Posts

Showing posts from September, 2023

பதக்கை கெடுத்துச்சாம் குறுணி

 குடும்பனின் பார்வையில் 1.10.2023 ✒️பதக்கை கெடுத்துச்சாம் குறுணி...!!!!!! தேவேந்திரகுல வேளாளர் என்று அரசாணையே கிடைக்காது என்று ஊளை இட்டவர்களை அறிவோம். அவர்கள் எல்லாம் இப்போது இருக்கிற இடம் தெரியாமல் மக்கிப்போய்விட்டார்கள். ஒரு சில தேவேந்திரர்கள் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக பட்டியல் வெளியேற்றத்தையும் எதிர்க்கிறார்கள்.. தேவேந்திரகுல வேளாளர் என்று அடையாளப்படுத்த விரும்பாதவர்களுக்கு இருக்கிற ஒரே வாய்ப்பு " சாதியற்றவர்" என்று சான்றுபெற்று வாழ்வது மட்டும்தான். காந்தி தாழ்த்தப்பட்ட மக்கள் என்ற ஒரு பிரிவு இருக்கக்கூடாது என்று சொல்லியிருக்கவேண்டும். ஆனால் அரிசன் என்று அடையாளப்படுத்தினார். அந்த முரண்பட்ட அடையாளம் இன்று ஒரு பிரிவு மக்களைக் காலம் நெடுக அவமானப்படுத்துகிறது. "ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலைக்குப் போராடியதைவிடத் தேவேந்திரர்கள் பட்டியல் சமூகத்திலிருந்து விடுதலை பெறப் போராடுகிறோம்..!!!!!* எல்லாருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டாலும் SC க்கு மட்டுமே சலுகை என்ற பிம்பம் பறைசாற்றப்படுகிறது. சலுகை அறிவிப்பு ஒரு புறம் இருந்தாலும் பட்டியல் சமூகமக்களின் முன்னேற்றத்திற்காக ஒதுக்கப்படும...

குடும்பனின் பார்வையில்

 ✒️நிலைக்கதவைப் பூட்டிவிட்டுச் சாவியை நிலை விளிம்பிலேயே வைத்து விட்டுப்போன காலம் இருந்தது உண்மைதான். "உட்பைக்கூடவா திருடுவாங்கனு கடைக்குள்ள வைக்கிறதில்ல அது அந்தக் காலம்..." " இப்ப விக்கிற விலையுல வெளியே வச்சா வச்ச இடம் தான் மிச்சம் இருக்கும் என்பது இந்தக் காலம்." என்றொரு நாட்டுப்புறப்பாடல் என் நினைவுக்கு வருகிறது. அறம் வற்றிப்போனதைத் தினமும் கண்கூடாகக் காண்கிறோம். பக்கத்துவீட்டுக்காரன் பகைகாரனாக இருப்பான். அவன் வீட்டு நெல்பட்டறையை மாடு தின்றால் பகையாளி என்றும் பாராமல் அடுத்தவர்களிடம் கூப்பிட்டு மாட்டை விரட்டச்சொன்ன காலத்தைப் பார்த்திருக்கிறேன். பகைகாரனின் பிள்ளை சேராதவனோடு சேர்ந்து தவறு செய்வதைப் பார்த்தால் அதை அவனது பெற்றோரிடம் தெரிவிக்கச் சொல்லிய அறம் இருந்தது இந்தப் பூமியில்தான். இதெல்லாம் ஏதோ நூறு வருடங்களுக்கு முன்பு வழக்கில் இருந்தது அல்ல.  முப்பது வருடங்களுக்கு முன்புவரை தமிழகக் கிராமங்களில் நடைமுறையில் இருந்தவைதான்.. மூத்தவர்களைக் கண்டால் கையில் உள்ள பீடி சிகரெட்டுகளை மறைத்தார்கள்.. மது அருந்துவதை கண்ணியக் குறைவாகக் கருதினார்கள்.. பெற்றவர்களை விடவும் உறவுக...

குடும்பனின் அவதானிப்பில்

 குடும்பனின் அவதானிப்பில் 30.9.2023 ✒️பாஜக மீது வெறுப்பை உமிழும் கூட்டங்கள் 1992இல் வாச்சாத்தி கிராம மலைவாழ் மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரங்களை அறிந்து கொள்வது அவசியம்.. தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமம்  மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. காடுகள் சூழ்ந்த பகுதியாக இருப்பதால் காடுகளில் உள்ள சந்தன மரங்களை அரசியல்வாதிகளும், வனத்துறையினரும் கூட்டுச் சேர்ந்து கடத்தி விற்றனர்.. மரங்களை வெட்டவும், கூலி வேலை செய்யவும் பயன்படுத்தப்பட்ட மலைக்கிராம மக்கள் மீது சந்தன மரங்களைத் திருடிவிற்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. சந்தன மரங்களை வீடுகளில் பதுக்கிவைத்துள்ளதாக குற்றஞ்சாட்டி மாவட்ட வருவாய்த்துறை, காவல்துறை, வனத்துறை ஆகிய மூன்று துறைகளும் ஒன்றிணைந்து 1992 ஜூன் மாதம் 20ஆம் நாள் கிராமத்தில் புகுந்து அத்துமீறி குடிசைகளை அடித்து நொறுக்கினர். ஆண்களும் பெண்களும் குழந்தைகளை அள்ளிக்கொண்டு மலைக்காடுகளில் ஓடி ஒளிந்துகொண்டார்கள். ஆனாலும் பதினெட்டுப் பெண்களை அதிகாரிகள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தார்கள். கூட்டுப் பாலியல் கொடூரத்தில் 13 வயதுச் சிறுமியும், எட்டு மாத கர்ப்பிணியும் அடங்குவர் என்பத...

குடும்பனின் பார்வையில்

 குடும்பனின் பார்வையில்  29.09.2023 பிற்பகல்  ✒️மாபெரும் அடையாளப்படுத்தலுக்கு என்ன கைம்மாறு செய்தோம்..???? தேவேந்திர குல வேளாளர்  பெயராணை கேட்டுப் போராடியபோது சில சமூகங்களிலிருந்தும், குறிப்பிட்ட சில நபர்களிடமிருந்தும்  எதிர்ப்புகள் வந்தன. ஆனாலும் பாஜக அரசு முறைப்படியான பண்பாட்டு ஆய்வுகளை நடத்தி தேவேந்திரகுல வேளாளர் சமூகம் தமிழ்க்குடிகளில் மூத்த குடிகள் என்றும், அதற்கென தனித்த வாழ்வியல் முறைகள் உள்ளன என்றும் அறிந்த பிறகு மானுடவியல் ஆய்வறிக்கையின் அடிப்படையில்  "தேவேந்திரகுல வேளாளர் "  என்று பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றி அரசாணை பிறப்பித்தது. இந்திய பாராளுமன்ற நடைமுறை வரலாற்றில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கச் செயல். பச்சோந்தித்தனமான அரசியல் மாற்றங்களினூடே இப்படியான மானுடவியல் ஆய்வை மேற்கொண்டு பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டு சொந்த மாநில உறுப்பினர்களின் ஒப்புதல்கள் இல்லாமலே ஒரு புரட்சிகர மாற்றத்தைத் தந்தது பாஜக அரசு என்பதில் பெருமிதம் கொள்கிறோம். இந்த மகத்தான செயலைப் பாராட்ட இன்னமும் நம்மில் பலருக்குத் தயக்கம் இருப்பது வேடி...

குடும்பனின் பார்வையில்

 குடும்பனின் பார்வையில் 29.9.23- முற்பகல்  பரிசீலிக்கப்பட வேண்டிய ஆதங்கம்..!!!! தேவேந்திரகுல வேளாளர் சமூகம் தம்மைத்தாமே கேள்விக்குள்ளாக்கும் போக்குகள் வளரவேண்டும்.. அரசியலுக்கெனத் தனித்த கொள்கைகள், கண்டுகொள்ளக்கூடாத மரபுகள், கண்டும் காணாமல் முகம் திருப்பிக்கொள்ளும் குணங்கள்  என ஏகப்பட்ட அரசியல் சூட்சுமங்களைத் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தில் படித்தவர்களிடமே இல்லை.. பகுத்தறிவு பேசுகிற குடும்பத்திலும் பாரம்பரியமானவற்றைக் கேள்விக்குள்ளாக்காமல் ஏற்றுக் கடந்துபோவதைப் பார்க்கிறோம். தமிழகத்தில் சாதியேற்பாட்டு நூல்கள் தோன்றிய வரலாற்றை அறிந்தால் திராவிடச் சித்தாந்தக் கருத்தியலைப் பற்றிப் புரிந்துகொள்ள முடியும். தமிழகத்தில் தமிழர் நலன் காக்கும் நோக்கில் தோன்றிய அரசியல் கட்சிகள் தோற்றுப்போய்விட்டன. அப்படித் தோற்றவற்றின் வரிசையில் ஆதித்தனார், ம.பொ.சி ஆகியோரின் முயற்சிகள் முன்வரிசையில் நிற்கின்றன. அப்படி ஆதித்தனாரால் தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சிதான் இப்போது சீமான் கையில் இருக்கிறது.. திராவிடச் சொல்லாடலை ஆதிதிராவிடர் சமூகம் இலங்கையில் பத்திரிக்கைக்குப் பெயரிட்டது.. பத்தொன்பதாம் நூற்றா...

28.9.2023- வியாழக்கிழமை

 குடும்பனின் பார்வையில் 28.09.2023 ஒரு பண்பாட்டுச் சமூகம் ஒடுக்கப்பட்டதை அறிந்துகொள்ளாமல் அதிலிருந்து விடுபட முயற்சிக்காமல் தமது சுய அடையாளத்தை இழந்து வாழ்வதை சிலர் ஆதரிப்பது துயரமானது.. "பட்டியல் சமூகம்" என்ற பொது அடையாளத்திலிருந்து விடுதலை பெற்று "தேவேந்திரகுல வேளாளர்" என்ற "தனித்த அடையாளத்தைத் தந்தது பாஜக அரசுதான்." நீங்கள் இந்துவாகவோ கிறித்தவராகவோ வாழ்ந்துவிட்டுப் போங்கள். எந்த மதமும் மனிதனை அடிமைத்தனத்தில் வைத்திருக்க விரும்புவதில்லை.. விடுதலையை விரும்பாதவன் எந்த மதத்தில் இருந்தும் பயனில்லை.. மதங்கள் மனிதனைப் பக்குவப்படுத்தும் வழிமுறைகள் கொண்டவையே தவிர சலுகைகளால் சங்கடப்படுத்தும் நிறுவனம் அல்ல. எல்லா அரசியல் கட்சிகளும், கிறிஸ்தவமும் தேவேந்திரர்களைத் தலித் என்ற மராட்டியச் சொல்லால் அடையாளப்படுத்தும்போது பாஜக மட்டும் தான் "தேவேந்திரகுல வேளாளர்" என்று அடையாளப்படுத்தியது. பாராளுமன்றத்தில் தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை நிறைவேற்றும் போது காங்கிரஸ் கட்சி உட்பட தமிழக எம்பிக்கள் அனைவரும் வெளிநடப்புச் செய்ததை நாங்கள் ஒரு நாளும் மறவோம்.. "பொதுவெளி...