குடும்பனின் பார்வையில்
குடும்பனின் பார்வையில்
29.9.23- முற்பகல்
பரிசீலிக்கப்பட வேண்டிய ஆதங்கம்..!!!!
தேவேந்திரகுல வேளாளர் சமூகம் தம்மைத்தாமே கேள்விக்குள்ளாக்கும் போக்குகள் வளரவேண்டும்..
அரசியலுக்கெனத் தனித்த கொள்கைகள், கண்டுகொள்ளக்கூடாத மரபுகள், கண்டும் காணாமல் முகம் திருப்பிக்கொள்ளும் குணங்கள்
என ஏகப்பட்ட அரசியல் சூட்சுமங்களைத் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தில் படித்தவர்களிடமே இல்லை..
பகுத்தறிவு பேசுகிற குடும்பத்திலும் பாரம்பரியமானவற்றைக் கேள்விக்குள்ளாக்காமல் ஏற்றுக் கடந்துபோவதைப் பார்க்கிறோம்.
தமிழகத்தில் சாதியேற்பாட்டு நூல்கள் தோன்றிய வரலாற்றை அறிந்தால் திராவிடச் சித்தாந்தக் கருத்தியலைப் பற்றிப் புரிந்துகொள்ள முடியும்.
தமிழகத்தில் தமிழர் நலன் காக்கும் நோக்கில் தோன்றிய அரசியல் கட்சிகள் தோற்றுப்போய்விட்டன.
அப்படித் தோற்றவற்றின் வரிசையில் ஆதித்தனார், ம.பொ.சி ஆகியோரின் முயற்சிகள் முன்வரிசையில் நிற்கின்றன.
அப்படி ஆதித்தனாரால் தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சிதான் இப்போது சீமான் கையில் இருக்கிறது..
திராவிடச் சொல்லாடலை ஆதிதிராவிடர் சமூகம் இலங்கையில் பத்திரிக்கைக்குப் பெயரிட்டது..
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்த கருத்தியல் கைக்கொள்ளப்பட்டது..
அயோத்திதாசப்பண்டிதர் காலத்திலேயே ஆதிதிராவிடன் என்ற பதம் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.
தமிழ்க்குடிகளின் வரலாற்றைப் பேசவேண்டிய மள்ளர்குடிகள் அடிமை மனநிலைக்குத் தள்ளப்பட்டதால் தமிழ் தேசியம் என்ற கருத்தியலை பிற சமூகங்கள் எடுத்துக்கொண்டன..
உட்பகைகளை வளர்க்கிற அரசியல் சூழல் தேவேந்திரர்களிடம் வளர்ந்து வருவது ஆரோக்கியமானதல்ல..
"ஆளாளுக்கு அரசியல் பேசலாம் ஆனால் ஆளாளுக்கு இயக்கம் தொடங்கக்கூடாது."
"தனி மனித வளர்ச்சியைவிடச் சமூக விடுதலை முக்கியமானது.."
வலைதளங்களில் முரண்பாடுகளையே வளர்க்காமல் வழிவிட்டு சமூக ஒற்றுமைக்கு வழிகாண்போம்..
©️✒️மடைக்குடும்பர்.
29.09.2023.
Comments
Post a Comment