குடும்பனின் பார்வையில்
"பூமியின் கற்பகதரு" எவ்வளவு அட்டூழியம் அராஜகம் இருந்தாலும் வெள்ளையர்களிடம் ஒரு நேர்மை இருந்தது. ஆனால் இன்றைய நம் அரசியல்வாதிகளிடம் அந்த நேர்மை இல்லை. வெள்ளையர்கள் ஆண்ட காலம். திருநெல்வேலிக்கு அருகே ரயில்பாதை அமைத்துக்கொண்டிருந்தனர். அதற்காக நிறைய பனைமரங்களை வெட்டவேண்டிய சூழல். அங்கு பனையை நம்பி வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு மிகப்பெரிய வருத்தம். ஆங்கிலேயர்களிடம் சென்று பனையை வெட்டுவதை தடுக்கும் தைரியமில்லை. அதே நேரத்தில் பனைமரங்களை இழக்க மனமும் இல்லை. உச்சிவெயல் மண்டையை பிளக்க பசியோடு ஆங்கிலேய அதிகாரிகள் இருந்த நேரம்பார்த்து அங்கிருந்த மக்கள் மண்பானையில்கொண்டு வந்த ஒரு உணவுப்பொருளை அவர்களிடம் வழங்க ருசித்து சாப்பிட்டு வாழ்த்திச் சென்றனர். மறுநாள் ரயில் பாதை அமைக்கும் இடத்துக்கு வந்த வெள்ளைய அதிகாரிகள், "நேற்று சாப்பிட ஏதோ கொடுத்தீர்களே! என்ன அது? மிகவும் ருசியாக இருந்தது. நீண்ட நேரம் பசியெடுக்கவில்லை. மிகவும் இதமான உணவதை எப்படி தயாரித்தீர்கள்". என கேட்க, அந்த மக்கள் கைகளைகாட்டிய இடம் பனைமர உச்சி. அவர்கள் நம்பமறுக்க, பனையில் இருந்து இளம்பனைநுங்கோடு பதநீர் கலந்து,...