குடும்பனினின் வானியலில்
"பழங்காலத்தில் கோயில் கட்டப்பட்டது வழிபாட்டுக்கு அல்ல." வானியல் குறிப்புகளுக்காகவே அதன் அமைப்பு முறையை உருவாக்கினர். வானியலை அறிந்து கொள்ள தொல்தமிழகத்தில் ஆசீவக துறவிகள் கல்படுக்கைகளில் அமர்ந்து மக்களுக்கு நாள் கணக்கு குறித்துக் கொடுத்தனர். பௌத்த, ஜைனர்களால் அம்முறை ஒழிக்கப்பட்டதால் தமிழகம் குழப்பமான நிலைக்குத் தள்ளப் பட்டது. இதனைப் பயன்படுத்தி களப்பிரரை தமிழகத்தின் மீது படையெடுக்கத் தூண்டியது பௌத்த ஜெய்ன மத வெறியர்கள். பின்பு கோசெங்கணான் காலத்திலேயே முதல் கோயில் கட்டப் பட்டது. கோயிலின் அமைப்பில் கருவறை- நந்தி- கொடிமரம் மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும். ஞாயிறு கிழக்கே தோன்றும் போது கொடிமர நிழல் விழும் திசையைக் கொண்டு ஞாயிற்றின் வட செலவு தென்செலவு முறையைக் கணக்கிட்டனர். வலப்பக்கம் சாய்ந்தால் தென்செலவு, இடப் பக்கம் சாய்ந்தால் வடசெலவு. இதை வைத்து ஆண்டுக்கணக்கை சரிபார்க்க கோயில் மண்டப பிரகாரத்தில் குடும்பர்கள், நாள் கணக்கு பார்ப்பவர்கள், கோயில் பூசாரி, கூடி அந்த ஆண்டு விதைப்பு செய்யும் நாள், கோயில் விழா நாள் மற்ற விசேச நாட்களையும் அந்த ஆண்ட...