குடும்பனின் பார்வையில்
என்ன கற்றுக்கொடுக்கும் இதயவன வாழ்வியல்?
💜 கூட்டு குடும்பத்தினருடன் ஒரே வாசலில் உறங்க கற்றுக் கொடுக்கும்.
❤️ சககுடும்பத்தின
ருடன் விண்ணை இரசிக்க கற்றுக்கொடுக்கும்.
🧡 குரட்டை சத்தத்தை மீறி உறங்குவதை கற்றுக்கொடுக்கும்.
🩷 காட்டுக்குள் சென்று மலம் கழிக்க கற்றுக் கொடுக்கும்.
🩶மழை, காற்று, பனி, புழுக்கம் என எந்த சூழல் வந்தாலும் எப்படி வாழ்வது என்பதை கற்றுக்கொடுக்கும்.
🩵 தனது Comfort zone எனும் சிறையை மீறி சுதந்திரமாக வாழ கற்றுக்கொடுக்கும்.
🖤 மின்விளக்கில்லா இரவு எப்படி இருக்கும் என கற்றுக்கொடுக்கும்.
🤎 இரவில் தைரியத்தை கற்றுக்கொடுக்கும்.
🤍காற்றின் இசையை கற்றுக்கொடுக்கும்.
💚 குறைந்த வளங்களை கொண்டு நிறைவாக வாழ கற்றுக்கொடுக்கும்.
💛 பயமில்லாமல் குழந்தைகள் இருட்டில் விளையாட கற்றுக்கொடுக்கும்
🤎 வேப்பங்குச்சியில் பல் துலக்க கற்றுக்கொடுக்கும்
🩵 அதி காலையில் உடம்பை சூடாக்கி குளிர்ந்த தண்ணியில் இதமாய் குளிப்பதை கற்றுக்கொடுக்கும்
❤️ குழந்தைகள் சக குழந்தைகளோடு விளையாட கற்றுக்கொடுக்கும்
💙 குழந்தைகளுக்கு ஒற்றுமையை , பொறுமையை கூட்டுவாழ்க்கையை கற்றுக்கொடுக்கும்
❤️ குழந்தைகளுக்கு தாத்தா பாட்டி சித்தி சித்தப்பா மாமா அத்தை என உறவுகளின் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுக்கும்
🤍 பகிர்ந்து உண்ண, பரிமாற கற்றுக்கொடுக்கும்.
💛 விளக்கொளியில் ஆழ்ந்த உறக்கத்தை கற்றுக்கொடுக்கும்.
இன்னும் பல....
Comments
Post a Comment