குடும்பனின் பார்வையில்
மேற்கண்ட இரண்டு காட்சிகளும் கூர்ந்து கவனிக்கத் தக்கன..
ஒன்று நேரடியாக நம்மைப் பற்றிச் சிந்திக்க வைக்கின்றன.
மற்றொன்று தலித் சமூகத்தின் மீது ஏவப்படும் உளவியல் தாக்குதல் பற்றியன.
பட்டியல் வெளியேற்றம் கோரும் தேவேந்திர குல . வேளாளர் சமூகம் இரண்டு தாக்குதல்களை உடைத்துவிட்டு அதிகார அரசியலை நோக்கிப் பயணிக்கிறது.
வெறும் இட ஒதுக்கீடுகளும், அரசு வேலை வாய்ப்புகளும் மட்டுமே ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உபத்திரத்தைத் துடைத்தெறிய முடியாது.
சமூகத்தில் புரையோடிப் போயுள்ள நுட்பமான சங்கடங்களைக் களைய பட்டியல் வெளியேற்றும் மட்டுமே தீர்வாக அமையும் என நம்புகிறோம்.
இந்த நம்பிக்கையை சிலர் நம்பாமல் இருக்கலாம்.
அரசு உத்தியோகத்தை விடவும் அதிகாரம் மிக்க பதவிகளால் மட்டுமே விடுதலையைப் பெற முடியும்..
தமிழகத்தில் மட்டும்தான் தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாதவர்கள் அதிகாரப் பதவிக்கு வர முடிகிறது.
இது ஒரு விதத்தில் பூர்வீகக் குடிகளை முடக்கும் செயலாகவே கருத முடிகிறது.
'வீரம்மாள், செபஸ்தியம்மாள்' போன்ற பெயர்களைச் சூட்டிய ஒடுக்கப்பட்ட மக்கள் வீராயிகளாகவும், செவத்திகளாகவும்' தான் அடையாளம் காணப்படுகிறார்கள்..
இன்னொரு புறம் அண்ணாமலைச் செட்டியார், ரங்கசாமிக் கவுண்டர்
போன்ற சாதியப் பின்னொட்டுடன் அழைக்கப்படுகிற வழக்கம் தொடர்கிறது.
அருளானந்துக் குடும்பர்கள் ..
இருளப்பக்குடும்பர்கள்
மட்டும் அடையாளத்தை இழந்து வருகின்றனர்.
முதலில் உளவியல் கட்டமைப்புகள் உடைக்கப்பட வேண்டும்.
வீரம் செரிந்த அறிவார்த்தமான நல்ல நம்பிக்கை தருகிற தமிழ்ப் பெயர்களைச் சூட்டுவோம்..
ஆனால்
"எல்லாம் தானாய் மாறும் என்பதெல்லாம் பழைய பொய்யடா.." என்கிற பட்டுக்கோட்டையாரின் வரிகளை கூர்ந்து நோக்குவோம்..
©️✒️மடைக் குடும்பர்.
27.04.2024.
Comments
Post a Comment