குடும்பனின் வரலாற்று புரிதல்

 சிகை கொற்றன் யார்? – ஒரு வரலாற்றுத் தேடல் – Pandyan Mallar

 x-------------x-------------x-------------x ------------x-------------x------------x

(𑀘𑀻 𑀓𑁃 𑀓𑁆 𑀓𑁄 𑀶𑁆 𑀶 𑀷𑁆) எகிப்து பிரமிடு பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்ட சிகை கொற்றன் கல்வெட்டில் இடம்பெற்றுள்ள ‘சிகை கொற்றன்’ வாசகம் பற்றி பலரும் பலவிதமாக கருத்து கூறிவருகின்றனர். இதில் கருத்து கூறும் ஒவ்வொருவரின் உள்நோக்கமும் மிகத் தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் அக்கல்வெட்டுச் செய்தியை திரிக்க முற்பட்டுள்ளது வேதனைக்குறியது. அவர்கள் கூறவறுவதை சுருக்கமாக கூறலாம். 

‘சிகை கொற்றன்’ – அலங்காரம் செய்யும் கொல்லர், அதாவது கற்றச்சர் என்றும் சிலர் வணிகர் சிகை என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்றும் பறப்புரைச் செய்கிறார்கள்.

இது முற்றிலும் தவறானச் செய்தி என்பது எனது வாதம். கல்வெட்டில் இடம்பெற்ற "சிகை கொற்றன்" என்ற பெயர் வெறும் வணிகரின் பெயரா? அல்லது ஒரு அதிகாரமிக்க குலத்தலைவரின் பெயரா? என்பதைத் தமிழகத்தின் சங்க இலக்கியம், காலக் கல்வெட்டு மற்றும் அகராதிச் சான்றுகளின் வழி இக்கட்டுரை ஆராய்வோம். 


எகிப்து 'மன்னர்களின் பள்ளத்தாக்கில்' சிகை கொற்றன் கல்வெட்டு

எகிப்தின் புகழ்பெற்ற ‘மன்னர்களின் பள்ளத்தாக்கு’ (Valley of the Kings) பகுதியில், வரலாற்றில் முதல்முறையாகத் தமிழ் பிராமி கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இது பண்டைய தமிழகத்திற்கும் ரோமானியப் பேரரசுக்கும் இடையிலான ஆழமான கடல்வழி வணிகத் தொடர்பை உறுதிப்படுத்துகிறது.

எகிப்து கல்வெட்டுச் சான்றுகள் (கல்லறை எண் மற்றும் விவரம்)

பேராசிரியர்கள் இங்கோ ஸ்ரௌச் மற்றும் ஷார்லட் ஸ்மிட் ஆகியோரின் 2024 – 2025 ஆய்வின்படி:


• கல்வெட்டு இடம்: தேபன் நெக்ரோபோலிஸில் உள்ள ஆறு கல்லறைகளில் (KV 2, KV 6, KV 8, KV 9, KV 11, மற்றும் KV 16) சுமார் 30 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.


• சிகை கொற்றன் (Cikai Koṟṟaṉ): ஐந்து வெவ்வேறு கல்லறைகளில் மொத்தம் எட்டு இடங்களில் இப்பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கல்லறை எண் KV 9-ல் (ஆறாம் ராமேசஸ் கல்லறை) நுழைவாயிலிலிருந்து நான்கு மீட்டர் உயரத்தில் இப்பெயர் மிகத் தெளிவாக உள்ளது.


• பிற பெயர்கள்: இதே இடங்களில் 'கோபான் வரத கண்டன்', 'சாத்தன்', 'கீரன்' போன்ற பெயர்களும் கிடைத்துள்ளன. இது வணிகத் தொடர்பைத் தாண்டி, ஒரு குறிப்பிட்ட அதிகார வர்க்கத்தின் வருகையை உறுதிப்படுத்துகிறது.


சிகை கொற்றன் என்பவரை வெறும் 'கற்றச்சர்' என்றோ அல்லது 'வணிகர்' என்றோ சிலர் திரித்துக் கூறி வருகின்றனர். ஆனால், அவர் ஒரு சாதாரண மனிதர் அல்ல, ஒரு அதிகாரமிக்க குலத் தலைவர் என்பதே இக்கட்டுரையின் வாதம். இதனைச் சங்க இலக்கியம் மற்றும் அகராதிச் சான்றுகள் மூலம் நிறுவ வேண்டியது அவசியமாகிறது

I. கொற்றன் – அதிகாரத்தின் குறியீடு 

கொற்றக் குடை : அரசக் குடை

“கொற்றக் குடையும் வெற்றி வேலும்”

(பெருங். உஞ்சைக்; 57 : 56)

“காமுண்ட சுவாமியும் கொற்றக்குடை பன்மை முந்நூற்று வரும்”

(நத்தம் ஆய்வேடு பக்.165 -13)

 ம. கொற்றக்குடை

  [கொற்றம் + குடை, கொற்று -> கொற்றம்]  


கொற்றத் தேவி ; பட்டத்தரசி

“கொற்றத்தேவி செற்றந் தீர்க்கும் பெற்றியர்” 

(பெருங். வத்தவ;14 : 18)

[கொற்றம் +தேவி]

கொற்றவன்: அரசன், வெற்றியாளன்

“குடையினீழற் கொற்றவன்” (சீவக.2544)

“ஊர்கொண்ட வுயர் கொற்றவ” (மதுரைக்.88)

ம. கொற்றவன்

[கொற்றம் -> கொற்றவன்]

(தேவநேயப் பாவாணர் - செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி; 2 - 3; பக்.266 - 67)


மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் அகராதிப்படி, 'கொற்றன்' என்பது அரசன், வெற்றி, மற்றும் வீரம் போன்ற பொருளைக் குறிக்கும். எனவே, எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழி கல்வெட்டில் உள்ள "கொற்றன்" என்பது ஒரு சாதாரண வணிகரின் பெயராக இல்லாமல், ஒரு ஆட்சியாளரின் (Ruler/Chieftain) பெயராக இருப்பதற்கே அதிக வாய்ப்புள்ளது.


II. செப்பேடு மற்றும் சங்க இலக்கியச் சான்றுகள்

 செப்பேடு 

வேள்விகுடிச் செப்பேடு மற்றும் தளவாய்புரச் செப்பேடுகள் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி பாண்டியன் பற்றிக் கூறும். முதுகுடுமி என்பது பெருவழுதிப் பாண்டியனின் குலத்தைக் குறிக்கிறது. குடுமிச்சி என்பது குடுமி என்பதின் பெண்பாற் பெயர்.


 சங்க இலக்கியம்

“பல் சாலை முதுகுடுமி “(மதுரைக் காஞ்சி வரி.759)

“தகைமாண் குடுமி” (புறம். 6 வரி. 26)

“எங்கோ வாழிய குடுமி “(புறம்.9; வரி.8)

“விறன்மாண் குடுமி” (புறம்.12 வரி. 3)

“குடுமிக் கோமான்” (புறம். 64 வரி. 6)

 ஆகியவற்றில் குடுமி என்ற சொல் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதிப் பாண்டியனுக்கு குலப்பெயராக வந்திருக்கிறது


III. பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம்

“கண்ணகன் குடுமி“

(தீர்த்த விகேடப் படலம் பா. 1) 

“குடம்பயில் குடுமி” 

(தடாதகைப் பிராட்டியார் திருவவதாரம் படலம். பா. 45)

“பொன்புனை குடுமி” 

(மலையத்துவசனையழைத்த படலம், பா.25), 

 “திங்கள் சூழ் குடுமி” 

(மேருவைச் செண்டாலடித்த படலம், பா.38)

“களிற்றின் பிடர் சுமந்த குடுமி”

(உக்கிரபாண்டியனுக்கு வேள்வளை செண்டு கொடுத்தப் படலம், பா. 4)


இவ்வாறு திருவிளையாடல் புராணத்தில் சிவமெருமானை குடுமி என்றும் நேரடியாகவே கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மள்ளன் என்றும் கூறப்பட்டுள்ளது.


“நைவளந் தெரிந்த வேம் நாதனும் விறகு மள்ளா”

(திருவிளையாடற் புராணம் - விறகு விற்ற படலம் பா. 26; வரி.3)


மேலும் வையாபுரி பள்ளு, போன்ற பள்ளு இலக்கியங்கள் மற்றும் பேரூர் புராணம் போன்றவற்றில் சிவபெருமானை பள்ளர், மள்ளர், குடும்பன் என்றும் கூறப்பட்டுள்ளது.


பாண்டியர்கள் தங்களை குடுமி என அழைத்துக்கொண்டதாக பழைய வெண்பா குறிப்பிடுவதாக பெரும்பற்றப்புலியூர் நம்பி மிகத் தெளிவாக தெரிவிக்கிறார்.


“புனக்குடுமிக் கோமான் புதல்வன்”

(பெரும்பற்றப்புலியூர் நம்பி – திருவிளையாற்புராணம்; பக்.15)


IV. தொல்காப்பியம்

தொல்காப்பியம் மண்ணுமங்கலம் என்னும் துறையை விளக்கும்போது

“………… இகன் மதிற்

குடுமி கொண்ட மண்ணு மங்கலமும்.”

                     தொல். பொருள். புறத்திணையியல் 68

என்று கூறுகிறது. இங்கு குடுமி என்பது ஒரு இனம் என்ற பொருளில் வருகிறது.


V. குடுமிநாதர் - குடும்பன் - சிகாநாதர் ஒப்பீடு

பொதுவான அகராதிகளின்படி "சிகை" என்பது தலைமயிர் அல்லது உச்சியைக் குறிக்கும். ஆனால், வரலாற்று ரீதியாக இது "குடுமி" என்ற தமிழ்ச் சொல்லின் சமஸ்கிருத வடிவமாகும்.

இனக்குடுமி: சிவத்தெழுந்த பல்லவராயன் உலா குடுமியான் மலைச் சிவபெருமானை “இனக்குடுமி என்றே குறிப்பிடுகிறது. குடுமியான் மலை என்பதே சிவன் குடுமி (குடும்பன்) குடிகொண்டிருப்பதால் வந்த பெயராகும்

குடுமிநாதர்: புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை கல்வெட்டுகளில் இறைவனின் பெயர் "திருநலக்குன்றத்து மங்கலமுடையார்" என்று இருந்தாலும், மக்கள் வழக்கில் அவர் "குடுமிநாதர்" என்றே அழைக்கப்படுகிறார்.

சிகாநாதர்: பிற்கால வடமொழித் தாக்கத்தால் "குடுமி" என்பது "சிகா" என மாற்றப்பட்டு "சிகாநாதர்" என்ற பெயரும் புழக்கத்திற்கு வந்தது. இது ஒரு தமிழ்ச் சொல் எவ்வாறு சமஸ்கிருதமயமாக்கப்பட்டது என்பதற்குச் சிறந்த உதாரணம்.

குடும்பன் - குடுமி தொடர்பு: 

குடுமி" என்பது "குடும்பன்" (வேளாண் குடித் தலைவன்) என்பதன் சுருக்கமாகும்.

•குடும்பன் (தலைவன்) → குடுமி.

•தலைவி → குடுமிச்சி

•குடுமிநாதர் → சிகாநாதர் / சிகாமணி.


VI. சிகை – பெயரும் குல அடையாளமும்

மாமல்லபுரத்தில் கடற்கோளுக்குப் பின் வெளிப்பட்ட 8 - ஆம் நூற்றாண்டுப் பல்லவர் கல்வெட்டில் "சிகா மல்ல" (சிகை மள்ளர்) என்ற செய்தி காணப்படுகிறது.

•குல மள்ளர்: காஞ்சிபுரம் வைகுந்த பெருமாள் கோயில் கல்வெட்டில் பல்லவ மன்னர்கள் தங்களை "குல மள்ளர்" என்று அழைத்துக்கொண்டதோடு, ஸ்ரீமல்லன், ரணமல்லன் போன்ற பெயர்களையும் சூடிக்கொண்டனர்.

•இதன் மூலம் "சிகா மல்ல" அல்லது "சிகை மல்லர்" என்பது "குடுமி மல்லன்/மள்ளன்" என்பதன் சமஸ்கிருத வடிவம் ஆகும்.

VII.கல்வெட்டுகளில் குடுமிச்சி 

குடுமி என்ற ஆண்பாற் பெயரின் பெண்பாற் பெயராக குடுமிச்சி என்ற சொல் சில கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் கானலாம்.


1.விக்கிரம சோழனின் ஏழாம் ஆட்சி ஆண்டில் கீரனூர் ஐங்கைக் குடுமிச்சிகளில் சோழன் உமையான அணுத்திரப் பல்லவரைசி கோயமுத்தூர் மாவட்டம் பல்லடம் வட்டம் செலக்கரிச்சலில் உள்ள சிவன் கொயிலில் திருநிலை வாகனம் வைத்ததை தெரிவிக்கிறது.

(கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், தொகுதி-2, த.நா.அ. தொல்லியல்துறை தொடர் எண்: 230/2004)


2. வீரராசேந்திர தேவரின் 11 - ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு பொங்கலூர்க்கா நாட்டிற் குண்டொடத்திற் குடுமிச்சிகளில் சிங்கன் கோவியாத அங்கராயன் மனைக்கிழத்தி என்று கூறுகிறது.

(திருப்பூர் மாவட்ட கல்வெட்டுகள் – த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் – 107 / 2010, மற்றும் ARE 117 / 1920)


3. திருமய்யம் தாலுகா, ஒலியமங்கலம் வரகீநீஸ்வரர் கோவிலில் வடபுறம் சுவரிலுள்ள சாஸசம் “திருக்குடுமி வயிராகிக்கு” எழுதிக் கொடுத்த ஆவணம் பற்றிக் கூறுகிறது.

(புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுகள் எண் .349)


4. திருமய்யம் தாலுகா காரமங்கலம், அகஸ்தீஸ்வர் கோவிலில் தென்புறம் சுவரிலுள்ள சாஸசம் “குடுமியர் எழுதியது”என்று குறிப்பிடுகிறது

(புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுகள் எண் .410)


VIII. தமிழர்களின் உலகளாவிய பரவல்

குமரிக் கண்ட கடல்கோலுக்குப் பின் தமிழர்கள் பல இடங்களில் குடிபெயர்ந்தனர். அதற்குச் சான்றாக இன்றும் இந்தியாவின் வடதமிழகம் தொடங்கி உலகில் பல நாடுகளிலும் பரவியுள்ளதை இன்றும் காணலாம்.


1.இந்திய அளவில் "குடும்பன் - குடுமி - குருமி - குன்பி" பரவல்

வரலாற்று ஆவணங்களின்படி, தமிழகத்தின் குடும்பன் / குடுமி என்ற பெயரே வட இந்தியாவில் 'க்ஷதிரிய குடும்பி க்ஷதிரிய குர்மி மற்றும் பட்டேல் என மாறியுள்ளதைக் காணலாம்.


2. கிரேக்கத் தொன்மவியலில் பாண்டியரும் பள்ளரும்

மள்ளர்/குடும்பர் குடியினர் தமிழகம் கடந்து இந்திய முழுவது பரவி பல பெயர்களில் இன்றும் வாழ்வது போல் கடல் கடந்து சென்றதற்கு கிரேக்கத் தொன்மவியல் மிகச்சிறந்த சான்றுகளை வழங்குகிறது:

• பாண்டியன் (Pandion): கிரேக்கத் தொன்மவியலில் ஏதென்ஸ் நாட்டை ஆண்ட அரசர்களின் பெயர் 'பாண்டியன்' (Pandion II) என்று குறிக்கப்பட்டுள்ளது.

• பள்ளாஸ் (Pallas): ஏதென்ஸ் அரசன் பாண்டியன் II - க்கு 'பள்ளாஸ்' (Pallas) உட்பட நான்கு மகன்கள் இருந்தனர். இந்தப் 'பள்ளாஸ்' என்ற பெயர் கிரேக்கத் தொன்மவியலில் டைட்டன் (Titan), ஜெயண்ட் (Giant) மற்றும் ஏதென்ஸ் இளவரசர் எனப் பல இடங்களில் உயரிய அதிகாரத்தைக் குறிக்கும் சொல்லாகப் பயின்று வருகிறது.


• இது தமிழகத்தின் 'பாண்டியன்' மற்றும் 'பள்ளர்' (Pallar/Pallas) அடையாளங்கள் பண்டைய மத்திய தரைக்கடல் பகுதிகளில் வேரூன்றி இருந்ததைக் காட்டுகிறது.

3. தென் அமெரிக்காவின் "பள்ளர்" (Pallar) தொடர்பு

தமிழகத்தின் இப்பூர்வீகக் குடிகளின் வீச்சு ஆசியாவையும் ஐரோப்பாவையும் தாண்டி அமெரிக்க கண்டம் வரையும் சென்றுள்ளது:

• பள்ளர் பீன்ஸ் (Pallar Beans): தென் அமெரிக்காவின் பெரு (Peru) நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட 'லிமா பீன்ஸ்' (Lima beans) அங்கு 'பள்ளர் பீன்ஸ்' என்றே அழைக்கப்படுகிறது.


• தென் அமெரிக்காவின் மேற்கு-மத்திய கடற்கரைப் பகுதியில், பசிபிக் பெருங்கடலை ஒட்டி அமைந்துள்ள பெரு நாட்டின் பண்டைய நாகரிகங்களில் பள்ளர்கள் தொடர்பான பல தொல்லியல் செய்திகள் காணப்படுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது கடல் கடந்த தமிழரின் வேளாண் மற்றும் வணிகப் பரவலுக்கு மற்றொரு சான்றாகும்.

4. பல நாடுகளில் கலாச்சார ஒற்றுமைகள் 

தமிழர்கள் பல நாடுகளில் குடியேறி அங்கும் தங்கள் பாரம்பரிய விழாக்களை இன்றும் கொண்டாடி வருவதைக் காணலாம்.


• கம்போடியாவின் பொன்னேர் திருவிழா

• தாய்லாந்தில் பொன்னேர் திருவிழா

• கொரியாவில் அறுவடைத் திருவிழா 


இந்த நாடுகள் அனைத்திலும் மருத நிலத்து வேளாண் திருவிழாக்கள் இன்றும் நடைமுறையில் இருப்பது, மள்ளர் மரபினர் உலக நாடுகளுக்கு விவசாயத் தொழில் நுட்பத்தைக் கொண்டு சென்றனர் என்ற ஒரிசா பாலு மற்றும் மா.சொ. விக்டர் ஆகியோரின் வாதத்திற்குப் பெரும் சான்றாகும்.

5.திரு. ஒரிசா பாலு அவர்களின் ஆய்வு

திரு. ஒரிசா பாலு அவர்களின் ஆய்வுகளின்படி, பண்டைய தமிழர்கள், குறிப்பாக மருத நிலத்து வேளாண் குடிமக்களான மள்ளர்/பள்ளர் மரபினர், எகிப்திற்குச் சென்ற கடல் வழிப்பாதை மற்றும் அங்கு அவர்கள் ஏற்படுத்திய தாக்கங்களையும் காணலாம். 

ஆமை வழிப் பயணம் 

ஒரிசா பாலு அவர்கள் முன்வைக்கும் மிக முக்கியமான கண்டுபிடிப்பு "ஆமை வழிப் பாதை". கடலாமைகள் முட்டையிடுவதற்காக ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து செல்லும் நீரோட்டப் பாதைகளைத் (Ocean Currents) தமிழர்கள் அறிந்திருந்தனர்.


• வங்கக் கடலில் இருந்து குமரிக்கடல் வழியாக அரபிக்கடல் சென்று, அங்கிருந்து செங்கடல் (Red Sea) வழியாக எகிப்தை அடையும் ஒரு நீரோட்டப் பாதை உண்டு.


• இந்த நீரோட்டத்தைப் பயன்படுத்தி விசை இல்லா மரக்கலங்களிலேயே தமிழர்கள் எகிப்திற்குச் சென்றனர். எகிப்தின் குசையர் அல்-காதிம் (Quseir al-Qadim) போன்ற துறைமுகங்களில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டது இதற்குப் பெரிய சான்றாகும்.


நைல் நதி மற்றும் மருத நிலத் தொடர்பு

மள்ளர் சமூகம் "நீரை மேலாண்மை செய்வதில்" வல்லவர்கள்.


• நீர்ப்பாசனம்: நைல் நதி ஓரங்களில் எகிப்தியர்கள் செய்த விவசாய முறையும், காவிரி மற்றும் வையை ஆற்றங்கரைகளில் மள்ளர்கள் செய்த விவசாய முறையும் (ஏற்றம், மதகுகள், வாய்க்கால் அமைப்பு) ஒன்றாக இருப்பதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


• பெயராய்வு: எகிப்தின் பண்டைய பெயர் 'மிஸ்ரு' (Misr). இதை 'மிசை' (உயரம்) அல்லது 'மருதம்' என்பதன் திரிபாகச் சில ஆய்வாளர்கள் பார்க்கின்றனர்.


தேவேந்திரன் - பார்வோன் - மள்ளர்

எகிப்திய அரசர்களான பார்வோன்கள் தங்களைச் 'சூரியனின் புதல்வர்கள்' என்றும், வானத்தின் கடவுளான 'ஹோரஸ்' (Horus) என்பவனின் பிரதிநிதிகள் என்றும் கருதிக்கொண்டனர்.

• தேவேந்திரன்: மள்ளர்/பள்ளர் சமூகத்தினர் தங்களை 'தேவேந்திர குலத்தினர்' என்று அழைப்பதற்கும், இந்திரன் வானத்தின் மற்றும் மழையின் கடவுளாக இருப்பதற்கும் இடையே உள்ள ஒற்றுமை வியப்பானது.


• மள்ளர்/பல்லர்: எகிப்தில் 'பல்லா' (Fellaheen/Fellah) என்ற சொல் இன்றும் விவசாயிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மா.சொ. விக்டர் போன்றோர் 'பள்ளர்' என்ற சொல்லும் 'Fellah' என்ற சொல்லும் ஒரே வேர்ச் சொல்லிலிருந்து வந்தவை என்று வாதிடுகின்றனர்.


அக்கெனதென் (ஆக்கியநாதன்) மற்றும் மள்ளர் மரபு


மெசபடோமியாவில் தமிழர் குடியேற்றம் மற்றும் ஐரோப்பியக் குறிப்புகள் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில் எகிப்தியத் தொடர்புகள் ஆழமாக ஆராயப் பட்டுள்ளன. அந்த ஆய்வாளர்களின் கருத்துபடி பின்வரும் கருத்தை முன்வைக்கலாம்:


• அக்கெனதென் (ஆக்கியநாதன்) எனும் ஏகநாதன் மேற்கொண்ட சூரிய வழிபாட்டுப் புரட்சி, இதே போன்ற 'பொன்னேர் பூட்டும்' பண்பாடு கொண்ட ஒரு சமூகத்தின் பின்னணியில் இருந்துதான் வந்திருக்க முடியும்.


• இதனால்தான் அக்கெனதென் மேற்கொண்ட 'ஏகதெய்வ' புரட்சிக்கும், தமிழ் மெய்யியலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கருதப்படுவதால் 'சிகை' என்பது எகிப்திய அரச மகுடத்தோடு (The Crown of Upper and Lower Egypt) தொடர்புடைய ஒரு அடையாளப் பெயராக இருக்கலாம்.


திரு. ஒரிசா பாலு அவர்கள் தனது கடல்சார் ஆய்வுகளில், தமிழர்கள் பயன்படுத்திய கப்பல்கள் மற்றும் அவற்றின் பெயர்கள் உலகெங்கும் பரவியிருப்பதைச் சான்றுகளுடன் விளக்கியுள்ளார். "Kudumbakar" மற்றும் "Pallas" (அல்லது 'பல்லா') என்பது வெறும் கப்பல்களின் பெயர்கள் மட்டுமல்ல, அவை தமிழர்களின் குடியேற்றத்தோடும், குறிப்பிட்ட சமூக அடையாளத்தோடும் தொடர்புடையவை என்றும் கூறியுள்ளார்.

1. Kudumbakar (குடும்பர்)

இந்தத் தகவல் குறிப்பாக எகிப்து மற்றும் சுமேரியா (தற்போதைய ஈராக் - மெசபடோமியா) ஆகிய நாடுகளோடு தொடர்புடையது.

• பொருள்: 'குடும்பர்' என்பது மள்ளர் சமூகத்தின் ஒரு உட்பிரிவு மற்றும் நிர்வாகப் பதவியாகும்.


• ஆய்வு: எகிப்திய மற்றும் சுமேரியக் களிமண் பலகைகளில் 'Kudumba' என்ற பெயரில் கப்பல்களின் உரிமையாளர்கள் அல்லது கடல் வணிகர்கள் குறிப்பிடப் பட்டுள்ளனர். இவை பண்டைய தமிழகத்தின் சேர, சோழ, பாண்டிய நாடுகளிலிருந்து சென்ற வணிகர்களின் கப்பல்கள் என்று ஒரிசா பாலு குறிப்பிடுகிறார்.

2. Pallas / Palla (பல்லா/பள்ளர்)

இந்தக் கப்பல்கள் மற்றும் பெயர்கள் எகிப்து மற்றும் ஸ்பெயின் நாடுகளோடு தொடர்புடையவை.

• எகிப்து: எகிப்தில் நைல் நதியில் பயன்படுத்தப்படும் ஒருவகை நதிக் கப்பல்களுக்கும், அங்குள்ள விவசாயிகளுக்கும் 'Fellaheen' (பல்லா) என்று பெயர். இது தமிழின் 'பள்ளர்' என்ற சொல்லின் வேர் என்று மா.சொ. விக்டர் மற்றும் ஒரிசா பாலு கூறுகின்றனர்.


• ஸ்பெயின் மற்றும் ஐரோப்பா: ஸ்பெயின் நாட்டின் கடலோரப் பகுதிகளில் 'Palla' என்ற பெயருடைய சிறிய கப்பல்கள் அல்லது படகுகள் பயன்படுத்தப்பட்டதாகத் தரவுகள் உள்ளன. இவை தமிழகத்தின் மருத நிலத்து மள்ளர்/பள்ளர் சமூகத்தினர் அங்குக் குடியேறியபோது கொண்டு சென்ற அடையாளம் என்பது இவர்களின் வாதம்


6. திரு. மா.சொ. விக்டரின் மொழியியல் ஒற்றுமைகள் (Linguistic Ties)

எகிப்திய மொழியில் உள்ள அடிப்படைச் சொற்களுக்கும் தமிழுக்கும் உள்ள ஒற்றுமையை மா.சொ. விக்டர் போன்ற ஆய்வாளர்கள் பட்டியலிடுகின்றனர். இதில் பல சொற்கள் மள்ளர் சமூகத்தின் வாழ்வியலோடு தொடர்புடையவை:

எகிப்தியச் சொல் தமிழ் பொருள் விளக்கம்

Fellah (பல்லா) பள்ளர் / மள்ளர் எகிப்தில் இன்றும் 'Fellahin' என்பது விவசாயிகளைக் குறிக்கும் சொல்.

Atten (ஆத்தன்) ஆதவன் / அத்தன் சூரியன் அல்லது தலைவன்.

Kudumba குடும்பர் நிர்வாகப் பதவி அல்லது குழு.

Mer (மெர்) மருதம் / மடு நதி அல்லது நீர்நிலையைக் குறிக்கும் சொல்.

Pa-ra (பாரா) பாரன் / பேரரசன் பார்வோன் (Pharaoh) என்பதன் அடிப்படை.


மள்ளர்/பள்ளர் - எகிப்து: பண்பாட்டு ஒற்றுமைகள்

1. ஏர் வழிபாடு: எகிப்திய பார்வோன்கள் ஒவ்வொரு ஆண்டும் நைல் நதியில் முதல் ஏர் பூட்டி உழும் விழா எடுப்பார்கள். இது தமிழகத்தில் மருத நிலத்து மள்ளர்கள் கொண்டாடும் 'ஏர் மங்கலம்' அல்லது 'பொன்னேர் பூட்டுதல்' விழாவைப் போன்றது.


2. இந்திரன் வழிபாடு: எகிப்தியர்களின் 'மின்' (Min) கடவுள், செழிப்பு மற்றும் மழையின் கடவுளாகக் கருதப்படுகிறார். இது மருத நிலக் கடவுளான இந்திரனின் (தேவேந்திரன்) பண்புகளைக் கொண்டுள்ளது.


3. மரணச் சடங்குகள்: எகிப்தியப் பிரமிடுகளில் பயன்படுத்தப்பட்ட 'ஈமத்தாழிகள்' (Sarcophagus) மற்றும் தமிழகத்தின் ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட 'முதுமக்கள் தாழிகள்' இடையே வடிவம் மற்றும் சடங்கு ரீதியான ஒற்றுமைகள் உண்டு.


4. குடும்பர்(Kudumba):எகிப்திய மற்றும் சுமேரியப் பகுதிகளில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட களிமண் பலகைகளில் (Amarna Letters), நிர்வாகப் பொறுப்பில் இருந்தவர்களைக் குறிக்க 'Kudumba' அல்லது 'Kudumbi' போன்ற ஒலிப்புடைய சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது தமிழகத்தின் மருத நிலத்து மள்ளர் சமூகத்தின் உட்பிரிவான 'குடும்பர்' என்ற பெயரோடு நேரடியாகப் பொருந்துகிறது.

5. பல்லா (Fellah): எகிப்தில் நைல் நதிக்கரையில் விவசாயம் செய்யும் மக்களை இன்றும் 'Fellahin' (பல்லா/பள்ளர்) என்றுதான் அழைக்கிறார்கள். இது தற்செயலான ஒற்றுமை அல்ல, மாறாகப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அங்குக் குடியேறிய மள்ளர் மரபினரின் அடையாளமே என்பது இந்த ஆய்வாளர்களின் வாதம்.

IX. சிகை - அலங்காரமும் அரச அடையாளமும்

எகிப்திய பார்வோன்களின் மகுடங்களில் (Pschent) முன்னால் நீண்டிருக்கும் 'யுரேயஸ்' (Uraeus - நாகப்பாம்பு) மற்றும் தலை அலங்காரத்தை, பண்டைய தமிழ் அரசர்களின் 'சிகை' அல்லது 'முடி' அலங்காரத்தோடு ஒப்பிடலாம்.

• சிகை கொற்றன் என்ற கல்வெட்டு வாசகத்தில் சிகை என்பது ஒருவரது குலத்தின் அடையாளமாகவும், கொற்றன் என்பது அவரது வீரத்தின் அடையாளமாகவும் கொள்ளப்படுகிறது.


• அக்கெனதென் சிலைகளில் காணப்படும் தனித்துவமான நீண்ட முக அமைப்பு மற்றும் சிகை அலங்காரங்கள், தமிழகத்தின் சில பழங்குடித் தலைவர்களின் (Tribal Leaders) சிற்பங்களோடு ஒத்துப்போவதை ஒரிசா பாலு போன்றோர் சுட்டிக் காட்டுகின்றனர்.


• எகிப்தில் உள்ள மன்னர்களின் பள்ளத்தாக்கு (Valley of the Kings) பகுதியில் இருக்கும் கல்லறைகளில் இந்திய மொழிகளில் எழுதப்பட்ட சுமார் 30 எழுத்துப் பொறிப்பு களில் மொத்தம் ஆறு கல்லறைகளில் இந்த வாசகம் காணப்படுவதால், “சிகை கொற்றன்” என்பவன் அரச குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.


• இந்த மொழியில் எழுதியிருப்பவர் தன்னை க்ஷத்திரியனாக அடையாளப்படுத்திக் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுவதாக BBC தமிழ் செய்தி தெரிவிக்கிறது.


 

X. சிகை கொற்றன் யார்?

மேற்கண்ட சான்றுகளின் அடிப்படையில், எகிப்தில் கல்வெட்டில் காணப்படும் "சிகை கொற்றன்" யார் என்பதை மிகத் தெளிவாக கூறமுடிகிறது.


1. இந்தியா முதல் எகிப்து, கிரேக்கம் மற்றும் தென் அமெரிக்கா வரை பரவியிருந்த ஒரு பண்டைய தமிழ் க்ஷத்திரியர் (வேளாண்- வீரர்) மரபின் பிரதிநிதியாவார்.


2. "கொற்றன்" என்ற பெயரடை அவர் வெறும் வணிகராக மட்டுமன்றி, ஒரு அரசுப் பிரதிநிதியாகவோ அல்லது குறுநிலத் தலைவராகவோ கடல் கடந்து சென்றவர் என்பதை உறுதிப்படுத்துகிறது.


3. கிரேக்கத் தொன்மவியலில் குறிப்பிடப்படுபவர் பாண்டியர் மற்றும் பள்ளாஸ் (Pallas) மரபின் ஒரு கிளையினராக இருக்கலாம்.


4. தமிழகத்தின் மள்ளர் (குடும்பன்) குல அடையாளமான 'சிகை' (குடுமி) மற்றும் 'கொற்றம்' (அதிகாரம்) ஆகியவற்றைத் தாங்கியவராக இருக்கலாம்.


5. மேற்கண்ட செய்திகளை ஒருகினைத்துப் பார்த்தால், இன்றைய மள்ளர் (தேவந்திர குல வேளாளர் மற்றும் வன்னியர் குல க்ஷத்திர்யர்) சமூத்தைச் சேர்ந்த அன்றைய அரசப் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்பது தெரிகிறது

எனவே, சிகை கொற்றன் என்பவர் அக்கெனதென் (ஏகநாதன்) காலத்தில் வாழ்ந்த 'மள்ளர்' மரபைச் சேர்ந்த ஒரு தமிழ் அரசக் குடும்பந்தைச் சேர்ந்தவர் கடல் வழிப் பயணத்தின் மூலம் எகிப்திய அரச குடும்பத்தோடு நெருங்கிய தொடர்பு அல்லது திருமண உறவு கொண்டிருந்தவராக இருக்கலாம். அல்லது குமரிக் கண்ட கடல் கோலுக்குப் பின் எகிப்தில் குடியேரியவரின் வழித்தோன்றலாக இருக்கலாம், வரலாறு எதுவாக இருந்தாலும், அவர், இன்றைய மள்ளர் (தேவந்திர குல வேளாளர் மற்றும் வன்னியர் குல க்ஷத்ரியர்) சமூத்தைச் சேர்ந்த குடுமி வேந்தன் என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை ஆகும்.

Comments

Popular posts from this blog

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்