Posts

Showing posts from February, 2025

குடும்பனின் பார்வையில்

 சங்க இலக்கியத்தில் வானிலையியல்  நவீன வானிலையியல் காற்றைப் பற்றி, மேகத்தைப் பற்றி, மழையைப் பற்றி, காலநிலையைப் பற்றி, வானிலை பற்றி வைத்துள்ள அறிவியல் வரையறைகள் நூலில் விளக்கப்படுகின்றன. அந்த வரையறைகளுக்குப் பொருந்துவிதமாக சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கும் தகவல்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. உதாரணமாக காற்றைக் குறிக்கும் பல சொற்கள் தமிழில் உள்ளன. வடக்குத் திசையிலிருந்து வீசும் காற்றை வாடை, வடந்தை, ஊதை எனவும், கிழக்கிலிருந்து வீசும் காற்றை கொண்டல் எனவும், மேற்கிலிருந்து வீசும் காற்றை கோடை எனவும், தெற்கில் இருந்து வீசும் காற்றை தென்றல் என்றும் குறிப்பிட்டனர். காற்றுவீசும் வேகத்தை அளக்க நவீன காலத்தில் பியூபோர்ட் அளவுமுறை உள்ளது. பியூபோர்ட் எண்.1 என்பது மென்காற்று நிலையாகும். இதுபோன்று பியூபோர்ட் எண்.12 வரை காற்று வீசும் வேகத்தின் அளவை அளக்க முடியும். காற்றின் வேகத்தை விளக்கும் பல பாடல்கள் சங்க இலக்கியங்களில் இருப்பதை நூலாசிரியர் எடுத்துக் காட்டியிருக்கிறார். இதுபோன்று மழையின் பல்வேறு தன்மைகள், மேகத்தின் பல்வேறு தன்மைகளை அறிவியல்பூர்வமாக விளக்கி, அதைப் போன்று சங்க இலக்கியங்...

குடும்பனின் பார்வையில்

 2024 ல் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலைச் சீர்குலைக்க இந்திய அரசியல்வாதிகளும், பத்திரிக்கைகளும் அமெரிக்காவிடம் லஞ்சம் பெற்ற செய்தி அதிர்ச்சி அளிக்கவில்லை.. இங்கே நடக்கிற ஊடக விவாதங்களையும், எதிர்க்கட்சிகளின் மௌனங்களையும் கவனித்தால் எல்லாவற்றிலும் அடிப்படையில் ஒரு புரிதல் இருக்கிறது. தமிழகத்தில் இந்தியைத் திணிப்பதாகச் சொல்கிறார்கள் ஆனால் இல்லாத திராவிடம் இங்கே வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது. தமிழகப் பள்ளிகளில் தமிழ்ப் பாடத்தில் பெறப்படும் மதிப்பெண்கள் நம்மை யோசிக்க வைக்கவில்லை. எல்லாத் தனியார் பள்ளிகளிலும் இந்தி மனப்பூர்வமாக ஏற்கப்படுகிறது. எல்லாக் கிராமங்களிலும் இந்திக்காரர்கள் புழங்குகிறார்கள். பிரயாக்ராஜ் கங்கை யமுனை நதிகள் நீராடத் தகுதியற்றவை என்கிறார்கள் ஆனால் தமிழகத்திலுள்ள 90 சதவீத ஏரி குளங்கள் குளிக்கத் தகுதியற்று விட்டன என்பதைப் பேச மறுக்கிறார்கள். மீன், தாமரை வளர்ப்பை வேண்டுமென்றே செய்து குளத்து நீரை மாசுபடுத்துகிறார்கள். அதனால் பெருவாரியான எளிய மக்கள் தோல் நோயால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டும் ஏலம் எடுத்து ஆதாயம் பெறுகிறார்கள்.. ஒரு காலத்தில் ஒவ்வொரு...

குடும்பனின் வரலாற்றில்

 வடக்கு அழகு நாட்சியா புரம்  வடக்கு அழகு நாட்சியா புரம் என்ற கிராமத்தை நிர்ணயித்த சக்திகள்… ஒரு ஊரை புதிதாக நிர்ணயம் செய்வது என்பது மள்ளர் என்னும் தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு மிகவும் எளிதான செயல். மண்ணை பண்படுத்தி விவசாயம் செய்வது என்றாலும் சரி... புதிது புதிதாக ஊர்களை (அனைத்து தேயிலை தோட்ட நகரங்களும் உருவாக்கிய வரலாறு படித்து தெரிந்து கொள்ளுங்கள்)  நிர்ணயம் செய்வது என்றாலும் இவர்கள் இன்றி உலகில் எவருமிலர். தமிழ் நிலம் உலகெங்கும் இணைந்திருந்த கால கட்டத்தில், உலகின் தொடக்க கால தொல் புதைமங்களைக் கொண்ட தரணி போற்றும் தாமிரபரணி நதிக்கரையில் காலரா என்னும் காலன் கொடிதாக கொன்றழித்த போது, உயிரையாவது காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் வெளியேறி வந்த ஒரு கூட்டம் - தங்கி கொள்ள தேர்ந்தெடுத்த தண்ணியே இல்லாத பகுதி தான் சங்கரன் கோவில் பகுதி. வடக்கு அழகு நாட்சியா புரம் - ஆங்காங்கே கிணற்று பாசனம் தவிர்த்து - மழை பெய்தால் விவசாயம் செய்து வாழும் மக்கள் உள்ள ஊர். முக்கிய வருமானம் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை வரும் பூவினால் வரும் வருமானமே. மீதம் மக்கள் கடும் உழைப்பாளிகள் ஆனதால் மள்ளர் மக்க...

குடும்பனின் வரலாற்றில்

 பட்டி ஆடுகள் இல்லை  பத்திற்கும் மேற்பட்ட மாடுகள் இல்லை  பட்டி படல் கட்ட வேண்டியதில்லை  படல் கட்ட மின்ன மரங்களை தேடி அலைய வேண்டியதில்லை  பனை நார் கிழிக்க அவசியமில்லை ஒண்டுகளை பாதுகாக்க வேண்டியதில்லை கரையான் அரிக்காமல் கம்பைகளை காக்க வேண்டியதில்லை அடுப்பு கூட்ட கல் தேடி பழைய இடம் போக வேண்டியதில்லை சாமிகளை தேடி கரணம் போட வேண்டியதில்லை  பச்சமாவு இடிக்க அவசியமில்லை அரசாணிக்காய் பொரியல் செய்ய ஆட்கள் இல்லை முடக்கத்தான் கொடி தேடி கால் முள் தைக்க வேண்டியதில்லை சோழக்கட்டைகள் பிடுங்கி காடு சுத்தப்படுத்த தேவையில்லை  மாடுகளை குளிப்பாட்ட வேண்டியதில்லை கன்று கழுவையில் பின் உதை வாங்க ஆள் இல்லை.. பட்டை தீட்ட காளை கொம்புகள் இல்லை  காளையை ஈன்ற நாட்டு மாடுகள் இல்லை  தார் முள் குத்திய உழைக்கால் தடிகள் இல்லை சில நேரத்தில் நம் காலை கூட பதம் பார்க்கும் கூரிய கலப்பைகள் இல்லை ஏறு பூட்டிய நுகங்கள் இல்லை அத்தி கொழுந்து இல்லை  இலந்தை கொழுந்திற்கோ இனி வேலை இல்லை  தெப்பக்குளம் கட்ட காலையிலிருந்து சாணி சேகரிக்க வேண்டியதில்லை காப்பு கட்டுவார்கள் என பட்டி காக்கவில்...

குடும்பனின் பெருமிதத்தில்

Image
 ✒️ "தமிழ் மொழியை உலகின் தலை மொழியாகவோ அல்லது தலை மொழிகளில் ஒன்றாகவோ கொள்ளுதல். " இதுதான் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரின் ஆய்வுக் கண்டடைவு.. இன்று பிப்-07. அவரது பிறந்தநாள் உலக அளவில் தமிழை ஆய்வு செய்தவர்களில் முதன்மையானவராகப் போற்றப்படுபவர். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் கரிவலம் வந்தநல்லூருக்கு அருகிலுள்ள புறக்கடையான்பட்டியில் பிப்.07.1902 இல் தேவேந்திர குல வேளாளர் மரபில் வாத்தியார் கூட்டம் எனும் வகையறாவில் முத்துச் சாமிக்குடும்பனார் வள்ளியம்மை குருதி மரபில் பரிபூரணம் ஞானமுத்து தம்பதியர்களுக்கு மகனாகத் தோன்றியவர். அவரது ஆய்வின் உச்சம் என்பது தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியை உருவாக்கியது தான். பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கி பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி ஆராய்ச்சித் துறை இயக்குனராகப் பணியாற்றியவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய இந்திய மொழிகள் ஆங்கிலம், பிரஞ்சு, லத்தீன், கிரேக்கம் ஆகிய வெளிநாட்டு மொழிகள் உட்பட 17 மொழிகளின் இலக்கணங்களைக் கற்றவர். 40- க்கும் மேற்பட்ட மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று சொல்லாராய்ச்சி செய்த பெருமகனார் . மறை...

குடும்பனின் மீள்பார்வையில்

 நமது பழனி செப்பேடு தமிழ் துன்முகி ௵ சுக்கிரவாரம் தை ௴ 19 ௳ சதுர்த்தி திதியில் எழுதப்பட்டது என்பது செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது நமது உறவுகளுக்கு ஒரு செய்தி - தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி. *******---********---* நம்முடைய "பழனி பள்ளர்  செப்பேடு" கி.பி.1528 ல் எழுதப்பட்டது என்றும் பிறகு அது கைவிடுதலையாகிப் போனதால்  (தொலைந்து போனதால்) அது சில காலத்திற்குப் பிறகு மீண்டும் நகல் எடுக்கப்பட்டது என்பதும் நாம் அறிந்ததே.  இச்செப்பேட்டை  பல வருடங்களுக்கு முன் முதலில் படித்தவர் மேனாள் பழனி  அருங்காட்சியக் காப்பாட்சியர் சுலைமான் அவர்கள்.(1995). அதன் பிறகு அதே ஆண்டில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின்  போஸ் & ஹரிஹரன்  ஆகியோர் படித்தனர்.  மீண்டும் அதைப்  படித்தவர்  மேனாள் தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் கல்வெட்டு/தொல்லியல் துறையின் தலைவர் புலவர் இராசு அவர்கள்(2002). புலவர் இராசு  அவர்கள் வாசித்ததை மள்ளரியப் பேராசானும் எனது சித்தப்பாவுமாகிய குருசாமிசித்தன் அவர்கள் தமது மள்ளர்மலரில் அதைப்  பதிப்பித்தார்.(மே 2002)  மேற்கண...