குடும்பனினின் வானியலில்
"பழங்காலத்தில் கோயில் கட்டப்பட்டது வழிபாட்டுக்கு அல்ல."
வானியல் குறிப்புகளுக்காகவே அதன் அமைப்பு முறையை உருவாக்கினர்.
வானியலை அறிந்து கொள்ள தொல்தமிழகத்தில் ஆசீவக துறவிகள் கல்படுக்கைகளில் அமர்ந்து மக்களுக்கு நாள் கணக்கு குறித்துக் கொடுத்தனர்.
பௌத்த, ஜைனர்களால் அம்முறை ஒழிக்கப்பட்டதால் தமிழகம் குழப்பமான நிலைக்குத் தள்ளப் பட்டது. இதனைப் பயன்படுத்தி களப்பிரரை தமிழகத்தின் மீது படையெடுக்கத் தூண்டியது பௌத்த ஜெய்ன மத வெறியர்கள்.
பின்பு கோசெங்கணான் காலத்திலேயே முதல் கோயில் கட்டப் பட்டது.
கோயிலின் அமைப்பில் கருவறை- நந்தி- கொடிமரம் மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும்.
ஞாயிறு கிழக்கே தோன்றும் போது கொடிமர நிழல் விழும் திசையைக் கொண்டு ஞாயிற்றின் வட செலவு தென்செலவு முறையைக் கணக்கிட்டனர்.
வலப்பக்கம் சாய்ந்தால் தென்செலவு, இடப் பக்கம் சாய்ந்தால் வடசெலவு. இதை வைத்து ஆண்டுக்கணக்கை சரிபார்க்க கோயில் மண்டப பிரகாரத்தில் குடும்பர்கள், நாள் கணக்கு பார்ப்பவர்கள், கோயில் பூசாரி, கூடி அந்த ஆண்டு விதைப்பு செய்யும் நாள், கோயில் விழா நாள் மற்ற விசேச நாட்களையும் அந்த ஆண்டுக்கு குறித்து முடிசெய்வார்கள்.
இது மார்கழி மாதம் வருகிற சங்கராந்தி அன்று நடைபெறும். அந்நாளில் கோயிலுக்கு பல பொருள்களை குடும்பர்கள் காணிக்கையாக கொண்டுவருவர்.
கொடிமர நிழல் நந்தியின் சீரிய கொம்புகளுக்கிடையே நேராக மூலவரை நோக்கி விழும் நாளில் தொடங்கி தென்மேற்கு பருவமழை தொடங்கும்.
ஞாயிறு ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியில் நின்று அடுத்தடுத்து மற்ற ராசிகளில் சஞ்சரிக்கும்.
அந்த வகையில் ஏப்ரல் 14 முதல் மே- 15 வரை மேழ ஓரையில் இருக்கும்
ஞாயிறு மே-15 முதல் ஜூன் 15 வரை விடை( ரிஷப ராசி) ஓரையில் சஞ்சரிக்கும்.
ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கும்.
இதை குறுந்தொகை 391 வது பாடல் பொன்மணியார் எழுதியது மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.
“ உவரியொருத்த லுழாது மடியப்
புகரி புழுங்கிய புயனீங்கு புறவிற்
கடிதிடி யுருமிற் பாம்புபை யவிய
இடியொடு மயங்கி யினிதுவீழ்ந் தன்றே…..”
என்ற பாடல் இதை உறுதி படுத்தும்.
உவரி- எருது- ரிஷப ராசி.
வலைதளத்தில் “ Venus Transit in Taurus “ என்று தட்டிப் பாருங்கள் . அந்த அற்புத காட்சி ஜூன் 2012 அன்று நிகழ்ந்தது உங்களுக்கு கண் முன் விரியும்.
ஞாயிறும், வெள்ளியும் ரிஷப ராசியில் சந்திக்கும். அதைத்தான் இப்பாடல் “புகரி புழுங்கிய” என்ற வரிகள் மூலம் பதிவிட்டிருக்கும்.
புகரி- வெள்ளிக்கோள்
ராஜராஜன் கட்டிய பெருவுடையார் கோயிலில் கொடிமரத்துக்கு முன் சிறிய நந்தியையே நிறுவி இந்தக் காட்சியைக் கண்டு களித்தான். இதை விளங்கிக் கொள்ளாத வடுக ஆரியம் மூலவரே தெரியாத வண்ணம் பெரிய நந்தியை நிறுவி கோயிலை அசிங்கப் படுத்தியுள்ளனர்.
எல்லாக் கோயிலிலும் கொடிமரம் கோயிலுக்கு வெளியில் ஞாயிற்று ஒளி படும்படியே அமைத்தனர்.
இந்த வானியலை உள்வாங்கிக் கொள்ளாத வடுக ஆரியம் கொடிமரத்தையும் சேர்த்து கோயில் மண்டபம் கட்டி அதன் நோக்கத்தைச் சிதைத்து விட்டனர் .
உங்களுக்கு புரிந்திருக்கும் கோயில் ஏன் குடும்பர்கள் கட்டுபாட்டில் இருந்தது என்று இதன் மூலம் விளங்கியும் இருக்கும்.
குடும்பர்கள் கொடுக்கும் காணிக்கையை கண்ட ஆரியம் (சிலை வழிபாடு அவர்களுக்குக் கிடையாது) பேராசையுடன் தங்கள் வழக்கத்தைக் கைவிட்டு கோயிலை கைப்பற்றி அதன் வருமானத்தை சுருட்ட ஆரம்பித்தனர்.
குடும்பர்களை கோயிலை விட்டு வடுக அரசுடன் சேர்ந்து விரட்டி அடித்தனர்.
கோயிலின் உண்மை நோக்கத்தை சிதைத்து வெறும் வெற்றுச் சடங்கு, திருவிழா என சுரண்டும் அமைப்பாக மாற்றி அமைத்தனர்.
சிதம்பரம் கோயில் பறவைப் பார்வை பாருங்கள் அதன் கோபுரம் ஸ்வஸ்திக் வடிவில் அமைக்கப் பட்டிருக்கும் அதுவும் வானியல்தான்.
இப்பொழுது *"கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம்"* என்ற பழமொழியும் உங்களுக்கு விளங்கியிருக்கும்.
Comments
Post a Comment