Posts

Showing posts from December, 2023

குடும்பனின் வரலாற்றில்

2000 ஆண்டுக்கு முந்தைய குடவோலை முறை   குடவோலை முறையானது சோழர்காலத்தில் கொண்டுவரப்பட்டதாக எல்லாராலும் நம்பப்பட்டுக்கொண்டிருக்கிறது  இதற்கு காரணம் உத்திரமேரூர் கல்வெட்டு செய்தி,  இந்த கல்வெட்டு செய்தி கி.பி 10-ம் நூற்றாண்டை சேர்ந்தது இது சோழ நாட்டில்  குடவோலை முறை இருந்ததை கூறுகிறது ஆனால் இது உண்மையல்ல . இந்த உத்திரமேரூர் கல்வெட்டு செய்திக்கு 150 ஆண்டுகளுக்கு முன் மாறன் சடையன் காலத்து அதாவது கி.பி 9-ம் நூற்றாண்டு திருநெல்வேலி மாவட்டம் மானூர் அம்பலவாணர் கோவில் கல்வெட்டு பாண்டிய நாட்டில் இருந்த குடவோலை முறை தேர்தலை குறிப்பிடுகிறது, அப்படியென்றால் சோழர் காலத்திற்கு முன்பே பாண்டிய நாட்டில் குடவோலை முறை தேர்தல் நடந்துள்ளதை இது காட்டுகிறது . இதில் இப்பொழுது இன்னோரு கேள்வியும் எழுகிறது பாண்டிய நாட்டில் 9-ம் நூற்றாண்டில்தான் குடவோலை முறை நடைமுறைக்கு வந்ததா? அதற்கு முன்பு இந்த முறை இல்லையா? என்ற கேள்வி எழுவது இயல்பே ! இதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா ? என்றால் கல்வெட்டு செய்திகள் இல்லை ஆனால் இலக்கிய சான்று உண்டு . நாம் சங்க கால இலக்கியங்களாக கருதும் அகநானூறு, புறநானூறு போன்...

குடும்பனின் வரலாற்றில்

Image
 ✒️கீழவெண்மணித்        துயரம்  பேசப்படும்           போதெல்லாம்  அறச்சீற்ற   நாயகன்  அமல்ராஜ்     குடும்பனாரும்  பேசப்படுவார். கீழவெண்மணி அறச்சீற்ற நாயகன் அமல்ராஜ் குடும்பனாரின் கணக்கை நேர் செய்தல்/பலிதீர்த்தல் சம்பவங்களைப் பற்றி நம்மில் பலருக்கும் முழுதாகத் தெரியவில்லை.. முழு விபரங்களும்கூட இன்னும் தொகுக்கப்படவில்லை என்பது வருத்தமான செய்திதான்.. 1950களில் தஞ்சை டெல்டாப்பகுதியிலும், தென்மாவட்டங்களிலும் தேவேந்திரர்களுக்கு நெருக்கடிகளும், பண்பாட்டு அழித்தொழிப்புகளும்  நடந்தேறின.. இரு பகுதிகளிலும் இருவிதமான போக்குகள் .. தென்பகுதியில் நில உடைமைகளை அபகரித்தல், கோயில் உரிமைகளைப் பிடுங்கிக்கொள்ளுதல் இருப்பிடங்களை விட்டு விரட்டுதல்., தாழ்ந்த குடிகளெனப் பிரகடனப்படுத்துதல் இப்படியான சூழல்... அப்போது இதனையெல்லாம் ஒரே காலத்தில் எதிர்த்துக் களமாடினார்கள்.. ஆனால் தஞ்சைப் பகுதியில் நிலைமை வேறு.. நில உடைமைகள் யாவும் கோயில் நிருவாகம், ஆதீனங்கள், வடுக தெலுங்கன்/பண்ணையார்கள் வசம் இருந்தன. கீழத்தஞ்சையில்...

குடும்பனின் பார்வையில்

 ✒️குறுக்குவழிகள் எல்லாம்  நேர்வழிகளைக் காட்டிலும்  நீளமானவை.. (வெ.இறையன்பு) சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக அமைச்சர் பொன்முடிக்கும் அவரது மனைவிக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 50 இலட்ச ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. தீப்பைக் கேட்டு நீதிமன்றத்திலே திருமதி விசாலாட்சி அழுதார்.. .முனைவர் பொன்முடி ஒரு வரலாற்றுத் துறைப் பேராசிரியர்.. பேராசிரியர் பொறுப்பை விட அரசியல் அவரை ஈர்த்தது.. ஆனால் ... நிகழ்ந்திருப்பது வேறுவிதமானது... தண்டனையைக் கேட்டு பொன்முடியின் வயது உடல்நிலையைக் கருத்திற்கொண்டு தண்டனைக்காலத்தைக்  குறைக்கக்கேட்டுக்கொண்டனர்.. இதனையெல்லாம் ஏற்கனவே நீதிமன்றம் கவனத்தில் கொண்டு தான் தீர்ப்பு வழங்கியுள்ளதாக அனுமானிக்க முடிகிறது. ஆனால் விசாலாட்சியின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றத்தை அணுக அறிவுறித்தியுள்ளது. தீர்ப்பானது முப்பது நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உடனடியாக உச்சநீதிமன்றம் செல்வார்கள்.. நீதிமன்றம் மறுஆய்வு செய்யும்... அதெல்லாம் ஒரு புறமிருக்கட்டும்.. உடனடியாக மந்திரி பதவியை இழப்பார்.. மாவட்டச் செயலாளர் பதவியைப் பற்றி கட்சி முட...

குடும்பனின் பார்வையில்

✒️இப்போதெல்லாம் இயற்கை மனிதர்களுக்குப் பெருமழையின் மூலம்தான் பாடங்களைக் கற்றுத்தருகிறது.. முன்பெல்லாம் மழை பெய்யாமல் பெரும் பஞ்சம் ஏற்பட்டு உணவுக்குத் திண்டாடவிட்டு பாடம் கற்றுத்தந்தது. அதன் மூலம் நீரைச் சேமிக்கக் கற்றுக்கொண்டார்கள். பெருவெள்ளப்பெருக்கு வரும்போது வெள்ளம்தானாக வடிய சரியான வடிகால் வசதிகளை இயற்கையே அமைத்திருந்தது.. வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான் ஒரு நூலில் மழையளவு குறித்தான செய்தியைப் பதிவிட்டிருந்தது நினைவுக்கு வருகிறது. ஒரு செ.மீ. மழையளவு என்பது ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு டன் எடை கொண்ட மழை பெய்துள்ளது என்று அர்த்தமாம். நாமும் எத்தனையோ வெள்ளப்பெருக்குகளைப் பார்த்திருக்கிறோம். கேள்விப்பட்டிருக்கிறோம்.. வாரக்கணக்கில் மழைவெள்ளம் வடியாமல் ஓடும்.. ஆனால் இப்போது மாதிரி அதிகப்படியான மழையளவைக் கேள்விப்பட்டது இல்லை. காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 95 செ.மீ மழையளவு பெய்துள்ளது என்றால் எப்படி நீர்வடியும்.. வடிகால்கள் முழுக்க ஆக்கிரமிப்புகளும்,அடைப்புகளும் ஏற்பட்டுவிட்டன.. நீர்வழித் தடங்கள் பல இடங்களில் தூர்க்கப்பட்டுவிட்டன. கண்மாய்க்கு மழை பெய்துவரும் தண்ணீர் வழி குளக்கால் எனப்படும். ...

குடும்பனின் பழக்க வழக்கத்தில்

 ✒️தேவேந்திரகுல வேளாளர்களிடம்  அருகிவரும் பழக்கவழக்கங்கள்.. அருமை நண்பர் நாமக்கல் திரு. கை. பெரியசாமி அவர்கள் எழுதிய செய்தி அனுதினமும் திருக்குறள் மாதிரி வாழ்க்கைக்கு ஒத்துப்போகிறது.. நாம் தேவேந்திரகுல வேளாளர் என்று அரசாணை பெற்றபிறகு நமது சமூகத்தின் மதிப்பும், மனநிலையும் மாறியிருக்கிறது.. நேற்று காரைக்குடியிலிருந்து ஒரு மாற்றுச்சமூகப் பேராசிரியர் என்னை அழைத்து நம் பகுதியில் தேவேந்திரகுல வேளாளர் சமூகம் இருக்கிறதா என்று கேட்டார். நான் பள்ளன் என்று தான் அறிந்திருக்கிறார். தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயர் மாற்றம் குறித்து அவர் அறியவில்லை போலும்.. நாங்கள்தான் தேவேந்திரகுல வேளாளர் சமூகம் என்று கூறி விபரம் கேட்டேன். என்னுடன் பணியாற்றும் நண்பரின் தம்பிக்கு இந்து தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தில் மணப்பெண் தேவைப்படுகிறார் என்றார். விசாரியுங்கள் என்றார்..  மணமகன் தேவகோட்டைப்பகுதியைச் சேர்ந்தவர்தான். இதை இங்கே ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் முன்பெல்லாம் எஸ்சி என்ற அடையாளத்தைப் பதிவு செய்து பிறகு பள்ளரா? பறையரா? இரண்டும் வேறுவேறா? என்ற கேள்விகளுக்கு விளக்கம் சொல்லவேண்டியிருந்தது. இப்போது த...

குடும்பனின் பார்வையில்

 இந்தியர்கள் ஏன் இவ்வளவு ஊழல்  செய்கிறார்கள்?  அவர்களின் அணுகு முறையில் என்ன தவறு?.... நியூசிலாந்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு கட்டுரையில் தெரிவிக்கிறது.   ---------------------------------------- இந்தியர்களின் ஹோபிசியன் Hobbesian -   சுயநலத்தின் கலாச்சாரம். இந்தியாவில் ஊழல், ஒரு கலாச்சார அம்சமாகும். ஊழல் குறித்து இந்தியர்கள் குறிப்பாக மோசமாக எதுவும் நினைக்கவில்லை.  ஏனெனில் ஊழல் இயற்கையாகவே நிலவுகிறது. ஊழலை சரிசெய்வதை விட, இந்தியர்கள் அவற்றைச் சகித்துக்கொள்கிறார்கள்.  இந்தியர்கள் ஏன் ஊழல்வாதிகள் என்பதை அறிய, அவர்களின் வழிகள் மற்றும் செயல்களைப் பாருங்கள்.. முதல்:   மதம் என்பது இந்தியாவில் ஒரு வணிகமாகும்.   ஒரு பரிவர்த்தனை, அதில் கடவுளுக்குப் பணம் செலுத்தி, அதற்குப் பதிலாக ஒரு வெகுமதியை எதிர்பார்க்கும் ஒரு முறை! தகுதி இல்லாதவர்கள்கூட கடவுளிடம் பணம்  கொடுத்து வெகுமதியை    கேட்கிறார்கள்... கோவில்களுக்கு உள்ளேயும்/வெளியேவுள்ள உலகிலும்  அத்தகைய பரிவர்த்தனை  "லஞ்சம்" என்று அழைக்கப்படுகிறது. ஒரு பணக்கார இந்தி...

குடும்பனின் பார்வையில்

 கல்வி நிலையங்களில் சாதியப் பாகுபாடுகள் மற்றும் மோதல்கள் நிகழா வண்ணம் இருக்க ஆலோசணை அறிக்கைத் தயார் செய்ய தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நீதியரசர் சந்துரு அவர்களின் தலைமையிலான ஆணையத்திற்கு மக்கள் கல்விக் கூட்டியக்கத்தின் பரிந்துரைகள்   1. அனைத்து வகை கல்விப் பாடத் திட்டங்களில் சாதி ஒழிப்பு குறித்த பாடங்களும், அதற்கேற்றப் பயிற்சி திட்டங்களும் இடம் பெறுவதைக் கட்டாயமாக்க வேண்டும். 2. சாதி உருவாக்கம் அதனால் மனித குலம் அடையும் சீரழிவு பற்றி விளக்கக்கூடிய சமூக அறிவியல் பாடத் திட்டங்கள் கல்வித் திட்டங்களில் பல நிலைகளிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும். 3. ஆரம்பப் பள்ளி முதல் மேல்நிலைக் கல்வி வரை பட்டியலின மாணவர்களுக்கானப் பிரச்சினைகளைக் கேட்பதற்கும், சாதிய நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கும் மாவட்டஆட்சியர் தலைமையிலான ஒரு பறக்கும் படையை அமைக்கவேண்டும். 4. பல்கலைக் கழக மானியக்குழு அறிவுறுத்தலின்படி உயர் கல்வித் துறையில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் பயிலும்/பணிபுரியும் பட்டியலினத்தவர் குறைகளைத் தீர்ப்பதற்கான பொறுப்பு அதிகாரியை (Nodal Officer) அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்...

குடும்பனின் பார்வையில்

 தந்தை மகனுக்கு  எழுதும் கடிதம்!! அன்புள்ள மகனே!   உனக்கு 20 வயது வரும் போது எனக்கு 60 வயதை தாண்டிவிடும் என்பதால் அவ்வப்போது நடக்கும் விவகாரத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தற்போது தமிழகத்தில் எளிய மக்கள் மீதான வன்முறை அதிகரித்து வரும் விவகாரத்தில் ஜனநாயகவாதிகளின் கள்ள மவுனம் குறித்து பேச விரும்புகிறேன்.  கடந்த இரண்டு ஆண்டுகளில் எளிய மக்கள் மீதான வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை 2000 த்தை தாண்டி விட்டதாக எவிடன்ஸ் கதிர் என்ற மனித உரிமை செயற்பாட்டாளர் சுட்டி காட்டியுள்ளதையும், நெல்லை மாவட்டத்தில் மட்டும் கடந்த பத்து மாதத்தில் 84 சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் செய்திகள் வருகிறது. இது போக கடந்த மூன்று மாதத்தில் 19 பேர் படுகொலைக்கு உள்ளாக்கபட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிந்து கொள்ள வேண்டும்.  கடந்த காலங்களை விட இது மிக அதிகமான எண்ணிக்கை என்பதால் இது பேசு பொருளாக்க வேண்டிய முதன்மையான விவகாரம் ஆகும். மகனே! நீ மனிதநேய மிக்கவனாக மட்டுமல்லாமல், மனவலிமை மிக்கவனாக வளரவேண்டும் என்பதே எனது விருப்பம். நுட்பமாக நடக்கும் நிகழ்வுகளை ஒவ்வொன்றாக கவனி.  ரோட்ல ப...

குடும்பனின் பார்வையில்

 பயமாக இருக்கிறது ....  இன்றைய தலை முறையினரின் போக்கு..... பிடித்த ஒரே பொருள் - செல்ஃபோன் படிக்காமல் பாஸ் ஆக வேண்டும். கஷ்டப்படாமல் வேலை கிடைக்க வேண்டும்...யாருக்குமே மரியாதை தரக்கூடாது.. தனக்கு தெரியாத விஷயம் எதுவுமே இல்லை என்ற மனநிலை... *எல்லாமே உடனே கிடைக்க வேண்டும்..* காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்... *சினிமா, கிரிக்கெட், செல்ஃபோன்* இவைதான் உலகம்.. *பெண்கள்* மீது மரியாதையே இல்லை.. *ஆசிரியர்கள், மூத்தோர்கள்* எல்லாம் புழு பூச்சி மாதிரி... *வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம், அரசியல்* குறித்த அடிப்படை புரிதல்கள் கூட இல்லை‌.. ஒரு பேங்க் செலான் கூட நிரப்பத் தெரியாது.. ஒரு வரி கூட வாசிப்பதில்லை.. *தப்பில்லாமல் தமிழோ, ஆங்கிலமோ எழுதவும், பேசவும் வராது...* ஒரு விஷயத்தை கோர்வையாகச் சொல்ல வராது.. *வீதியில் நின்று விஷம் குடித்துக் கொண்டிருந்தாலும் அதையும் செல்பி எடுத்து போட வேண்டும்..* பள்ளிச் சீருடையுடன் கூட *டாஸ்மாக்* போகிற அளவுக்கு தைரியம்‌‌.. சின்ன வயசிலேயே வாயைத் திறந்தாலே கெட்ட வார்த்தை‌.. எப்போதும் ஏதாவது ஒரு போதையில் தன்னை மூழ்கடித்துக் கொள்ள விரும்புகிற மனநிலை.. *எதில...

குடும்பனின் பார்வையில்

 "முன்னோர்களின் சாபம் சும்மா விடாது" 'தமிழரின் நீர் மேலாண்மை'-யின் "அறிவுத்திறனை" ஒரு கட்டுரையில் முழுமையாக விவரித்திட முடியாது.  தமிழரின் "நீர் மேலாண்மை" குறித்த அடிப்படையான "அறிவு" கூட  நமக்கெல்லாம் ஏன் இல்லாமல் போனது என்பதை நினைத்து வெக்கி தலைகுனிய வேண்டும். நிலம் ,நீர்,தீ,வளி, விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் 'உலகம்' என்கிறது "தொல்காப்பியம்".  'நீரின்றி அமையாது உலகு',  நீர் 'மிகுனும் குறையினும் நோய் செய்யும்' என்கிறார் "வள்ளுவர்".  "நீரில்லாமல்" இவ்வுலகம் இல்லை என்பதை "பண்டைய தமிழ் வேந்தர்கள்" அறிந்து வைத்திருந்திருக்கிறார்கள்.  "தமிழின வேந்தர்"-களான 'பாண்டியர்கள்', 'சேரர்கள்', 'சோழர்கள்' அதிக "மாரி(மழை)" பூமிக்கு வரவேண்டியும், அதை 'ஏர் பூட்டி', உழவுக்கு பயன்படுத்தி வருடத்திற்கு மூன்று போகம் முத்து, முத்தாக "நெல் மணிகளை" விளைவித்து மக்களின் 'பஞ்சம்', 'பசி', 'பட்டினியை' போக்கி-யும், ...

நரேந்திரனின் வெற்றியில்

Image
 ✒️ நரேந்திர மோடியின் பலம்  சர்வதேச அளவில் உயர்கிறது.. நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகளில் நான்கு மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கருத்துக்கணிப்புகளைப் பின்னுக்குத் தள்ளி மூன்று மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கிறது பாஜக. சமகால இந்திய அரசியலில் மோடிக்கு நிகரான ஓர் அரசியல் தலைமை இன்னும் உருவாகவில்லை. அப்படி உருவாவதற்கு இன்னும் காலம் ஆகலாம். தெலுங்கானாவிலும் கணிசமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அந்த வளர்ச்சிப் போக்குத் தமிழகத்திற்கும் பரவும் என்பதில் ஐயமில்லை. பாஜக மீது திட்டமிட்டே வெறுப்பு அரசியலைப் பரப்புவதை வெகுஜனங்கள் ரசிக்கவில்லை.. மத்திய அரசின் பல நலத்திட்டங்களைத் தமிழக மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.. குறிப்பாகப் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் பற்றிய புரிதல் இந்த ஆண்டு வெகுமக்களைச் சென்றடைந்திருக்கிறது.. கைவினைஞர்களுக்கான திட்டங்கள் பெரிய அளவில் பேசப்படுகிறது.. அண்மையில் ஆதன் தமிழ் நிகழ்ச்சியின் விவாதத்தில் பங்குகொண்ட ஊடகவியலாளர் திரு.ரவீந்திரன் துரைச்சாமி அவர்கள் தேவேந்திரர்கள் பற்றி மோடி பேசியதைக் குறிப்பிட்டுள்ளார்.. தமிழகத்தின் வேளாண் குடிகளான தேவே...