குடும்பனின் வாழ்வியலில்

 நெல் அளந்து தானம் செய்யும் குடும்பன் 

-முக்கூடற்பள்ளு



#ஆடித்திருவிழா


#பங்குனி திருவிழா


#அணை கட்டுவதற்கு


#தினமும் பூசை செய்ய 

நெல் அளந்து கொடுக்கும் குடும்பன்..


"#ஆடித்திரு நாளுக்குநெல் ஆறாயிரங் கோட்டை-நெட்டைத்

தாடிப்பிச்சன் வகையில் நேருஞ் சம்பாநெல் லளந்தேன்".


(இ - ள்.) ஆடித் திருநாளுக்கென்று ஆறாயிரங் கோட்டை நெல்லு நெட்டைத் தாடிப் பிச்சன் வகையில் நமக்குத் தர நேரும் சம்பா நெல்லை அளந்தேன்; (எ-று. )


" #வருபங்குனித் திருநாட்படி

      வகைக்காயிரங் கோட்டை-சின்னத்

திருவன்பயி ரிடும்புள்ளியில்

      செந்தாழைநெல் லளந்தேன்".


(இ - ள்.) வருகின்ற பங்குனித் திருநாட் படிவகைக்கு ஆயிரங்கோட்டை சின்னத் திருவன் பயிரிடும் வகையிலிருந்து செந்தாழைநெல் லளந்தேன். (எ-று. )


"#சிற்றாற்றணைக் கல்லுக்கட்டச்

      செலவாயிரங் கோட்டை-பண்ணைப்

#பெற்றாக்குடும்பன் புள்ளியிற்கண்ட

      பெருவெள்ளைநெல் அளந்தேன்".


(இ - ள்.) சிற்றாற்று அணைக்கல்லுக் கட்டுவதற்கு உரிய செலவுக்கு ஆயிரங்கோட்டை பெற்றாக் #குடும்பன் புள்ளிப் பண்ணையிற் கண்டுமுதலான பெருவெள்ளை நெல் அளந்தேன்; (எ-று. )


(வி - ம். ) சிற்றாற்றில் அணை கல்லினாற் கட்டிய செலவு என விரிக்க


" #மண்டகப்படிச் சாத்துக்கொரு

      வகையாயிரங் கோட்டை-கட்டை

முண்டன் நெல்வகை தனிலேகண்ட

      முத்துவெள்ளைநெல் லளந்தேன்".


(இ - ள்.) மண்டகப்படிச் சாத்துவகைக்கு ஓர் ஆயிரங்கோட்டை கட்டைமுண்டன் வகையறாவிலே கண்டு முதலான முத்துவெள்ளைநெல் அளந்தேன்; (எ-று. )


(வி - ம். ) சாத்துவகை-அணிகின்ற ஆடை. சாந்து, பூ முதலிய எல்லாவற்றிற்கும்


"#நாவாணர்க்கும் மறையோருக்கும்

      நாலாயிரங் கோட்டை-பச்சை

மூவான்முதல் இட்டமலை

      முண்டன்நெல் லளந்தேன்" .


(இ - ள்.) நாவலருக்கும் அந்தணருக்கும் நாலாயிரங்கோட்டை பச்சை, மூவான் இட்டமலை, முண்டன் முதலிய வகை நெல் அளந்தேன்; (எ-று. )


(வி - ம். ) பச்சை என்பது ஒருவகை நெல்.


"#இதுவன்றியுந் தினப் பூசைநெல்

      எண்ணாயிரங் கோட்டை-மொண்டிப்

பொதுவன்புதுத் திருத்திற்கண்ட

      பூம்பாளைநெல் லளந்தேன்" .


(இ - ள்.) இதுவல்லாமலும் நாள்தொறுஞ் செய்யும் பூசைக்கு உரிய நெல் எண்ணாயிரங் கோட்டை நொண்டிப் பொதுவனுடைய புதுத்திருத்து வயல்களிற் கண்டுமுதலான பூம்பாளை நெல்லை அளந்தேன்; (எ-று. )


"#முற்றுங்கணக் கென்னாற் சொல்ல

      முடியாதென்ப தறிவீர்-சேரில்

மற்றநெல்லும் விதையும்கட்டி

      வைத்தேன் பண்ணையாண்டே"


(இ - ள்.) பண்ணை நயினாரே! முழுதும் என்னாற் கணக்குச் சொல்ல முடியாது என்பதை நீர் அறிவீர். மற்ற நெல்லையும் விதை நெல்லையும் கட்டி வைத்திருக்கின்றேன்; [என்றான்] (எ-று. )

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்