குடும்பனின் மீள்பார்வையில்

 நமது பழனி செப்பேடு தமிழ் துன்முகி ௵ சுக்கிரவாரம் தை ௴ 19 ௳ சதுர்த்தி திதியில் எழுதப்பட்டது என்பது செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது

நமது உறவுகளுக்கு ஒரு செய்தி

- தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி.

*******---********---*

நம்முடைய "பழனி பள்ளர்  செப்பேடு" கி.பி.1528 ல் எழுதப்பட்டது என்றும் பிறகு அது கைவிடுதலையாகிப் போனதால்  (தொலைந்து போனதால்) அது சில காலத்திற்குப் பிறகு மீண்டும் நகல் எடுக்கப்பட்டது என்பதும் நாம் அறிந்ததே. 

இச்செப்பேட்டை  பல வருடங்களுக்கு முன் முதலில் படித்தவர் மேனாள் பழனி  அருங்காட்சியக் காப்பாட்சியர் சுலைமான் அவர்கள்.(1995).

அதன் பிறகு அதே ஆண்டில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின்  போஸ் & ஹரிஹரன்  ஆகியோர் படித்தனர்.

 மீண்டும் அதைப்  படித்தவர்  மேனாள் தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் கல்வெட்டு/தொல்லியல் துறையின் தலைவர் புலவர் இராசு அவர்கள்(2002).

புலவர் இராசு  அவர்கள் வாசித்ததை மள்ளரியப் பேராசானும் எனது சித்தப்பாவுமாகிய குருசாமிசித்தன் அவர்கள் தமது மள்ளர்மலரில் அதைப்  பதிப்பித்தார்.(மே 2002) 

மேற்கண்ட  ஆய்வாளர்கள்  செப்பேட்டின் காலத்தை கி.பி.1528 என்று தீர்மானித்தனர்.

இந்தக் காலக் கணிப்பில் எனக்கு  உடன்பாடு இல்லாமல்  இருந்தது. மீண்டும் ஒருமுறை  புலவர் இராசு அவர்களின் செப்பேட்டுப்  பதிப்பை ஆராய்ந்தேன்.

மிகக் கவனமாக/மிகுந்த எச்சரிக்கையுடன் காலக் கணிப்பை மேற்கொண்டேன். இச்செப்பேடு தொல்லியல் முக்கியத்துவமும் வரலாற்றுச் சிறப்பும் மிக்க ஆவணம் என்பதால், தீர்க்கமாகவும் உன்னிப்பாகவும் அறிவியல் முறைப்படியும்   இதன் காலத்தை ஆராய்ந்தேன்.

ஆய்வின் முடிவில்  நமது செப்பேடு கி.பி. 1528 ல் கிருஷ்ணதேவராயர் காலத்தில் எழுதப்படவில்லை என்பதும் மாறாக கி.பி.1657 ல் திருமலை நாயக்கரின் 34 ஆம் ஆட்சி ஆண்டில்  எழுதப்பட்டது என்பதையும் கண்டறிந்தேன். 

அத்துடன் நமது செப்பேடு அதற்குப் பிறகு தொலைந்து போனதால்(கைவிடுதலையாகிப் போனதால்) திருமலைநாயக்கரின் (கொள்ளு)பேரனான ரங்ககிருஷ்ணப்ப நாயக்கர்@ மூன்றாம் முத்துவீரப்ப நாயக்கர்  ஆட்சிக்குப்பிறகு ஏற்பட்ட, குழப்பமான ராணிமங்கம்மாவின் (பொறுப்பு)  ஆட்சிக் காலத்தில் 1692 புரட்டாசி-ஐப்பசி மாதங்களில் நகலெடுப்பு நடை பெற்றது என்பதையும் கண்டறிந்தேன். 

அந்த நகல் செப்பேடுதான் தற்போது சகோ.ஜான்பாண்டியன் வசம் உள்ள நமது பழனி பள்ளர் செப்பேடு என்பதையும் உறுதி செய்கிறேன். 

([நமது செப்பேட்டின் காலம் தொடர்பான ஆய்வு விவரங்களை  இம்மாத இறுதிக்குள் எனது youtube சேனலான "Tamil Archaeology" @archaeomoorthy யில் பதிவேற்றம் செய்கிறேன். இது தொடர்பாக நமது சகோதரர்களின் பிற YouTube சேனல்களிலும் அறிவியல்பூர்வமான இந்தகாலக் கணிப்பு தொடர்பாக விளக்கம் அளிக்கவும் தயாராய் இருக்கிறேன்]).

நமது பழனி செப்பேடு தமிழ் துன்முகி ௵ சுக்கிரவாரம் தை ௴ 19 ௳ சதுர்த்தி திதியில் எழுதப்பட்டது என்பது செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதை அடியொற்றி  வானியல் குறிப்புகள்/ NASA மற்றும் NCERT -வெளியிட்ட  அமாவாசை பௌர்ணமி/சூரியகிரகணம் பட்டியல் ஆகியவற்றின்  அடிப்படையில் காலத்தைத் தீர்மானித்தேன். 

இதன்படி 1657 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 02 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சதுர்த்தி திதியில் காலை 08.13 க்கு மேல்  10.28 க்குள் திருதி யோகத்தில் பாலவ கரணத்தில்  உத்தர நட்சத்திரத்தில் நமது பழனி மடத்தில் மூலச் செப்பேடு  வெளியிடப் பட்டது என்பதை கணித்து- தீர்மானித்து-  உறுதி செய்கிறேன்.

02-02-1657.

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்