குடும்பனின் பார்வையில்
வெள்ளாவி மனிதர்கள். ஆத்தோ சோறு போடும்... கோமாத்தா சோறு போடும் ... சன்னமான குரலில் வேலம்மா ..எங்க வீட்டுக்கு முன்னே நின்று கக்கத்தில் ஒரு ஈய. பானையை வைத்து இப்படி குரல் கொடுக்கும் ..பகல் முழுக்க ஊர்ல உள்ள அழுக்கு துணிமணிகளைத் வெளுத்துட்டு வந்து 10...20 வீட்டுல போய் சோறு வாங்கிட்டு வரும்..ரெண்டு சட்டி பானை வச்சிருக்கும்..சுடுசோறு பழையசோறு எது குடுத்தாலும் வாங்கிட்டு போவும்..அவங்க குடும்பத்துல ஆட்கள் நெறைய.. .எங்க வீட்ல ராத்திரி மட்டும் சுடுசோறு இருக்கும்..மத்தபடி காலைல பழைய சோறு ..மத்தியானம் கேப்ப கூழ் அல்லது கம்மங்கஞ்சி இருக்கும்.. கடைசி வெள்ளிக்கிழமைகள்ல தோசைக்கு போடும் எங்கம்மா ..நெறைய வீடுகள்ல போடுவாங்க ..அன்னைக்கு சாணி வச்சி வீடு மொழுகும் எங்கம்மா ..தோச சுட்டாலும் இட்லி அவிச்சாலும்...நாங்க சாப்பிடுறத வேலம்மாக்கு கொடுப்போம்..சில நேரம் சங்கர்ம்மா பெருமாளம்மா வருவாங்க. எங்கம்மா மறுநா காலை மதியத்துக்கு கூழ் காய்ச்சுற வேலையில மும்முரமா இருந்துட்டு "தொர நாலாப்ப சுடுசோடு வட்ட சட்டில போட்டு வேலம்மா பானைல போட்டுட்டு வா'" நா அரிக்கேன் விளக்கு வெளிச்சத்த கூட்டி வச்சி அடுப்பங்கரை...