குடும்பனின் பார்வையில்

 சரி, ஆரம்பித்து வைப்போம்.....😍



ஒரு ரெண்டு நாளா இந்த மாரி ஏதாவது ஒரு காட்சியிலயாவது நம்மளை திட்டிற மாட்டானா, அதை சாக்கா வெச்சு நாம வழக்கம்போல ஆண்டையாவே மெய்ன்டேன் ஆகிடலாமான்னு வாழை வரதுக்கு முன்னே கத்தி கூச்சல் போட்டு நம்ம so called ஆண்டைகள்  ஒருவழியா அமைதி ஆகிட்டாங்க, அதாவது மாரி அந்த மாதிரி கும்பலை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை போல தெரியுது.....??!?!


அப்புறம் எப்படித்தான்யா நாங்க ஆண்டைனு மெய்ன்டேய்ன் ஆகுறதுன்னு ஆதங்க படுறாங்க, அவங்க ஆதங்கத்திலும் ஒரு நியாயம் இருக்கிறது தானே........? 


சரி இருக்கட்டும், ஊர்காட்டுல உண்மை என்னான்னு தெரியும்னாலும் சினிமாவை வெச்சி வாடிக்கன் வரைக்கும் ரீச் ஆனவங்க, வசனத்துலயாவது அவங்களுக்கு ஏதாவது ஆண்டை வாய்ப்பு கொடுத்திருக்கலாம், கல்நெஞ்சக்காரன் கண்டுக்கவே இல்லை......😀😀


ஆட்டை அடுத்தவன் வாழையில மேய விட்டால் கொஞ்சவா செய்யுவான்னு ஒருத்தன் கூச்சல் போடுறான், சரி யார்ரா அந்த அரைக் கிறுக்கன்னு பார்த்தா ஆடு திருடுறது தான் அவன் புரபோசன்னு வாட்சாப் ஸ்டேஸ்டஸ் வச்சிருக்கான், புரச்சிக்காரன் போலிருக்கு.......😀


அடேய்களா, தென் மாவட்ட வேளாண் நிலங்களும், வரலாற்றில் இந்த மருத நிலமும் யாருக்கு சொந்தமானதுன்னு படிச்சு பாருங்க, அப்பவாவது இங்கே நடந்த புரச்சியில் எந்தெந்த காலகட்டத்தில் யார்யாரிடம் இந்த பல்லர்கள் தங்கள் நிலத்தை இழந்தாங்கன்னு தெரிய வரும்......!?!!


மருத நிலம்னு சொன்னதும் தான் நினைவுக்கு வருகிறது, அடேய் தம்பிகளா மாரி தலித்தியத்தையோ பொதுவுடமையையோ அடிப்படையா வைத்து வாழ்வியலை அணுகும்போதே இவ்வளவு பதற்றம் ஆகுறிங்களே, ஒருவேளை மாரி வரலாற்றையோ தினை அமைவையோ அடிப்படையாக வைத்து ஒரு திரைக்கதையை எழுதினால் உங்களுக்கெல்லாம் என்ன வரலாறு என்ன தினை என்று ஊகிக்க முடிகிறதா, ஆங் அந்த திணை தான்.........😀


தம்பிகளா, வன்மம் உங்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் வரும்......☯️


இங்கே எந்த இனமும் இயல்பிலேயே இல்லாதவர்களாக இருக்கவில்லை, இல்லாதவர்கள் இருந்தாலும் இனத்தில் உள்ள மொத்த பேரும் இல்லாதவர்களாக இருந்ததில்லை. ஏன், நீங்கள் கோடீஸ்வரர்களாக இருந்துகொண்டு பொழுதுபோக்காகவா ஆட்டை திருடுகிறீர்கள், ஆக இல்லாமை எல்லா இடத்திலும் இருக்கவே செய்கிறது. அந்த இல்லாமை மாரி தேர்வு செய்த கதையிலும் இருந்திருக்கலாம், அவ்வளவு தான்.....!!!


இங்கே எந்த விவசாயி கோட்டை கோட்டையாக அறுத்து கட்டுகிறான்......???


முதலில் விளைவதில் சிக்கல், விளைந்தால் காற்று மழைக்கு தப்ப வேண்டும், அங்கும் தப்பினால் போதிய விலை இருக்க வேண்டும், அப்படியே இருந்துவிட்டாலும் விளைச்சல் வீடுவந்து சேர வேண்டும்.....!!!!


இராவோட ராவா கொட்டும் இருட்டுல தாள் இருக்க கதிரை களவாண்டு போற கூட்டமும் இங்கே இருக்கத்தானே செய்கிறது, அதனால விளைச்சல் வீடு வந்து சேரவேண்டும். அப்படி இல்லாவிட்டால் வயலே இருந்தாலும் அவன் கூலிக்கு வாழை தார் சுமந்து தான் ஆக வேண்டும்.....!!!!?


அப்புறம் அவன் வாழைத்தார் சுமந்து கூலி வேலை செய்தாலும் அவன் உழைத்து தான் வாழ வேண்டும் என்கிற வைராக்யத்தோடு வாழ்கிறானே ஒழிய இராவோடு போய் உயிரை பணயம் வைத்து அடுத்தவன் விளைச்சலையோ அல்லது அடுத்த வீட்டு ஆட்டையோ திருடவில்லையே.........!!?!?!


சரி, வயித்து பசிக்கு களவாடும் கூட்டம் பிழைத்துப் போகட்டும், நம்ம பொதுவுடமை போராளிகள் பக்கம் வண்டிய திருப்புவோம்......😀


ஒரு திரைப்படம் வந்துவிட்டால் போதும், ஊருக்கு முன்னால் கருத்து சொல்ல ஓடிவரும் நம்ம பொதுவுடமை புரச்சியாளர்கள் வாழை விவகாரத்தில் மட்டும் ஆப்சன்ட் ஆகுறாங்களே என்னா விசயம்.....????


எப்படியாவது இந்த பல்லர்களை தலீத் பட்டியலில் வைத்து அவர்களுக்கு எப்படியாவது நியாயம் பெற்று தந்துவிட வேண்டும் என்று பல்லர்கள் சார்ந்த எந்த எழவு நிகழ்வாவுது தெரியுதான்னு திரியுற நம்ம திராவிட கம்யூனிஸ்ட்கள் மாரியே வெத்தலைபாக்கு வைத்து அழைத்தும் மயான அமைதி காக்கிறார்களே என்னவா இருக்கும்....???


ஒருவேளை அப்படி இருக்குமோ, இல்லை இல்லை ஒருவேளை இப்படி இருக்குமோ.....😀😀


ஆக இந்த திராவிட கம்யூனிஸ்டுகளுக்கு

 "கண்ணு பூரா வடிவேலுக்கு சொம்புல இருந்த மாதிரி"

 இவர்களுக்கு பல்லர்களை பட்டியலில் அடைக்கிறதுல தான் குறியா இருந்திருக்கு......😀


மாரி மட்டும் வாழையில் பொதுவுடமை முதலாளித்துவம் அரிவாள் சுத்தி என்று ஏதும் பேசாமல் தலீத்தியம் பேசியிருந்தால் இந்நேரம் கொண்டாடி தீர்த்திருப்பார்கள்,

 புரிஞ்சிகிட்டிங்களா 

புரச்சி பல்லர்களே......😀


இங்கே புரச்சி பேசுகிற எல்லோருக்கும் ஆரியமும் திராவிடமும் ஒரு அஜெண்டா கொடுத்திருக்கும், 

அது 

ஒன்று பல்லர்களை அடிமைகளாக சித்தரிக்க வேண்டும் அல்லது பல்லர்களை தோற்கடிக்க துணையாக இருப்பவர்கள் ஆடே திருடினாலும் பரவாயில்லை அவர்களை ஆண்டைகளாக சித்தரிக்க வேண்டும் 

அவ்ளோதான் சோலி முடிஞ்.....😀😀 

-ஆதி 


#வாழை 

#ஆடு 

#ஆட்டு_திருட்டு 

#பரியேறும்_பெருமாள்

#அசுரன்

#கர்ணன்

 #பாண்டிய_ராஜாக்கள்

 #திராவிட_கம்யூனிஸ்ட்  

#மருதம் 

#பாலை 

#வேளாண்மை

 #களவு 

#ஆண்டை

 #களவாண்டை

 #மாரி

 #மாரி_செல்வாராஜ்

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்