Posts

Showing posts from December, 2025

குடும்பனின் பார்வையில்

 வாழையை மனித உயிருக்கு ஒப்பாக கருதும் நாகரிகம் கொண்ட தமிழர்கள் மத்தியில், தலை வாழையில் பயன்பாட்டுக்காக இலைகள் கூட அறுக்க சம்மதிக்காக சமூகத்தில் ஒரு கும்பல் மட்டும் எந்தவித நாகரிகத்திற்கும் பொருந்தி போகாமல், தார்மீகம் என்ற எந்த அறத்திற்கும் ஒத்து போகாமல் இன்னும் காட்டு வாழ்க்கையே வாழ்வோம், வேட்டை பழங்குடியாகவே எங்கள் மரபை கடத்துவோம் என்று சொல்வார்களேயானால், அவர்கள் செயல் இப்படித்தான் இருக்கும்,  பாவம் அவர்களால் எப்படி நவீன சமூகத்தோடு கலந்து வாழ முடியும்....!?! நன்றாக சிந்தித்து பாருங்கள், உங்கள் மரபணுவுக்கு ஒவ்வாத, உங்கள் #மனம் ஏற்காத ஒரு செயலை உங்களால் செய்ய முடியுமா.....??? நீங்கள் ஒரு விவசாயியாகவோ அல்லது ஒரு தச்சராகவோ இருக்கிறீர்கள், இனிமேல் நீங்கள் வேளாண்மை செய்ய கூடாது, கலப்பை செய்ய கூடாது, திருடத்தான் வேண்டும் என்று சொன்னால் உங்களால் முடியுமா? அப்படியே பின்னணி புரியாமல் நீங்கள் திருடவே முயற்சித்தாலும் முதல் திருட்டிலேயே நீங்கள் வசமாக சிக்கிக் கொள்வீர்கள்,  ஆனால் திருட்டையே பரம்பரை தொழிலாக செய்யும் ஒருவன் பார்ச்சூனர் கார் வாங்குகிற அளவுக்கு திருடி சேர்த்திருந்தாலும்...

குடும்பனின் பார்வையில்

 என்ன கற்றுக்கொடுக்கும் இதயவன வாழ்வியல்?  💜 கூட்டு குடும்பத்தினருடன் ஒரே வாசலில் உறங்க கற்றுக் கொடுக்கும். ❤️ சககுடும்பத்தின ருடன் விண்ணை இரசிக்க கற்றுக்கொடுக்கும். 🧡 குரட்டை சத்தத்தை மீறி உறங்குவதை கற்றுக்கொடுக்கும். 🩷 காட்டுக்குள் சென்று மலம் கழிக்க கற்றுக் கொடுக்கும். 🩶மழை, காற்று, பனி,  புழுக்கம் என எந்த சூழல் வந்தாலும் எப்படி வாழ்வது என்பதை கற்றுக்கொடுக்கும். 🩵 தனது Comfort zone  எனும் சிறையை மீறி சுதந்திரமாக வாழ கற்றுக்கொடுக்கும். 🖤 மின்விளக்கில்லா இரவு எப்படி இருக்கும் என கற்றுக்கொடுக்கும். 🤎 இரவில் தைரியத்தை கற்றுக்கொடுக்கும். 🤍காற்றின் இசையை கற்றுக்கொடுக்கும். 💚 குறைந்த வளங்களை கொண்டு நிறைவாக வாழ  கற்றுக்கொடுக்கும். 💛 பயமில்லாமல் குழந்தைகள் இருட்டில் விளையாட கற்றுக்கொடுக்கும் 🤎 வேப்பங்குச்சியில் பல் துலக்க கற்றுக்கொடுக்கும் 🩵 அதி காலையில் உடம்பை சூடாக்கி குளிர்ந்த தண்ணியில் இதமாய் குளிப்பதை கற்றுக்கொடுக்கும் ❤️ குழந்தைகள் சக குழந்தைகளோடு விளையாட கற்றுக்கொடுக்கும்   💙 குழந்தைகளுக்கு ஒற்றுமையை , பொறுமையை கூட்டுவாழ்க்கையை கற்றுக்கொடுக்கும...

குடும்பனின் பார்வையில்

 * *ஒரு கட்சிக்குப் பந்தம் பிடிப்பதால் மட்டும்,  யாவரும் நேர்மையாளர்கள் அல்ல.** * நெல்லுக்கு இறைத்த நீர், புல்லுக்குப் பாய்ந்தது போல, பதவிப் பித்துகள் பலருக்கு அப்பதவி பற்றி எதுவுமே தெரியாததே மள்ளர்களின் பரிதாபம்.      * *அரசியல் அதிகாரத்துக்காக மேலே இருப்பவனுக்குப் பந்தம் பிடித்தே இந்த மள்ளரெனும் தேவேந்திரகுல வேளாளர்களின் மாண்பு அழிந்து போனது.**  * *சரித்திரம் கண்ட மண்ணில்,  தகுதியற்ற தரித்திரங்கள் பல* *குதிரையேறியது.** * *நான் மட்டும் தான் இந்த சாதிய தலைவனென்று ஒட்டு வேஷம் கட்டி சமூக மக்களைக்கூட்டி* *பகடையாடியது* *ஒவ்வொரு தேர்தலிலும் சம்மணமட்டு  பெட்டி தூக்கி போனவர்களே* *அதிகம்** *அதிகார அரசியலையோ ஆளுமையின் அதிகார  சுவையும் தவிர்த்து *அடிமைசாசனமே இந்த சமூகத்தின் சான்றிதழென்று மேடை தோறும் கூடிக்* *கொக்கரித்து தன்னிருப்பை மட்டுமே வளர்த்தவனை* இந்த சமூகமே தூக்கி எறிந்து பாடமும் புகட்டியது.   *இந்த குடும்பனின் வரலாற்றை  கற்றுக்கொடுங்கள் போதும்.*   *அவன் தானாகவே அதிகாரத்தை தூக்கி நிற்பான்.*  மள்ளர்களே !! * **காலம் பல...

குடும்பனின் பார்வையில்

 ✒️..அரசியல் என்பது சாக்கடை அல்ல!!!! நொதித்த உரம்..!!!!! ....அவர்கள் மாதிரி அஞ்சாமல், நா கூசாமல் மேடைகளில் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்.. அரசியல் என்பது நீதியின் கைகளைப் பிடித்து நடப்பதல்ல... முதலில் ஒன்றாகக் கூட வேண்டும். நல்லதோ கெட்டதோ உண்மையோ பொய்யோ தலைவர் சொல்வதை விமர்சிக்காமல் பின்பற்ற வேண்டும்.. ஊர் அம்பலம் செய்யும் மரத்தடியில் ஒன்றுகூடி ஆடு திருட ஒரு கிராமமே செல்லும். மனைவி மார்கள் தங்கள் கணவன் மார்கள் வேட்டைக்குச் செல்வதைப் போன்ற மனநிலையில் குதூகலத்தில் இருப்பார்கள்... எப்படியும் ஆட்டுக்குட்டிகளோடு வருவார்கள் கசாப்பு உறுதி  என்ற முழு நம்பிக்கையில் மிளகாய் சாந்து  அரைத்து வைத்துக் காத்திருப்பார்களாம். இது கதையல்ல நடந்தவை.... அரசியல் என்பது ஆடு திருடுகிற சம்பவங்களுக்கு நிகரானதுதான். திருடப்போகிற போது எதுவும் நடக்கும்.. எதிர்ப்பு , பதுங்குதல், அடிதடி, விரட்டினால் திரும்பி உயிர் தப்பி ஓடுதல், அவமானப் பேச்சுகளை இடது புறங்கையால் தட்டிக் கடந்து போதல்- என எல்லாம் நடக்கும்.  திருட்டும், கொள்ளையிடலும் அவமானம் அல்ல; வீர வரலாறாகத்தான் பேசப்படுகிறது.. அவர்கள் அரசியலுக்கும் ல...

குடும்பனின் படிப்பில்

 *தமிழ்நாடு சட்டமன்றப்‌ பொதுத் தேர்தல்களின் சுருக்கமான வரலாறு* இந்திய ஜனநாயகத்தின் சோதனைக் களமாகவும், சமூக நீதியின் விளைநிலமாகவும் திகழ்கிறது தமிழ்நாடு. 1952ல் தொடங்கி 2021 வரை நடந்துள்ள 16 சட்டமன்றப் பொதுத் தேர்தல்களும் அவற்றின் முடிவுகளும் வெறும் ஆட்சி மாற்றங்களுக்கு மட்டுமானதல்ல, அவை தமிழ்ச் சமூகத்தின் சிந்தனை மாற்றங்களை உணர்த்தும் குறியீடுகள். தேசிய நீரோட்டத்தில் தொடங்கி, திராவிட இயக்கத்தின் எழுச்சி, திரைப்பட ஆளுமைகளின் தாக்கம், நலத்திட்ட அரசியல் என இந்திய கூட்டாட்சி அரசியல் பரிணாமத்தின் சுருக்கம். 1. முதல் சட்டமன்றத் தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் பொற்காலம் தொடங்கியது(1952) சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் 1952ல் நடைபெற்றது. மூதறிஞர் ராஜாஜி மற்றும் கர்மவீரர் காமராஜர் போன்ற பெருந்தலைவர்களின் வியூகத்தால் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த திமுக, தேர்தலில் போட்டியிடாமல் ஆதரவு நிலைப்பாட்டை மட்டும் எடுத்த காலகட்டம்.   2. இரண்டாவது சட்டமன்றத் தேர்தல்: காங்கிரஸ் அதிகாரம் தொடர்கிறது, திமுகவின் அதிகாரம் தொடங்குகிறது(1957) "தேர்தல் பாதை, திருடர் பாதை...

குடும்பனின் பார்வையில்

Image
சங்க காலத்தில் தமிழர்கள் கார்த்திகை விளக்கு ஏற்றி வழிபட்டதை  அகநானூறு 141 வது பாடலில்  மதுரைப் புலவர் நக்கீரர் அழகாக வர்ணிக்கிறார்.  இல்லத்தை மலர்களால் அலங்கரித்து பல கொண்டைகளையுடைய அடுப்பில் பால் பானையை ஏற்றிப் புதிதாகத் திருமணமான மணமகள் பாலை ஊற்றுகிறாள்.  அதனுடன் தன் ஆயமொடு வயலில் விளைந்த நெற்கதிர்களின் குலைகளை முறித்து அதன் பச்சரிசியை உரலில் இட்டு அவலாக உலக்கை கொண்டு குற்றும் ஓசை கேட்டு வாழை மரத்தில் இருந்த குருகு அஞ்சி ஓடியது.  உலகில் முதன்மையான தொழிலான உழவுத் தொழில் முடிந்து கலப்பைகள் உறங்குகின்றன.  மழைக் காலமும் முடிந்து விட்டது மதியானது தனது நிலப் பரப்பில் குறுமுயல் விளங்க வானில் தோன்றிய நேரத்தில் அத் திங்களுடன் அறுமீனாகிய கார்த்திகை நாள் மீன் சேர்ந்த இருள் அகன்ற நடு இரவில் தெருவெங்கும் விளக்குகளை நிரல்பட ஏற்றியும் மாலைகளைத் தொங்கவிட்டும் பல வெற்றிகளைக் குவித்த பழைமையான ஊரிலே உறவுகள் ( குடும்பர்கள்) ஒருங்கு சேர்ந்து விழவினைக் கொண்டாடும் நாளில் நம்மொடு கொண்டாடத் தலைவர் வருவார் என்று அழகாக வர்ணிக்கிறார். இதில் கவனிக்க வேண்டியது  இன்று மணமானவர்கள்...