குடும்பனின் பயன்பாட்டில்

 *பண்டைத் தமிழர் அளவை முறைகள்*

நிறுத்தலளவை

1 உளுந்து (grain) - 65 மி. கி.

1 குன்றிமணி - 130 மி. கி.

1 மஞ்சாடி - 260 மி.கி.

1 மாசம் - 780 மி.கி.

1 பனவெடை - 488 மி.கி

1 வராகனெடை - 4.2 கி.

1 கழஞ்சு - 5.1 கி.

1 பலம் - 41 கி. (35 கி.)

1 கஃசு அல்லது கைசா - 10.2 கி.

1 தோலா - 12 கி.

1 ரூபாவெடை - 12 கி.

1 அவுன்ஸ் - 30 கி.

1 சேர் - 280 கி.

1 வீசை - 1.4 கி.கி.

1 தூக்கு - 1.7 கி.கி.

1 துலாம் - 3.5 கி.கி.

பொன்நிறுத்தல் வாய்ப்பாடு

1 நெல் (எடை) 

8.33 மில்லிகிராம்

4 நெல் 1 குன்றிமணி 33.33 மில்லிகிராம்

2 குன்றிமணி 1 மஞ்சாடி 66.67 மில்லிகிராம்

2 மஞ்சாடி 1 பணம்(பணவெடை)* 133.33 மில்லிகிராம்

8 பணம்(பணவெடை) 1 வராகன் 1.067 கிராம்

5 வராகன் 1 கழஞ்சு 5.33 கிராம்

4 கழஞ்சு 1 கஃசு 10.4 கிராம்

4 கஃசு 1 பலம் 41.6 கிராம்

1.5 கழஞ்சு 

8 கிராம்


குன்றிமணி, வராகனெடை, பலம், வீசை, துலாம் என படிக்கல் கொண்டு தராசிலிட்டு நிறுப்பது நிறுத்தல் அளவை ஆகும். இந்த எடுத்தலளவை பொன்னலளவை,பிற பொருளலளவை என இருவகைப்படுகிறது.

நிறுத்தல் அளவுக்கான தராசு ஆறு வகைப்படும்.

மணித்தராசு - இது இரத்தினம் முதலியவற்றை நிறுக்கும் மிகச் சிறிய தராசு

பொன் தராசு - தங்கம் போன்றவைகளை நிறுக்கும் சிறு தராசு

உலோகத் தராசு - செம்பு, பித்தளை முதலியவற்றை நிறுக்கும் பெருந் தராசு

பண்டத் தராசு - பலசரக்குகளை நிறுக்கும் தராசு

கட்டைத் தராசு - விறகு அல்லது மூட்டைகளை நிறுக்கும் தராசு. இது இரு புறமும் சதுர மரப்பலகைகளைத் தட்டுக்களாகக் கொண்டிருக்கும்.

தூக்கு - காய்கறிகளை நிறுக்கும் தராசு. இது மரக்கம்பாலான துலாக் கோலின் ஒரு பக்கத்தில் மட்டும் தொங்கும் கூடைத் தட்டால் ஆனது.

பண்டங்கள் நிறுத்தல் வாய்ப்பாடு

பொன் அதிகமாக இருப்பினும், இந்த அளவையே பின்பற்றப்பட்டது.

32 குன்றிமணி 1 வராகன் 1.067 கிராம்

10 வராகனெடை 1 பலம் 10.67 கிராம்

8 பலம் 1 சேர் 85.33 கிராம்

5 சேர் 1 வீசை 426.67 கிராம்

1000 பலம் 1 கா 10.67 கிலோகிராம்

6 வீசை 1 துலாம் 2.560 கிலோகிராம்

8 வீசை 1 மணங்கு 3.413 கிலோகிராம்

20 மணங்கு 1 கண்டி (பாரம்) 68.2667 கிலோகிராம்


அளவுக்கற்கள் பற்றிய விவரங்கள்

அரசு முத்திரை இட்ட அளவுக்கல்லானது, குடிஞைக்கல், பாடிக்கல், பண்டாரக்கல் என்னும் பெயர்களுள் ஒன்றாற் குறிக்கப்பட்டது. அதே அளவுக்கல்லானது, நகரங்களில் நகரக்கல் எனப்பட்டது.

பேரளவான பொன்னை நிறுக்க ஆணிக்கல்லும், மிகப்பேரளவான பொன்னை நிறுக்க, துலாம் கணக்கும் பயன்படுத்தப்பட்டது.

எடுத்தல் அளவை

எடுத்தல் என்பது எடுத்து நிறுத்தல். எடுத்தலளவையில் பொன்னும் மணியும் நிறுக்க ஒன்றும், பிற பொருள்களை நிறுக்க ஒன்றுமாக இருவகையுண்டு. பொன்நிறை யளவைக்குப் பொன்னிலக்கம் என்று பெயர். பொன் ஏராளமா யிருப்பின், அதுவும் பிற பொருள்போல் நிறுக்கப்படும்.

4 நெல் - 1 குன்றிமணி

2 குன்றிமணி - 1 மஞ்சாடி

2 மஞ்சாடி - 1 வல்லம் (பணத்தூக்கம்)

10 வல்லம் - 1 கழஞ்சு (1/6 அவுன்சு)

தானியங்கள் நிறுத்தல் வாய்ப்பாடு

1 குணம் - மிகச் சிறிய அலகு ஆகும்.

9 குணம் - 1 மும்மி

11 மும்மி - 1 அணு

7 அணு - 1 இம்மி

7 இம்மி - 1 உமிநெல்

7 உமிநெல் - 1 சிட்டிகை

1 செவிடு - 360 நெல்

5 செவிடு - 1 ஆழாக்கு

2 ஆழாக்கு - 1 உழக்கு

2 உழக்கு - 1 உரி

2 உரி - 1 படி

8 படி - மரக்கால் (குறுணி)

2 மரக்கால் - 1 பதக்கு

2 பதக்கு - 1 தூணி

5 மரக்கால் - 1 பறை

80 பறை - 1 கரிசை

96 படி - 1 கலம்

120 படி - 1 பொதி(மூட்டை)

21 மரக்கால் - 1 கொட்டை

22 மரக்கால் - 100 கிராம்

1 படிக்கு

அவரை = 1,800

மிளகு = 12,800

நெல் = 14,400

பயறு = 14,800

அரிசி = 38,000

எள் = 1,15,000

முகத்தலளவை

1 செவிடு - 360 நெல்

5 செவிடு - 1 ஆழாக்கு (168 மி.லி)

2 ஆழாக்கு - 1 உழக்கு (336 மி.லி)

2 உழக்கு - 1 உரி (672 மி.லி)

3 உழக்கு - மூவுழக்கு (1008 மி.லி)

2 உரி - 1 நாழி (1.344 லி)

4 நாழி (படி) - 1 குறுணி (மரக்கால்) (5.376 லி)

2 குறுணி - 1 பதக்கு (10.752 லி)

1 முக்குறுணி - 3 குறுணி (16.128 லி) - 11/2 பதக்கு

1 தூணி - 2 பதக்கு (21.504 லி)

1 கலம் - 3 தூணி (64.512 லி)

5 மரக்கால் - 1 பறை

80 பறை - 400 மரக்கால் - 1 கரிசை

1 பாரம் - 500 lb

கரண்டி அளவுகள்

1 தேக்கரண்டி - 4 மி.லி

1 குப்பி - 175 தேக்கரண்டி ( 700 மி.லி)

1 தீர்த்தக்கரண்டி - 1.33 மி.லி

1 நெய்க்கரண்டி - தேக்கரண்டி (4.0 மி.லி)

1 உச்சிக்கரண்டி - 4 தேக்கரண்டி (16 மி.லி)

1 மேசைக்கரண்டி - 4 தேக்கரண்டி (16 மி.லி)

1 பாலாடை - 30 மி.லி

1 எண்ணெய்க்கரண்டி - 8 பாலாடை (240 மி.லி)

முகத்தல் (நீர்ம) வாய்ப்பாடு

5 செவிடு = 1 ஆழாக்கு

2 ஆழாக்கு = 1 உழக்கு

2 உழக்கு = 1 உரி

2 உரி = 1 படி

8 படி = 1 குறுணி (மரக்கால்)

2 குறுணி = 1 பதக்கு

2 பதக்கு = 1 தூணி


படி (நாழி)

பால், மோர், நெய் போன்ற நீரியல் பொருளை உழக்கு படிகளால் மொண்டு எடுத்து அளப்பது முகத்தல் அளவை ஆகும். முகந்து அளக்கப்படும் பொருள்களுள், நெல் பெரும்பான்மையாகவும், சிறந்ததாகவுமிருத்தல் பற்றி, முகத்தலளவை நெல்லிலக்கம் எனப்படும்.

முகத்தலளவை அலகுகள்

2செவிடு = பிடி

5செவிடு = 1 ஆழாக்கு

2ஆழாக்கு = 1 உழக்கு

2உழக்கு = 1 உரி

2உரி = 1 நாழி

8நாழி = 1 குறுணி(மரக்கால்)

2குறுணி = 1பதக்கு

2பதக்கு = 1தூணி(காடி)

3தூணி = 1 கலம்

400குறுணி = 1 கரிசை (பறை)

தனி முகத்தலளவைகள்

அரசு முத்திரையிட்ட அளவை நாழியும் மரக்காலும், அரச பண்டாரத்தில் அரசன் பெயரினைத் தாங்கியிருந்தன.

(எடுத்துக்காட்டு:சோழாந்தகன் நாழி, அருண்மொழித்தேவன் மரக்கால்)[2]

கோயிற் பண்டாரத்தில் தெய்வப்பெயரினைத் தாங்கியிருந்தன. (எடுத்துக்காட்டு:ஆடவல்லான் மரக்கால்,செப்புக்கால் திருச்சிற்றம்பலமுடையான் மரக்கால்)

ஒவ்வொரு நாட்டிற்கும், சிறப்பான பெருமுகத்தலளவும் உண்டு.

21மரக்கால் = கோட்டை என பாண்டி நாட்டில் அழைக்கப்பட்டது.

40மரக்கால் = புட்டி என வடசோழநாட்டில் அழைக்கப்பட்டது.

கால வாய்ப்பாடு / தெறிப்பு அளவை

நொடி, நாழிகை, நாள் என காலத்தைக் கணிப்பது தெறிப்பு அளவை ஆகும்.

1 குழி (குற்றுழி) = 6.66 மில்லி செகன்ட் (கார்த்திகை நாள்மீன் ஒரு முறை மின்னும் நேரம்)

10 குழிகள் = 1 கண்ணிமை (66.6666 மில்லி செகன்ட்)

2 கண்ணிமை = 1 கைநொடி (0.125 செகன்ட்)

2 கைநொடி = 1 மாத்திரை (0.25 செகன்ட்)

6 கண்ணிமை = 1 சிற்றுழி (நொடி) (0.40 செகன்ட்) (ஒரு நீருள்ள பாத்திரத்தில் மூங்கில் குழலால் ஊதும் பொழுது ஏற்படும் குமிழியானது ஒரு சாண் அளவு உயரும் நேரம்)

2 மாத்திரை = 1 குறு (0.5 செகன்ட்)

2 நொடி = 1 வினாடி (0.8 செகன்ட்) ஒரு மனிதனின் இதயம் ஒரு முறை துடிக்கும் நேரம்

2 குறு = 1 உயிர் (1 செகன்ட்)

5 நொடிகள் = 2 உயிர் = 1 சாணிகம் = 1/2 அணு (2 செகன்ட்)

10 நொடிகள் = 1 அணு ( 4 செகன்ட்)

6 அணு = 12 சாணிகம் = 1 துளி = 1 நாழிகை வினாடி (24 செகன்ட்)

10 துளிகள் = 1 கணம் (4 நிமிடம்)

6 கணம் = 1 நாழிகை (24 நிமிடம்)

10 நாழிகை = 4 சாமம் = 1 சிறுபொழுது = 240 நிமிடம் = 4 மணிநேரம்

6 சிறுபொழுது = 1 நாள் = 24 மணிநேரம்

7 நாள் = 1 கிழமை (1 வாரம்)

2 1/2 நாழிகை = 1 ஓரை

3 3/4 நாழிகை = 1 முகூர்த்தம்

2 முகூர்த்தம் = 1 சாமம்

4 சாமம் = 1 பொழுது

2 பொழுது = 1 நாள்

15 நாள் = 1 அழுவம் (பக்கம்)

29.5 நாள் = 1 திங்கள் (30 நாள் = 1 மாதம்)

2 திங்கள் = 1 பெரும்பொழுது

6 பெரும்பொழுது = 1 ஆண்டு

64 ஆண்டு = 1 வட்டம்

4096(=8^4) = 1 ஊழி


சிறுபொழுது

காலை - முதல் சிறுபொழுது - 1 சாமம் முதல் 4 சாமம் வரை ( 6 முதல் 10 மணி வரை)

நண்பகல் - இரண்டாம் சிறுபொழுது - 5 சாமம் முதல் 8 சாமம் வரை (10 முதல் 2 மணி வரை)

ஏற்பாடு - மூன்றாம் சிறுபொழுது - 9 சாமம் முதல் 12 சாமம் வரை (2 முதல் 6 மணி வரை)

மாலை - நான்காம் சிறுபொழுது - 13 சாமம் முதல் 16 சாமம் வரை (6 முதல் 10 மணி வரை)

இடையாமம் - ஐந்தாம் சிறுபொழுது - 17 சாமம் முதல் 20 சாமம் வரை (10 முதல் 2 மணி வரை)

வைகறை - ஆறாம் சிறுபொழுது - 21 சாமம் முதல் 24 சாமம் வரை (2 முதல் 6 மணி வரை)

பெரும்பொழுது

கார் - ஆவணி, புரட்டாசி

கூதிர் - ஐப்பசி, கார்த்திகை

முன்பனி - மார்கழி, தை

பின்பனி - மாசி, பங்குனி

இளவேனில் - சித்திரை, வைகாசி

முதுவேனில் - ஆனி, ஆடி

நீள வாய்ப்பாடு

1 மரக்கால் வேலைபாடு (நெல் நடவுக்கு தேவையான விதைகள்) - 8 சென்ட்

12.5 மரக்கால் வேலைபாடு - 100 சென்ட் - 1 ஏக்கர்

40 மரக்கால் = 1 புட்டி

4840 சதுர கெசம் = 1 ஏக்கர்

436 குழி = 1 ஏக்கர்

5 பர்லாங்கு = 1 கிலோமீட்டர்

8 பர்லாங்கு = 1 மைல்

1 குழி - 100 சதுர அடி

1 மா - 100 குழி (10000 சதுர அடி)

1 காணி - 4 மா (40000 சதுர அடி = 92 சென்ட் = 0.92 ஏக்கர்) - 400 குழி

1 வேலி - 7 காணி (6.43 ஏக்கர் = 2.6 ஹெக்டர்)

1 பர்லாங்கு - 220 கெசம் (660 அடி)

1 நிலம் (ground) - 2400 சதுர அடி - 5.5 சென்ட் - 223 சதுர மீட்டர்

10 கோன் - 1 நுண்ணணு

10 நுண்ணணு - 1 அணு

8 அணு - 1 கதிர்த்துகள்

8 கதிர்த்துகள் - 1 துசும்பு

8 துசும்பு - 1 மயிர்நுணி

8 மயிர்நுணி - 1 நுண்மணல்

8 நுண்மணல் - 1 சிறுகடுகு

8 சிறுகடுகு - 1 எள்

8 எள் - 1 நெல் (paddy)

8 நெல் (paddy) - 1 விரல் (finger) - 8^8 அணு - 1.944 சென்டிமீட்டர்

12 விரல் (finger) - 1 சாண் - 100 இம்மி - 23.3333 சென்டிமீட்டர்

2 சாண் - 1 முழம் - 46.6666 சென்டிமீட்டர்

2 முழம் - 1 கெசம்

4 முழம் - 1 பாகம்

625 பாகம் - 1 காதம் - 5000 சாண் - 1166.66 சென்டிமீட்டர் - 1.167 கிலோமீட்டர்

4 காதம் - 1 யோசனை

வழியளவை

8 தோரை(நெல்) = 1 விரல்

12 விரல் = 1 சாண்

2 சாண் = 1 முழம்

4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்

2000 தண்டம் = 1 குரோசம் (2 1/4மைல்)

4 குரோசம் = 1 யோசனை

71/2 நாழிகைவழி = 1 காதம் (10 மைல்)

நிலவளவை

இது குழிக்கணக்கு எனப்படும். அவை வருமாறு;-

16 சாண் = 1 கோல் = பெருங்கோல்

18 பெருங்கோல் = 1 குழி (square yard)

100 குழி = 1 மா

240 குழி = 1 பாடகம்

20 மா = 1 வேலி (land measure)


செய் என்ற ஒரு நில அளவு, சங்க காலத்தில் இருந்தது.

நிலவரி முறை - நிலவரியை கணிக்க நிலவளவை நடத்தின அதிகாரி உலகளந்தான் எனப்பட்டான்.

அவன் கையாண்ட அளவுகோல், உலகளந்த கோல் எனப்பட்டது.

இம்முறை முதலாம் இராசராசன் காலத்தில் ஒரு முறையும்,முதற் குலோத்துங்கன் காலத்தில் ஒருமுறையும், மூன்றாங்குலோத்துங்கன் காலத்தில் ஒரு முறையும் அளக்கப்பட்டது.

இறையிறுக்குங்கோல், குடிதாங்கிக் கோல் எனப்படும் அளவைகள், நாட்டின் எல்லை மாறும் போதெல்லாம் அளக்க பயன்பட்டது.

நிலங்கள் மிக நுட்பமாக அளக்கப்பட்டன.

எடுத்துக்காட்டு

“ ஆக இறையிலி நீங்கு நிலம் முக்காலே

இரண்டு மாக்காணி அரைக்காணி

முந்திரிகைக்கீழ் அரையே இரண்டுமா

முக்காணிக் கீழ் முக்காலே நான்குமா

அரைக்காணி முந்திரைக் கீழ்

நான்கு மாவினால்

இறை கட்டின காணிக்கடன்"(சோ.,பக்.58) ”

- இதில் குறிக்கப்பட்ட நில அளவு 1/52,428,800,000 வேலி.

எண்ணல் அளவை

ஒன்று, இரண்டு, மூன்று என்ற எண்ணாகவோ வீசம், அரைக்கால், கால் என்ற இலக்கமாகவோ, அல்லது பதாதி சேனாமுகம், குமுதம் எனத் தொகையாகவோ எண்ணிக் கணக்கிடுவது எண்ணல் அளவை ஆகும்.இந்த எண்ணலளவை சிற்றிலக்கம்,பேரிலக்கம் என இருவகைப்படுகிறது.

பேரிலக்கம்

Oldtamilcharactersold.jpg


1 - ஒன்று

2 - இரண்டு

3 - மூன்று

4 - நான்கு

5 - ஐந்து

6 - ஆறு

7 - ஏழு

8 - எட்டு

9 - ஒன்பது

10 - பத்து

100 - நூறு

1000 - ஆயிரம்

எண் வாய்பாடு

10கோடி - 1அற்புதம்

10அற்புதம் - 1நிகற்புதம்

10நிகற்புதம் - 1கும்பம்

10கும்பம் - 1கணம்

10கணம் - 1கற்பம்

10கற்பம் - 1நிகற்பம்

10நிகற்பம் - 1பதுமம்

10பதுமம் - 1சங்கம்

10சங்கம் - 1சமுத்திரம்

10சமுத்திரம் - 1ஆம்பல்

10ஆம்பல் - 1மத்தியம்

10மத்தியம் - 1பரார்த்தம்

10பரார்த்தம் - 1பூரியம்

சிற்றிலக்கம்

அரை கால், அரைக்கால் வீசம்(மாகாணி) முதலிய பின்னவெண்கள் சிற்றிலக்கம் எனப்படும். சிற்றிலக்கத்தில் கீழ்வாயிலக்கமென்றும், மேல்வாயிலக்கமென்றும் இருவகையுண்டு.

கீழ்வாய்ச் சிற்றிலக்கத்தோடு ஒப்பு நோக்கியே, அரை, கால்,அரைக்கால் முதலியன மேல்வாய்ச் சிற்றிலக்கமெனப்படும்.

மேல்வாயிலக்கம்

மேல்வாயிலக்கம் என்பதில் அடங்கும் அலகுகள்

3/4 - முக்கால்

1/2 - அரைக் கால்

1/4 - கால்

1/5 - நாலுமா

3/16 - மூன்று வீசம்

3/20 - மூன்றுமா

1/8 - அரைக்கால்

1/10 - இருமா

1/16 - மாகாணி(வீசம்)

1/20 - ஒரு மா

3/64 - முக்கால் வீசம்

3/80 - முக்காணி

1/32 - அரைவீசம்

1/40 - அரைமா

1/64 - கால் வீசம்

1/80 - காணி

3/320 - அரைக்காணி முந்திரி

1/160 - அரைக்காணி

1/320 - முந்திரி

மா

பரப்பளவில் மா என்பது ஒரு வேலியில் 1/20 ஒரு நில அளவான காணி அதிற் காற்பங்காயிருந்திருக்கலாம். இவ் வீரளவைப் பெயர்களும் நீட்டலளவையினின்று எண்ணலள வைக்கு எடுத்தாளப் பெற்றதாகத் தெரிகின்றது. மாத்தல் என்பது ஒரு வழக்கற்ற வினை. மாத்தல் அளத்தல். மா+அனம் = மானம் = அளவு, படி (மேலைவடார்க்காட்டு வழக்கு). மா+திரம் = மாத்திரம்-மாத்திரை.

காணி

காணி காணிக்கப்பட்ட நிலஅளவு. காணித்தல்- மேற்பார்த்தல்.

வீசம்

பிசு-விசு-விசுக்கு-விசுக்காணி = சிறியது. விசு-வீசம்=சிற்றளவு. மாவும் காணியும் சேர்ந்தது மாகாணி.

முந்திரி

முந்திரி என்னும் சொல் ஒரு சிற்றெண்ணையும் ஒரு பழவகையையுங் குறிக்கும். முந்திரிப்பழத்தின் கொட்டை பழத்திற்கு வெளியே முன் துருத்திக்கொண்டிருப்பதால், அப் பழம் அப் பெயர் பெற்றது. முன்+துரி = முந்துரி-முந்திரி-முந்திரிகை. முந்து உருத்தது முந்திரி என்றுமாம். உருத்தல்-தோன்றுதல். முந்திரி என்னும் கீழ்வாயிலக்கப் பெயரும் முந்தித் தோன்றியதென்னும் பொருளதே.

கீழ்வாயிலக்கம்

கீழ்வாயிலக்கம் என்பதில் அடங்கும் அலகுகள்.

கீழ்வாய் இலக்கத்தின் எண்மதிப்பு கீழ்வாய் இலக்கத்தின் பெயர்

1/640 கீழரை

1/640 கீழரை

1/280 கீழ்க்கால்

1/2560 கீழரைக்கால்

1/5120 கீழ் வீசம்

1/102400 கீழ் முந்திரி

1/1075200 இம்மி

1/23654400 மும்மி

1/165580800 அணு

1/1490227200 குணம்

1/7451136000 பந்தம்

1/44706816000 பாகம்

1/312947712000 விந்தம்

1/5320111104000 நாகவிந்தம்

1/74481555456000 சிந்தை

1/489631109120000 கதிர்முனை

1/9585244364800000 குரல்வளைப்படி

1/575114661888000000 வெள்ளம்

1/57511466188800000000 நுண்மணல்

1/2323824530227200000000 தேர்த் துகள்


இம்மி

இம்மி என்பது மிகச் சிறிதான மத்தங்காய்ப் புல்லரிசி. அது எள் தினை என்பனபோல் சிற்றளவைப் பொருளாயிற்று. சிறுமையை யுணர்த்தும் இல் என்னுஞ் சொல்லினின்று, இம்மி யென்னும் பெயர் தோன்றியிருக்கலாம்.[3]

எண் கூற்று வாய்ப்பாடு

1 இம்மி 11 மும்மி

11 மும்மி 7 அணு

1 அணு 9 குணம்

1 குணம் 5 பந்தம்

1 பந்தம் 6 பாகம்

1 பாகம் 7 விந்தம்

7 விந்தம் 17 நாகவிந்தம்

1 நாகவிந்தம் 60 வெள்ளம்

1 குரல்வளைப்படி 60 வெள்ளம்

1 வெள்ளம் 100 நுண்மணல்

சார்த்தல்

சுரம், ஒலி, நிறம், உரு முதலியவற்றைக் கூறி “இப்படி”, “அதைப்போல” என்று ஒப்பிட்டு அளப்பது சார்த்தல் அளவை ஆகும்.

நாணயம்

1 பல் - 0.9 உளுந்து (கிரைன்)

8 பல் - 1 செங்காணி (செப்பு) - 7.2 உளுந்து (கிரைன்)

0.25 செங்காணி - 1 கால் காணி - 1.8 உளுந்து (கிரைன்)

64 பல் - 1 காணப்பொன் (காசுப்பணம் (பொன்)) - 57.6 உளுந்து (கிரைன்)

1 இரோமானிய தினாரியம் 2 காணப்பொன்னுக்கும், 1 செங்காணிக்கு கொடுத்து வர்த்தகம் செய்யப்பட்டது - 124 உளுந்து (கிரைன்)

12 பை - 1 அணா

16 அணா - 1 ரூபாய்

பிற்கால அளவை

1 அணா - 3 துட்டு

1/4 அணா - 3/4 துட்டு

4 அணா - 25 பைசா

8 அணா - 50 பைசா

பணம் - வெள்ளிக்காசு துட்டு - செப்புக்காசு. நன்றி

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்