக் கொண்டு வந்து கொடுத்தாள். ஒரு நிமிடம் கழித்து சாம்பாரில் உப்பு குறைவாக இருந்ததால் அவளை எடுத்துக் கொண்டு வரப் பணித்தேன். அவள் சை என்று கூறிக் கொண்டே காலை அழுத்தமாக வைத்து நடந்து போய்க் கொண்டு வந்து கொடுத்தாள். அவ்வாறு அவள் செய்தது நிச்சயம் நான் அவளைத் தொந்தரவு செ...

குடும்பனின் பார்வையில்

 யாரும் உங்கள் எதிரி அல்ல உங்களை எரிச்சலூட்டும் எவரும் பொறுமையையும் அமைதியையும் உங்களுக்குக் கற்பிக்கிறார்கள். உங்களை கைவிடும் எவரும் --உங்கள் சொந்தக் காலில் எப்படி நிற்பது என்று உங்களுக்குக் கற்பிக்கிறார்கள். உங்களை புண்படுத்தும் எவரும் --மன்னிப்பு மற்றும் இரக்கத்தை உங்களுக்கு கற்பிக்கிறார்கள். நீங்கள் வெறுக்கும் எதையும் --உங்களுக்குக் கற்றுக்கொடுக்கிறது, நிபந்தனையற்ற அன்பு. நீங்கள் அஞ்சும் எதுவும் --உங்கள் அச்சங்களை வெல்லும் தைரியத்தை உங்களுக்குக் கற்பிக்கிறது. உங்களால் கட்டுப்படுத்த முடியாத எதுவும் --விடு என்று உங்களுக்குக் கற்பிக்கிறது. மனிதனிடமிருந்து நீங்கள் பெறும் எந்த "இல்லை" --சுதந்திரமாக இருக்க கற்றுக்கொடுக்கிறது. நீங்கள் எதிர்கொள்ளும் எந்த பிரச்சனையும் --பிரச்சினைகளுக்கான தீர்வை எவ்வாறு பெறுவது என்பதை உங்களுக்கு கற்பிக்கிறது. மக்களிடமிருந்து நீங்கள் பெறும் எந்தத் தாக்குதலும் - சிறந்த தற்காப்பு வடிவத்தை உங்களுக்குக் கற்பிக்கிறது. உங்களை இழிவாகப் பார்க்கும் எவரும் --படைப்பாளரை நோக்கிப் பார்க்கக் கற்றுக்கொடுக்கிறார்கள்.   வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நீங்கள் எதிர...

குடும்பனின் பார்வையில்

 ✒️..ம்ம்பாஆ... ...ம்ம்பாஆ.... பாறைக் கற்களின் உச்சியில் நின்று கண்ணுக்கெட்டிய தூரம் வரை விழியைப் பாய்ச்சி அடிவயிற்றை இறுக்கிப் பிடித்து தொண்டை கிழியக் கத்தும் சிவனணைந்தான்.. இப்படித்தான் தொடங்குகிறது ..  "வாழை" திரைப்படம். அது திரைப்படம் அல்ல.  வாழை தார் சுமக்கும் தொழிலாளிகளின் துயரம் நிறைந்த வாழ்க்கை. உலகத் திரைப்பட வரலாற்றையே ஒரு கணம் மறுபார்வைக்கு ஆட்படுத்தியிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். எனக்கு ரொம்பப் பிடித்தது காட்சிகளை படம்பிடித்த வினோதம் தான்.. கதை நிகழ்ந்த காலத்தில் எதெல்லாம் எப்படி இருந்ததோ அதே நிலையில் படமாக்கியிருக்கிறார். ஆசிரியை பயன்படுத்தும்  ஊதா நிற ரெனால்டு பேனா... அந்தக் காலத்தில் அதுதான் பெருவழக்கில் இருந்தது.. அப்போது புழக்கத்திலிருந்து அதே ரூபாய் நோட்டுகள் ... மாடு கட்டும் போது போது போடும் உருவாஞ் சுருக்கு... எல்லாவற்றையும் விட ரைஸ்மில்லில் அரசி அரைத்து சாக்கின் அடியில் அரிசியை வைத்துக் கட்டி பிறகு மிஞ்சும் மேல் பகுதியில் தவிட்டை கொட்டிக் கட்டும் விதம் அழகாக தத்ரூபமாகப் படமாக்கப்பட்டிருந்தது. சிவனணைந்தானின் நடிப்பை இனி எவராலும் ஈடு செய்ய ...

குடும்பனின் பார்வையில்

Image
 ✒️செப்-11. ஒடுக்குதலை நொறுக்கிய நாள்.... தென் தமிழகத்தில் அடக்குமுறைக்கு எதிராக தியாகி இமானுவேல் சேகரனார் சிந்திய இரத்தம் இன்று ஒட்டுமொத்த சமூகத்தையே உயிர்ப்புடன் வீறு கொள்ளச் செய்துள்ளது.. இமானுவேல் சேகரனார் சராசரி மனிதனைப் போல் சகமனிதனுக்கு நேர்ந்த அவமானங்களைக் கண்டும் காணாமல் கடந்து போயிருந்தால்  இன்றைய நினைவேந்தல் இவ்வளவு சிறப்பைப் பெற்றிருக்காது. உலக மானுட வரலாற்றில் எல்லா வரலாற்றுப் பதிவுகளையும் விட இமானுவேல் சேகரனாரின் அழித்தொழிப்பு வரலாறுதான் அதிக மக்களால் பேசப்படுகிறது.. அறுபத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு அணைந்த நெருப்பு திரும்பத் தீயாய் மலர்ந்திருக்கிறது.. தீ மலருமா⁉️ ஆம் மலரும்.. மானுட அறத்தைக் கொண்டாடக் கொண்டாட தீ மலரும்.. அது ஒரு மகத்தான மாற்றம்... காணாமல் விலகி இருந்தவர்கள், கலந்து கொள்ளாமல் விலகி நின்றவர்கள் இப்போது அஞ்சலியில் பங்கேற்கிறார்கள் என்றால் வரலாற்றை வாசித்துத் தெளிந்துள்ளார்கள் என்று பொருள்.. இது ஒரு பாடத்தை நமக்குச் சொல்கிறது. சமூகப் புரட்சியாளர்களைக் கொண்டாடியபடியே இருந்தால்  எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள் என்பது தான் அது. ஆண்டுதோறும் கொண்டாடிவிட்ட...

குடும்பனின் பார்வையில்

Image
 மாங்குளம் எனும் அரிட்டாபட்டி கல்வெட்டு குறித்து திரு. ஐராவதம் மகாதேவன்   “ காணிய நாந்தாஸிரி யகஅன் தமாம் இதா நெடிஞ்சாழியான் ஸாலாகான் இளாஞ்சாடிகான் தாந்தைய் சாடிகான் செயியா பாளிய்”  இவ்வாறு படிக்கிறார்.  இதன் பொருள் "கணியன் நந்தாசிரியன் எனும்  துறவிக்குத் தந்த கொடை" பற்றிய செய்தி என்றே பலரும் இதுவரை கருதி வந்தனர் ஆனால் இதன் உண்மையான பொருள்..  தமிழகத்தில் சமணம் , பெளத்தம் போன்றவை பரவுவதற்கு முன்பே ஆசிவகம்  நிலைபெற்று இருந்தது . அதன் பின்னான காலத்தில் இச் சமயங்களுக்கு இடையே நடந்த பூசல்களில் அந்த சமயங்களில்  ஒன்றாக ஆசீவகமும்  இருந்தது என்பதனை பற்றிய குறிப்பு மணிமேகலையில் கூட காணப்படுகிறது.  அத்தகைய நிலையில் இந்த ஆசீவகம் பற்றிய முழுமையான ஆய்வை மேற்கொண்டவர்களில் பிரதான இடத்தை வகித்த ஆசுத்திரேலியரான ஏ.எல். பாசம்  "ஆசீவகம் - அழிந்து போன ஒரு இந்திய சமயம்’ எனத் தம் ஆய்வு நூலுக்குப் பெயரிட்டார்.  அவர் தனது ஆய்வு நூலில் ஆசீவகத்தின் வேர்கள் தமிழகத்திலேயே நிலைகொண்டுள்ளன என்ற உண்மையையும் வெளிப்படுத்தினார்.இது குறித்த தகவல்களை பலரும் பாளி...

குடும்பனின் வலியில்

Image
 ஆசிரியரின் அறைக்கும் அடி நீளமுள்ள பிரம்புக்கும் ஆளாகாத ஆளுமைகள் உண்டோ அன்பையும் அதட்டலையும்  அளவில்லாமல் தந்து வீட்டுப்பாடம் எழுதாத வீங்கிய கைகளுக்கு மஞ்சள் பத்து போட்டாலும் "அடிங்க சாரு"னு சொன்ன அப்பனுங்க  இருந்த காலம் - வரமா இருந்தது வாலிப வயசை கடக்க அறிவியலும் (அ)நாகரீகமும் வளர வளர...... முணுக்குன்னா  ஆசிரியரையே அடிக்கப்போகும்  இந்தக்காலம்...... நமக்கு ஏண்டா வம்பு? வாங்குற சம்பளத்துக்கு போயிட்டு வந்தமா !!!!!! எக்கேடு கெட்டா நமக்கென்ன !!????  என ஒதுங்கியே போற கலிகாலம் அஞ்சு பைசாவுக்கு  பிரயோஜனம் இல்லாத அசோக்நகர் அரசு மேல்நிலை பள்ளி விவகாரம்  எவனோ சங்கெடுத்து  ஊதிட்டான்... நாமே ஊதினா என்னனு ஊதிய  அரசியல் ஊறுகாய் ஆன தலைமை ஆசிரியர் பஜனை செய்த தம்பி "பாவம் செய்தால் மறுபிறவி  துன்பம் தரும்" என சொல்லிய விதம் மாற்றுத்திறனாளி ஆசிரியரின் மனதை வாட்ட  எழுந்த சிறு கணைகள்  காட்சியாக வலைதளத்தில் வலம்வர  வழக்கம்போல இந்து, சந்து , பொந்து என அதற்கு தலைவாரி  சீவி சிங்காரித்து  பொட்டு வைத்து சும்மா கிடந்த வாய்க்கு  அவல...

குடும்பனின் பார்வையில்

 திருநெல்வேலி தினம் என கொண்டாட படுவது குறித்து  அந்த நேரத்தில் ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தில்  தூத்துக்குடி இணைக்கப்படவில்லை காரணம் என்னவென்றால் 12ஆம் நூற்றாண்டிலிருந்தே தூத்துக்குடி பகுதிகள் நீண்ட கடற்கரை வணிகப்பகுதிகளாக கொற்கை பட்டினம் , குலசேகரப்பட்டினம் , காயல்பட்டினம், வீரபாண்டியபட்டினம், புன்னக்காயல்,  பழைய காயல் ஆகிய துறைமுகப் பகுதிகள் வணிக கேந்திரமாக விளங்கி உள்ளன.  அதன் காரணமாக சீனர்கள், அரேபியர்கள், பாரசீகத்தினர்கள் இந்தியர்களுக்கிடையே பண்டமாற்று வணிகம் நடைபெற்று ஏற்றுமதியும் இறக்குமதியும் செழிப்பாக இருந்தது  பின்னர் ஐரோப்பியர் காலுன்றவும் முதலில்15 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் ஆளுகைக்கு வந்தது , பின்னர் டச்சுக்காரர்களும் , பிரெஞ்சுக்காரர்களும் தூத்துக்குடி பகுதியை கைப்பற்றினார்கள்  அப்போதெல்லாம் தூத்துக்குடியும்,இலங்கையும் ஒரே ஆளுகைக்கு கீழே இருந்தது ! போர்த்துகீசியர்களின் ஆட்சியில் கீழமை நீதிமன்றங்கள் தூத்துக்குடியிலும் குற்றவாளிகளுக்கு சிறைச்சாலை கோவாவிலும் ,மேல் முறையீட்டு நீதிமன்றங்கள் கோவாவிலும் தண்டனை விதிக்கப்பட்ட விசாரணை ...