Posts

Showing posts from June, 2025

குடும்பனின் வாழ்வியலில்

Image
 மள்ளர்களின் நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் :-  விதை விதைத்தல் & நாற்று நடுதல் நல்ல சகுனம் பார்த்து விதை விதைத்தல்:: நல்ல நாளில் பொன் ஏர் பூட்டி உழவு செய்த மள்ளர்கள், விதை விதைக்கவும் நல்ல நாள் பார்த்தே விதைக்கின்றனர்.. இதல்லாது நல்ல சகுனம் பார்த்து விதை விதைக்கும் பழக்கம் இருந்ததையும் பள்ளு நூலில் காணமுடிகிறது. " ஆக்கமாய் குடும்பன் விதையுங் கொண்டு வயல்        அணுகச் செல்லும் போதில் ஆவின் பாற்குடமும் நிறைநீர் குடமுங் கொண்டு       அர்வையர் எதிர் தோன்றக் காக்கை நாரை வலஞ் செய்யவே உபய        கருடன் வட்ட மிடவே கண்ட குடும்பன் நாளேரிட்டு நாள்வித்துங்         களிப்புடன் பிடித்து வந்தான்"            ( திருமலைமுரு.பள்ளு-136) பசும்பால், நிறைகுடத்துடன் பெண்கள் எதிரே வருதலும், காக்கை, நாரைகள் வலமாகச் செல்வதும், கருடன் வட்டமிடுவதும் விதை விதைத்தலுக்கான நல்ல சகுனமாக மள்ளர்கள் கொண்டனர் என்பதைத் திருமலை முருகன் பள்ளு கூறுகின்றது.. குலவையிட்டு நாற்றுநடுதல்:: பள்ளியர்கள் நாற்றுநடவு செய்...

பாண்டியர்களின் வரலாற்றில்

பாண்டியர்களின் வரலாற்றில்   [23/06, 08:48]   இங்குள்ள வெள்ளாளர்களும் தங்களைக் கங்கை குலத்தவர் என்று கூறிக் கொள்வதன் காரணம் இதுவே. அதாவது, வடுக ஆட்சியின் போது கன்னட நாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதை மறைக்க, ஏடுகளில் கங்கை குலத்தவர் என்று எழுதி வைத்துக் கொண்டு ஊரை ஏய்க்கின்றனர்.  இதில் நகைமுரண் என்னவென்றால் நாடற்ற முக்குலத்தோரான அலைகுடிகள் தங்களுக்கென ஆதாரம் எதுவும் இல்லாத்தால் தாங்கள் அரசமரபினர் எனக் காட்டிக் கொள்வதற்காக மூவேந்தர்களும் தங்களின் முன்னோர்கள் தான் என வாய்கூசாமல் பொய் கூறி வருவதுதான். [23/06, 09:30]  குப்தர்கள் காலம் வரையில் கங்கை ஒரு புனித நதியாக இருந்ததில்லை. குப்தர்கள் காலத்தில் தான் பார்ப்பனர்களின் மேலாதிக்கம் இந்தியவரலாற்றில் நிலைகொண்டது.  குப்த ஆட்சியின் ஆரம்ப நாட்களில் தான் தென்இந்தியாவில் கன்னடப் பகுதிகளில் அரசாட்சியின் கீழ் மாபாரதம், காளிதாசன், இராமாயணம், வேதங்களின் தொகுப்பு, உபநிடதங்கள், சங்கரனின் தோற்றம்( சிறிது பிற்காலம்) , ஆரண்யங்கள், அர்த்த சாஸ்திரம் போன்ற நூல்கள் படைக்கப்பட்டன .  இவை பார்ப்பன மேலாதிக்கத்தை நிலை நாட்ட வேண...

குடும்பனின் கணிப்பில்

 2023 ல் ஆதியின் பார்வை  90 களில் இந்த நிலத்தில் தலீத்தியத்தை திணிக்க எப்படி அம்பேத்கரை தூக்கிக்கொண்டு பல்லர்களின் ஊர் ஊராக வலிந்து திரிந்தார்களோ அப்படித்தான் அதே காலகட்டத்தில் இன்னுமொரு கூட்டத்தை தனித்த தொகுதியாக இயங்க வைக்க அமரன், தேவர் மகன் மாதிரியான திரைப்படங்களை பயன்படுத்தினார்கள், சினிமா மீடியாவின் ரீச்சை, திரைக் கதைகளின் தாக்கத்தையும் விளைவுகளையும் மதிப்பீட முடிந்தவர்களுக்கு தெரியும், அவர்கள் ஏன் திரைத் துறையை கையில் எடுத்தார்கள் என்று...!? இங்கே சாதி சண்டைகள் இருந்தாலும், ரத்தமும் சதையுமாக வன்முறை சில இனங்களுக்கிடையே இருந்தாலும் அது ஒரு நிரந்தர பிரிவினையாக, நிறந்தர வாக்கு தொகுதிகளாக உருவாகாமல் இருந்தது அரசியலை கையாளும் இடத்தில் இருந்த கூட்டத்தினருக்கு பெரும் தலைவலியாய் அமையவே மேற்கண்டவாறு திட்டம் தீட்டி அறுவடை செய்துகொண்டார்கள், ஆனால் காலம் பொல்லாதது ஆயுற்றே.....?!?!  90 கள் கடந்து இரண்டாயிரம் வந்தது, கூடவே ஈழப்போரும் வந்தது, திராவிடம் செய்த ஈழத் துரோகம் தமிழகத்தில் ஆளும் வர்க்கமாக இருக்கும் திராவிடத்தை தமிழர்கள் மத்தியில் அம்பலப்படுத்தவே ஆளும் வர்க்கத்திற்கு மற...

குடும்பனின் வாழ்வியலில்

Image
 நெல் அளந்து தானம் செய்யும் குடும்பன்  -முக்கூடற்பள்ளு #ஆடித்திருவிழா #பங்குனி திருவிழா #அணை கட்டுவதற்கு #தினமும் பூசை செய்ய  நெல் அளந்து கொடுக்கும் குடும்பன்.. "#ஆடித்திரு நாளுக்குநெல் ஆறாயிரங் கோட்டை-நெட்டைத் தாடிப்பிச்சன் வகையில் நேருஞ் சம்பாநெல் லளந்தேன்". (இ - ள்.) ஆடித் திருநாளுக்கென்று ஆறாயிரங் கோட்டை நெல்லு நெட்டைத் தாடிப் பிச்சன் வகையில் நமக்குத் தர நேரும் சம்பா நெல்லை அளந்தேன்; (எ-று. ) " #வருபங்குனித் திருநாட்படி       வகைக்காயிரங் கோட்டை-சின்னத் திருவன்பயி ரிடும்புள்ளியில்       செந்தாழைநெல் லளந்தேன்". (இ - ள்.) வருகின்ற பங்குனித் திருநாட் படிவகைக்கு ஆயிரங்கோட்டை சின்னத் திருவன் பயிரிடும் வகையிலிருந்து செந்தாழைநெல் லளந்தேன். (எ-று. ) "#சிற்றாற்றணைக் கல்லுக்கட்டச்       செலவாயிரங் கோட்டை-பண்ணைப் #பெற்றாக்குடும்பன் புள்ளியிற்கண்ட       பெருவெள்ளைநெல் அளந்தேன்". (இ - ள்.) சிற்றாற்று அணைக்கல்லுக் கட்டுவதற்கு உரிய செலவுக்கு ஆயிரங்கோட்டை பெற்றாக் #குடும்பன் புள்ளிப் பண்ணையிற் கண்டுமுதலான பெருவெள்ளை நெல் அளந...

திராவிட சதிரில்

 நாம் தற்போது சீமான்"கள்" கள்ளுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில்,  கீழடி விசயத்தை வைத்து திராவிடக் கூட்டம் அரசியல் செய்யும் வேலையை துவங்கியுள்ளதையும் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது இந்த திராவிட கும்பல்களுக்கு அப்படி என்ன கீழடி மீதும், தமிழர் வரலாறு மீதும் திடீர் பாசம் வந்துவிட்டதோ தெரியவில்லை, அவர்கள் எது பேசினாலும் அரசியல் ஆதாயத்திற்காக அன்றி வேறென்னவாக இருந்துவிடப்போகிறது? கீழடி ஆய்வு முடிவை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை, தமிழர்களை ஏமாற்றப் பார்க்கிறது என்று பேசுபவர்கள் அனைவருமே திராவிடக் குஞ்சுகளாகவே இருக்கிறார்கள் சரி விசயத்திற்கு வருவோம், நமக்கும் தமிழர் நாகரீகம் அங்கீகரிக்கப் படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் கீழடி நாகரீகத்திற்கு சொந்தக்காரர்கள் யார்? யார் அந்த பண்டைய காலத் தமிழர்கள் என்பதையும் சேர்த்து ஏன் இந்த திராவிடக் கூட்டம் பேசுவதே இல்லை? ஏனெனில் அகழாய்வு நடக்கும் பெரும்பாலான இடங்கள் நதிக்கரை ஓரங்களில் வாழும் தேவேந்திரகுல வேளாளர்களின் ஊர்களை ஒட்டிய இடங்களிலேயே பெரும்பான்மையாக நடக்கிறது தமிழர் நாகரீகம் என்று பொத்தாம் பொதுவாக பேசாமல் விட...

குடும்பனின் பார்வையில்

 பதநீருக்கும், கள்ளுக்கும் வேறுபாடு தெரியாமல் உளறும் உருட்டுகள். பதப்படுத்தப்பட்ட பனை நீர் - பதநீர்  சமீபத்தில் திடீரென கையில் எடுக்கப் பட்டிருக்கும் "கள்" உணவு போராட்டத்தின் எதிர்கால கணக்கு என்னவாக இருக்கும் என்கிற புரிதல் கூட இல்லாமல் ஒரு கூட்டம் சம்பந்தப்பட்ட போராட்ட புகைப்படங்களையும் காணொளியையும் ஆதரித்து பின்னணி பாடல்களோடு பகிர்ந்துகொண்டு கிடக்கிறார்கள், நீங்கள் புத்திசாலியாக இருந்தால் அந்த தியாகிகள் யார் என்பதை நீங்கள் யூகித்திருப்பீர்கள்....😀😀 அதுல அழகியல் என்னான்னா   "பூட்டன் புஞ்சைய தொலைச்சான் பாட்டன் நஞ்சைய தொலைச்சான் கல்லா கடவுளும் கெடக்க காடானோம் கூலிகுடியானோம்" ன்னு கர்ணன் திரைபட பாடல் ஒன்றை உருட்டி விட்டிருக்கிறார்கள், நஞ்சையையும் புஞ்சையையும் எப்படி தொலைத்தார்கள் என்று நம்ம தியாகிகள் சிந்தித்திருந்தால் நாம் சிரிக்க வேண்டிய தேவை இருந்திருக்காது, படம் எடுத்த மாரிக்கே தலீத்தியத்தில் டஃப் கொடுப்பார்கள் போல நம்ம #தியாகிகள்....😀😀 2014 காலகட்டத்தில் இப்படித்தான் திடீரென டாஸ்மாக் க்கு எதிராக ஆங்காங்கே போராட்டம் நடந்தது, நமது #திராவிடம் 2.0 இளைஞர்கள் பலர்...

குடும்பனின் வரலாற்றில்

Image
 வரலாற்றில் இன்று -  "உலகத் தமிழ்க் கழகம்"  என்னும் அமைப்பு தேவநேயப் பாவாணர் தலைமையில்  திருச்சிராப்பள்ளியில் 1968 ஜூன் 11 இல் அமைக்கப்பட்டது.  பெருஞ்சித்திரனார் பொதுச் செயலாளராக விளங்கினார்.  தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களிலும் பிற மாநிலங்களிலும் கிளைகள் பின்னர் தொடங்கப்பட்டன. உலகத் தமிழ்க் கழகத்தின் கொள்கையும் செயற்பாடும்:- பிற மொழி வல்லாண்மையிலிருந்து தமிழை மீட்டெடுப்பது கழகத்தின் முகாமையான கொள்கை ஆகும். உலகம் முழுக்கத் தமிழைப் பரப்புதல் வேண்டும். உறுப்பினர்கள் அனைவரும் தமிழ்ப் பெயரைச் சூட்டிக் கொள்ளல் வேண்டும். குழந்தைகளுக்கும் தமிழ்ப் பெயரைச் சூட்டவேண்டும். தமிழர்கள் தம் இல்லங்களுக்கும் நிறுவனங்களுக்கும் தமிழ்ப் பெயர் வைக்க வேண்டும். இயன்றவரை அயல் சொற்களைக் கலவாது எழுதவும் பேசவும் வேண்டும். இல்லத்தில் நடைபெறும் எல்லாச் சடங்குகளையும் கோவில்களில் நடைபெறும் வழிபாடுகளையும் தமிழில் நிகழ்த்த வேண்டும். கல்வி அனைத்து நிலைகளிலும் தமிழில் அமைதல் வேண்டும். பாவாணர் மறைவுக்குப் பின்னர் செயல்படாமல் இருந்த உலகத்தமிழ்க்கழகம் அரணமுறுவல், அன்புவாணன், நெடுஞ்சேரலாதன் போன்ற...

குடும்பனின் பார்வையில்

 ✒️ ஊடுருவல்காரர்கள் தான் பேராபத்தானவர்கள். தேவேந்திர குல வேளாளர் என்ற அடையாளத்தைப் பெற உறுதுணையாய் இருந்தது பாசக தான்.. பாராளுமன்ற விவாதத்தைக் கவனித்தவர்களுக்குத் தெரியும்.. வட இந்திய உறுப்பினர்கள் எல்லாம் ஆதரவு தந்து பேசினர்.. தமிழக அரசியல்வாதிகளில் ஒரு சிலர் தவிர மற்ற அனைவரும்,  ஏன்  நம் சமூக எம்பி கள் கூட எதிர்ப்புத்தான் தெரிவித்தனர்.. இதையெல்லாம் நம்மில் பலர் மறந்து விட்டு எதிரிகளின் மகுடிகளுக்குத் தலையாட்டுவதுதான் வேதனை.. பாசக மட்டுமல்ல எந்த அரசியல் கட்சியும் தூய்மையானதல்ல.. ஆனால் நமக்கான ஆதாயத்துக்கு யாரைத் தேடுவது என்பது தான் முக்கியம்.. நீங்கள் எந்த மதத்தையும் எந்தக் கருத்து அரசியலையும் சார்ந்து இருங்கள் ஆனால் பட்டியல் வெளியேற்றம் அடைய பாசக ஆதரவு தேவை என்பதை மறந்துவிடாதீர்.. வலைதளங்களில் எதிர்ப்புத் தெரிவிக்கிற பலர் நமது கோரிக்கைக்கு எதிரானவர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஊடுருவல்காரர்கள் தான் பேராபத்துக் காரர்கள் என்பது நாமறிந்து விடயம் தான்.. வலைக்கு முன்னே கல்லெறிந்து விட்டு மீன்படவில்லை என்று பேசுவதும் தந்திரம் தான். வரும் சந்ததி உளவியல் ரீதியாக தலை நிமி...

குடும்பனின் பார்வையில்

 'மனிதன் சிந்திக்காதவரை' "இவையெல்லாம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்." கோவக்காய் வெளிநாட்டில் வளராது அதனால் வெள்ளரிக்காயை புகழ்கிறார்கள் கொத்தவரங்காய் வெளிநாட்டில் வளராது அதனால் பீன்ஸை புகழ்கிறார்கள் முருங்கைக்காய் வெளிநாட்டில் வளராது அதனால் புரொக்கோளியை புகழ்கிறார்கள் தேங்காய் வெளிநாட்டில் வளராது அதனால் பீட்ரூடை புகழ்கிறார்கள் அரசாணிக்காய் வெளிநாட்டில் வளராது அதனால் உருளைக்கிழங்கை புகழ்கிறார்கள் பூசணிக்காய் வெளிநாட்டில் வளராது அதனால் முள்ளங்கியை புகழ்கிறார்கள் வாழைப்பூ அதிகம் வெளிநாட்டில் வளராது அதனால் முட்டைக்கோசைப் புகழ்கிறார்கள் நிலக்கடலை வெளிநாட்டில் வளராது அதனால் பாதாம் பருப்பை புகழ்கிறார்கள் மிளகு வெளிநாட்டில் வளராது அதனால் பச்சை மிளகாயை புகழ்கிறார்கள் கடுகு அதிகம் வெளிநாட்டில் வளராது ஆலிவ் ஆயிலை புகழ்கிறார்கள் வெளிநாட்டு மோகம் நம்நாட்டை அழித்துக்கொண்டே வருகிறது. தடுப்பார் யார்? பாரத பூமி புண்ணிய பூமி பாரதத்தில் வாழாதவர்கள் கொடுப்பினை இல்லாதவர்கள்... பாரதத்தில் இருந்தும் வாழத்தெரியாதவர்கள் துர்பாக்கியசாலிகள்!!! ஏன் கனி தரும் மரங்கள் மட்டும் இல்லை ? அரசும் மீடிய...

குடும்பனின் பார்வையில்

 கன்னடம் செம்மொழியானதெங்ஙனே? 2004 இல்  (செப்/அக்)  தமிழ் ஒரு செம்மொழி என்று அறிவிக்கப்பட்டதும், செம்மொழி என்பதற்கான விதிகளில்  திருத்தம் என்ற பெயரில்  ஒரு சிதைப்பு நிகழ்ந்தது.  "செம்மொழி என்று சொல்லப்படும் ஒரு மொழிக்கும் அதன் பழமைக்கும் தொடர்பு அறுந்திருக்கலாம்;  அல்லது பழைய வடிவத்தில் இருந்து தற்கால வடிவம் முழுமையாக மாறுபட்டிருக்கலாம்; அல்லது பழமை உருவாக்கிய புதிய மொழியாகக் (offshoots) கூட இருக்கலாம்."   இதான் மாற்றம். கூர்ந்து கவனிக்க. 2ம் நூற்றாண்டில் எழுத்து வடிவம் பெற்ற சங்கதமும் அதன் பழைய வடிவம் என்று சங்கதப் பற்றாளர் சொல்கின்ற வேதமொழியும் வெவ்வேறு. அதனால் விதியை மாற்றித்தான் சங்கதமே 2005 நவம்பரில் செம்மொழி ஆயிற்று. சங்கதத்தையாவது பொ.பி 2 நூற்றாண்டு வடிவம் என்று சொல்லமுடிகிறது.  ஆனால் கன்னடத்தின் முதல் இலக்கியமே பொ.பி 850 இல் உருவான கவிராசமார்க்கம் என்ற செயின இலக்கிய நூல்தான்.  இலக்கணமோ 12நூற்றாண்டில் சங்கதத்தில் உருவான "கருநாடக பாசை பூசனா". குறைந்தது 1500-2000 ஆண்டுகள் ஆன பழம் இலக்கியங்களின் குவியல் இருக்க வேண்டும் என்ற விதிய...