குடும்பனின் பார்வையில்

 ✒️குறுக்குவழிகள் எல்லாம்  நேர்வழிகளைக் காட்டிலும்  நீளமானவை.. (வெ.இறையன்பு)


சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக அமைச்சர் பொன்முடிக்கும் அவரது மனைவிக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 50 இலட்ச ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.


தீப்பைக் கேட்டு நீதிமன்றத்திலே திருமதி விசாலாட்சி அழுதார்..


.முனைவர் பொன்முடி ஒரு வரலாற்றுத் துறைப் பேராசிரியர்..


பேராசிரியர் பொறுப்பை விட அரசியல் அவரை ஈர்த்தது..


ஆனால் ...

நிகழ்ந்திருப்பது வேறுவிதமானது...


தண்டனையைக் கேட்டு

பொன்முடியின் வயது உடல்நிலையைக் கருத்திற்கொண்டு தண்டனைக்காலத்தைக்  குறைக்கக்கேட்டுக்கொண்டனர்..


இதனையெல்லாம் ஏற்கனவே நீதிமன்றம் கவனத்தில் கொண்டு தான் தீர்ப்பு வழங்கியுள்ளதாக அனுமானிக்க முடிகிறது.


ஆனால் விசாலாட்சியின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றத்தை அணுக அறிவுறித்தியுள்ளது.


தீர்ப்பானது முப்பது நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


உடனடியாக உச்சநீதிமன்றம் செல்வார்கள்..


நீதிமன்றம் மறுஆய்வு செய்யும்...


அதெல்லாம் ஒரு புறமிருக்கட்டும்..


உடனடியாக மந்திரி பதவியை இழப்பார்..


மாவட்டச் செயலாளர் பதவியைப் பற்றி கட்சி முடிவெடுக்கும்.


அவரது மகன் எம்பியாக இருக்கிறார்...


இதெல்லாம் அரசியல் பின்னடைவாகவே கருதப்படும்..


இந்த வழக்கானது 2006-2011 காலங்களில் பொன்முடி அமைச்சராக இருந்தபோது சொத்துக்குவிப்பு நடத்தியதற்காக தொடரப்பட்டது..


இந்தத் தீர்ப்பு தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை முன்வைத்துள்ளது..


அதிமுக, திமுக ஆகிய இரு திராவிட ஆட்சியாளர்களும் நெறிதவறி நடக்கிறார்கள் என்பதை அவ்வப்போது நீதிமன்றத் தீர்ப்புகள் நமக்குக் காட்டுகின்றன..


ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார்..


மத்தியில் INDI கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக கட்சியின் ஊழல் வழக்குத் தீர்ப்புகள் பெரும் விளைவுகளை ஏற்படுத்தலாம்..


இதிலிருந்து தமிழக அரசியல்வாதிகள் தெரிந்த கொள்ள வேண்டிய விடயம்... 


மக்களுக்குச் சேவை செய்ய கிடைத்த வாய்ப்பை சொத்துச் சேர்க்கக் கிடைத்த வாய்ப்பாகப் பயன்படுத்தாதீர்.


ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கக் கிடைத்த வாய்ப்பாகப் பாருங்கள்.


இதிலிருந்து இன்னொரு பாடத்தையும் கீழமை நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.


நீதியரசர் ஜெயச்சந்திரன் அவர்கள் தந்த நூறு பக்கங்கள் கொண்ட தீர்ப்பைப் பல முன்னாள் நீதிபதிகள் வெகுவாகப் பாராட்டுகிறார்கள்..


பல முன்னாள் அமைச்சர்கள் மீதும் இது போன்று பல வழக்குகள் காத்திருக்கின்றன..



பொதுவாக ஜெயலலிதா, பொன்முடி வழக்கின் தீர்ப்பு திராவிட அரசியலுக்குப் பெரும் பின்னடைவையே தரும்..


தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவை தன்னலமற்ற அரசியல்வாதிகள்..


இளைய சமூகமாவது இதையெல்லாம் ஒரு பாடமாக வைத்துக்கொண்டு அரசியலில் பிரவேசிக்க வேண்டும்.

வெறும் மணல் குவாரி, இன்னோவா கார் கனவோடும் அரசியலுக்கு வந்துவிடாதீர்..


முதுமையில் சிறை வாழ்க்கை மிக மோசமாகும்.



ஏழைகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தாத எந்த அரசும் நீடிப்பதில்லை.


இலஞ்சமும், ஊழலும்

மாறும் காலம் விரைவில் வரட்டும் ..



©️✒️மடைக்குடும்பர்

21.12.2023

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்