Posts

Showing posts from March, 2025

குடும்பனின் பார்வையில்

 ஒரே ஒரு சந்திப்பால் தமிழகம் இழந்த பல நூறு கோடி...! தேவிகுளம் தாலுகா நம் கையை விட்டு போன கதை. ஒரு இனத்திற்கு அதனுடைய பண்பாடு கலாச்சாரம் எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியமானது "நிலம்..." அந்த நிலத்தை மையப்படுத்திதான் இந்த உலகம்,அது தோன்றிய நாளிலிருந்து சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது...! அப்பேர்ப்பட்ட நிலம் கண்முன் பறிபோவது தெரிந்தும், கடமையாற்ற வேண்டிய இடத்தில் இருந்தவர்கள், வாய் மூடி மவுனியானதுதான் வரலாற்றுத் துரோகம். ஈ வே ராமசாமி என்றிருந்த ஒரு ஈரோட்டுச்செல்வந்தரை, இந்த தமிழ்ச்சமூகம், தந்தை என்றும் பெரியார் என்றும் அழைத்து ஆனந்தப்படுத்தி, உச்சி முகர்ந்து கொண்டாடியதையெல்லாம், பணிக்கர் என்கிற ஒரு மோசடிப் பேர்வழிக்காக, பவிசாய் காற்றில் பறக்க விட்டு விட்டாரே என்பதுதான், இந்த நாள் வரையிலான நம்முடைய தீரா வலி. திருச்சி ரத்தினவேல் தேவர் மாளிகையில் தங்கி இருந்த பெரியாரை, தேவிகுளம் தாலுகாவிற்கு உரிமை கோரி வந்த மொழிவழி பிரிவினை கமிட்டியின் உறுப்பினரான மலையாள வெறிபிடித்த கே எம் பணிக்கர் சந்தித்திருக்காவிட்டால்,,, வரைபடம் மட்டுமல்ல வரலாறும் மாறி இருக்கும். தேவிகுளம் போனதால் ஒரு ஊர் போனதாக ந...

குடும்பனின் பார்வையில்

" சாதிய கொலைகள் அல்ல !!!" -சபாநாயகர் அப்பாவு இவர் எந்த அடிப்படையில் சொல்கிறார் என்று நமக்கு தெரியவில்லை, ஆனால் ஒரு வகையில் இவர் சொல்வது தான் உண்மை, இதை நாம் முன்னமே சொல்லியிருக்கிறோம். இங்கு நடந்த அல்லது நடக்க போகிற கொலைகளின் வழக்குகள் வேண்டுமானால் சாதியை அடிப்படையாக கொண்டதாக பதியப்படலாம், காவல்துறை தொடர்பில் உள்ளவர்களை கேட்டால் ஏன் அவ்வாறு பதிவு செய்கிறார்கள் என்கிற விவரம் எல்லாம் அன் அபிசியலாக சொல்வார்கள். பிறகு என்ன தான் நடக்கிறது என்று கேட்கிறீர்களா....??? கொலைகள் நடப்பதும் உண்மை, இவர் சொல்வதும் உண்மை என்றால் அதுதானே கேள்வியாக இருக்க முடியும்.....??? ஆம், இங்கே நடக்கிற கொலைகள் பெரும்பாலும் சாதிய ரீதியில் அதாவது புரச்சியாளர்கள் சொல்லும் சாதிய படிநிலை அடிப்படையில் நடக்கவில்லை, இது முற்றும்முழுதாக ஆதிக்க பிரச்சினை....!!! இங்கே யார் #ஆதிக்கம் செய்வது என்பது தான் விவகாரமே ஒழிய எவனோ ஒருவன் முதற்படி சாதி என்ற நிலையில் அமர்ந்து கொண்டு இரண்டாம் படி #சாதி என்கிற மனநிலையில் #அத்துமீரும் நிலை அல்ல. இங்கே நடப்பது வெளிப்படையாக ஆதிக்கம் செலுத்துவது யார் என்கிற பிரச்சினை, போட்டி....??? ...

குடும்பனின் படிப்பில்

 திருட்டுத் தொழிலுக்கு - "ஆநிரை கவர்தல்" எப்படி  வச்சான் பாரு பெயரு...??  அடேயப்பா உங்கள மிஞ்ச எவனும் இல்லடா... திருட்டு தொழிலுக்கு அறிஞர் களின் கூற்று இதோ... 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇  கள்ளர்களை பற்றி வரலாற்றறிஞர்களின் கூற்று  ///////////////////////////////////////////////////////////////////////////////////////////// கள்ளர் தஞ்சைப் பகுதியை சேர்ந்த கள்ளர் மரபினர் சிலர் தங்களை சோழர் பரம்பரையினர் என்றும், இராசராச சோழனின் வழிவந்தவர்கள் என்றும் அண்மைக் காலங்களில் உரிமை பாராட்டி வருகின்றனர். ஆனால் அவர்களின் வரலாறோ அரச மரபிற்கும், குடிமக்களுக்கும் நேர் எதிராக உள்ளது.ஆகவே, கள்ளர்களை பற்றி வரலாற்றறிஞர்களின் கூற்றை இங்கே எடுத்துரைக்கின்றேன். சோசப் சி.கோபர்ட்:- ”கள்ளர்களின் குலத்தொழில் கொள்ளையடிப்பதில், கால்நடைகளைத் திருடுதல், வேவுபார்த்தல், படைத்தொழிலில் ஈடுபடுதல் ஆகும்” என்கிறார். தீட்சிதர்:- கள்ளர்கள் ஒரு கொள்ளைக் கூட்டம். அவர்கள் எந்தப் படைகளிலும் சேர்ந்து பயிற்சி பெற்ற போர் வீரர்கள் அல்லர்” என்கிறார்… கெமின்சுவே:- ”கள்ளர்கள் தாங்கள் கௌதம முனிவரின் பத்தினி அகலிகை...

குடும்பனின் பார்வையில்

 துண்டு புராணம் -------------------------------- இன்று வேட்டி, சட்டையே திருமணம், பொங்கலன்று அணியும் யூனிபாரம் மாதிரி ஆகிவிட்டது.  இதில் துண்டை' யார் நினைவு வைத்திருக்க போகிறார்கள்? அதனால் அடுத்த தலைமுறைக்கு துண்டின் மகிமையை பதிவு செய்து வைக்கலாம். துண்டு என்பது வெறும் ஒரு/இரண்டு முழ துணியல்ல. கிராம கலாசாரத்தில் அது மிக முக்கிய கௌரவமான இடத்தை வகிக்கிறது.‌  துண்டு போடாமல் பெருசுகள் வெளியே கிளம்பவே மாட்டார்கள். துண்டு நம் தோளில் அமர்ந்தால் நமக்கு மரியாதை. அதே துண்டை இடுப்பில் கட்டினால் பிறர்க்கு மரியாதை. தோளில் துண்டை போட்டுக்கொண்டு  கோயிலுக்கு போகிறவர்கள், இறைவன் முன்பு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொள்வது சாமிக்கு மரியாதை.. துண்டை எடுத்து தலையில் கட்டினால் களத்தில் இறங்கி புகுந்து விளையாட தயாராகிவிட்டார்னு அர்த்தம். முந்தைய காலத்தில் சட்டை எல்லாம் கிடையாது. துண்டுதான் சட்டை. பழைய சரத்குமார் படங்களில் நாட்டாமை விஜயகுமார் உடம்பு முழுக்க சந்தனத்தை பூச்சிகிட்டு துண்டை கட்டிகிட்டு தான் உலாவருவார். சட்டை போடமாட்டார். அதில் புலிநக சங்கிலி தெரிந்தால் நாட்டாமை..   உட்க...

குடும்பனின் பயன்பாட்டில்

 *பண்டைத் தமிழர் அளவை முறைகள்* நிறுத்தலளவை 1 உளுந்து (grain) - 65 மி. கி. 1 குன்றிமணி - 130 மி. கி. 1 மஞ்சாடி - 260 மி.கி. 1 மாசம் - 780 மி.கி. 1 பனவெடை - 488 மி.கி 1 வராகனெடை - 4.2 கி. 1 கழஞ்சு - 5.1 கி. 1 பலம் - 41 கி. (35 கி.) 1 கஃசு அல்லது கைசா - 10.2 கி. 1 தோலா - 12 கி. 1 ரூபாவெடை - 12 கி. 1 அவுன்ஸ் - 30 கி. 1 சேர் - 280 கி. 1 வீசை - 1.4 கி.கி. 1 தூக்கு - 1.7 கி.கி. 1 துலாம் - 3.5 கி.கி. பொன்நிறுத்தல் வாய்ப்பாடு 1 நெல் (எடை)  8.33 மில்லிகிராம் 4 நெல் 1 குன்றிமணி 33.33 மில்லிகிராம் 2 குன்றிமணி 1 மஞ்சாடி 66.67 மில்லிகிராம் 2 மஞ்சாடி 1 பணம்(பணவெடை)* 133.33 மில்லிகிராம் 8 பணம்(பணவெடை) 1 வராகன் 1.067 கிராம் 5 வராகன் 1 கழஞ்சு 5.33 கிராம் 4 கழஞ்சு 1 கஃசு 10.4 கிராம் 4 கஃசு 1 பலம் 41.6 கிராம் 1.5 கழஞ்சு  8 கிராம் குன்றிமணி, வராகனெடை, பலம், வீசை, துலாம் என படிக்கல் கொண்டு தராசிலிட்டு நிறுப்பது நிறுத்தல் அளவை ஆகும். இந்த எடுத்தலளவை பொன்னலளவை,பிற பொருளலளவை என இருவகைப்படுகிறது. நிறுத்தல் அளவுக்கான தராசு ஆறு வகைப்படும். மணித்தராசு - இது இரத்தினம் முதலியவற்றை நிறுக்கும் மிகச் சிறி...

குடும்பனின் பார்வையில்

 கால்டுவெல்லின் 10 பெரும் பிழைகள். 3000 ஆண்டு கல்வி மரபை வரலாற்றில் கொண்டுள்ள தமிழுக்கும் தமிழர்க்கும் இலண்டன் பாதிரியார் கால்டுவெல்லின் புனைவு நூல் அதிகாரமாகிவிட முடியாது. தமிழ் நூல்களைப் படிக்காமலேயே கால்டுவெல் புனைந்தெழுதிய நூல் ஒப்பிலக்கணம்.  இனி: கால்டுவெல்லின் பிழைகள். 1) "தமிழ்" என்பதன் நேர் வடசொல் "திராவிடம்". "திராவிடம்" என்ற வடசொல்லின் திரிவுதான் தமிழ். இப்படிச் சொல்லி, ஆராய்ச்சி செய்யாமல் கால்டுவெல் திராவிடம் என்ற மொழிக்குடும்பத்தை உருவாக்கி, தமிழை அதற்குள் திணித்து, தமிழுக்கும் மூத்த முந்து மொழி, அதாவது Proto-Dravidian மொழி உண்டு எனறு கதை கட்டி விட்டார். அதை நம்பி, தமிழுக்கு எதிரானவரும், திராவிடரும், எங்கேயாவது புரோட்டோ-திராவிடிய ஆதாரம் கிடைக்குமா என்று அலைந்து வருகிறார்.  தமிழிய மொழிக் குடும்பம் என்று தென்னிந்திய மொழிகளை வகைப்பாடு செய்திருந்த தமிழ்ப் புலவர், ஆங்கிலேயர் எல்லீசு உள்ளிட்ட ஆய்வாளர்களைப் புறந்தள்ளி, ஆதாரமில்லாமல் திராவிட மொழிக்குடும்பம், அதற்கு முந்து மொழி உண்டு என்று சொல்ல வேண்டிய தேவை என்ன?  2) தான் கட்டிவிட்ட பொய்யை மெய்யாக்...

குடும்பனின் படிப்பில்

 நமது வருமானம் குறைவாக இருக்கலாம்...  நமது உடல் ஆரோக்கியத்திற்கு, மிக சிறந்த உணவை நம்மால் உண்ணமுடியும். உதாரணமாக-- 1. ரெடிமேடாக விற்கும் நெல்லிக்காய் வத்தல். (தினமும்ஒன்று) 2. விஷம் கலந்துள்ள சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் / நாட்டு சர்க்கரை. 3. பிரிட்ஜில் வைக்காத பொருள்கள். 4. ஒரு கேரட்டுடனும் , (அல்லது) சிறிது தேங்காயுடனும் ஒரு பேரீச்சம் பழத்தை சிறுக சிறுக கடித்து ஒன்றாக சுவைப்பது. (இது --- கண்ணுக்கும், இரத்தம் அதிக மாவதற்கும், அறிவிற்கும், ஞாபக சக்திக்கும் நல்லது.) 5. அதிக கெமிக்கல்கள் உள்ள பாக்கெட் பாலை தவிர்ப்பது நல்லது. 6. தண்ணீராகவே இருந்தாலும் நாட்டு பாலை வாங்க முயற்சிக்கலாமே. 7. முடிந்தவரை பழுப்பு நிறத்தில் உள்ள கல் உப்பை மட்டுமே பயன்படுத்தலாமே. 8. சாதத்தை வடித்து சாப்பிடலாமே. 9. வடித்த கஞ்சியை (வடிதண்ணியை) பழைய சாதம் தயாரிக்க பயன்படுத்தலாமே. 10. இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்கும் பாத்திரத்தை, குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு வருக்கும் தனித்தனியாக வைத்து பயன் படுத்தலாமே. 11. ஒரு நாளின் எல்லா நேரத்திலும், கீழே கண்டபடி சுவாசித்து பழகலாமே. வேகமாக தொப்புள் வழியே காற...