Posts

Showing posts from May, 2025

குடும்பனின் வரலாற்றில்

 [27/05, 09:47] மூத்தவர்:  பொருளாதார பலமும் , அரசியல் அதிகாரமும் இருப்பதால் தங்களுக்கான தொன்மை வரலாற்றைக் கட்டமைப்பதில் பல இனங்கள் மூர்க்கமாகப் களமாடுகின்றன.  அவர்களின் பின்னால் ஒரு இயங்கு ஆற்றல் அவ்ர்களைத் தூண்டிக் கொண்டிருக்கிறது.  அவர்கள் என்னதான் பெரிய பொருளாதார, அரசியல் சக்திகளாக இன்று வலம் வந்தாலும் , பழைய வரலாறு அவர்களை அமுக்குப் பேய் போல வந்து அவர்களின் பழைய வரலாற்றை நினைவூட்டிக் கொண்டே இருப்பதால், செய்வதறியாது திகைக்கிறார்கள். அந்த சூழ்நிலையிலிருந்து தப்பிக்கும் மனநிலையில் தவிக்கிறார்கள்.  போலியானதை வைத்து புது வரலாறைப் படைக்க முனைகிறார்கள்.  அவர்களின் குழம்பிய மனநிலையை பயன்படுத்திக் கொண்டு இது போன்ற போலி வரலாற்று பொய்யாளர்கள் புதுக் கதைகளை கையில் எடுத்துக் கொண்டு சவால் விடுகிறார்கள்.  ஒற்றைக் கண் கொண்டு குறுகிய துவாரத்தின் வழியே வரலாறைப் பார்க்கிறார்கள். புளங்காகிதம் பெறுகிறார்கள்.  அவர்களின் வரலாற்றின் சக்கரங்களை உந்தித் தள்ளினாலும் ஒரு மில்லி அளவு கூட நகர்த்த முடியாது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.  அவ்வளவு வரலாற்றுச் சொந்தக்கா...

குடும்பனின் பார்வையில்

Image
 தென்கலை - வடகலை பஞ்சாயத்துதான் என்ன ?  -வளர்மெய்யறிவான்  இன்று சைவம் - வைணவம் ஆகிய இரு மதங்களே இந்தியாவின் பெரும்பான்மை மதங்களாக உள்ளன. இந்த இரண்டு மதங்களுடன் "ஸ்மார்த்தம்" எனும் வட வேத பிராமணர்கள் தங்களை ஒரு தனிமதமாகக் கூறிக்கொண்டு சைவம் + வைணவம் + ஸ்மார்த்தம் ஆகியவை இணைந்ததே "ஹிந்து மதம்" என்றும் இந்த ஹிந்து மதத்திற்கு தாங்களே தலைமை என்றும் கூறி வருகின்றனர். ஆனால், சைவ மடங்கள் பிராமணர்களின் தலைமையை ஏற்பதில்லை. அனைத்து சைவ மடங்களின் ஆதீனங்களும் (ஸ்மார்த்த) பிராமணர்கள் அல்லாதவர்களே.  ஆனால், வைணவத்துக்குள் ஸ்மார்த்த பிராமணர்கள் படு வேகமாக ஊடுருவினர்.  ஸ்மார்த்த பிராமணர்களைப் பொறுத்தவரை "வேதம்"தான் அவர்களின் அடிப்படை, ஆசான், கடவுள் எல்லாம்.  வேதம் யாரால் உருவாக்கப்பட்டது ? வேறு யாரால் ...அவர்களால்தான் அதாவது வட வேத ஸ்மார்த்த பிரமணர்களால்தான்.  அந்த வேதத்தின் அடிப்படை என்ன ?   சுருக்கமாகச் சொன்னால்..."இந்த உலகம், பேரண்டம் உள்ளிட்ட எல்லாம் கடவுளுக்குள் அடக்கம். அந்தக் கடவுள் பிராமணரின் வேத மந்திரத்துக்குள் அடக்கம்" என்பதே. ஆக...பிராமணர்களாகிய...

குடும்பர்களின் வரலாற்றில்

Image
 புத்தக புரட்சியாளன் தீபக் பாண்டியனுக்கு வீரவணக்கம்  நிலம், பொருளாதாரம், அரசியல், ஆட்சி, அதிகாரம் என அனைத்து நிலைகளிலும் வீழ்த்தப்பட்டிருக்கும் பூர்வகுடிகளின் விடுதலைக்காகப் போராடிய - போராடிக் கொண்டிருக்கிற நம்முடைய வீரஞ்செறிந்த மனிதர்களை திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து வருவதை நாமறிவோம்.  அவ்வகையில் 20.05.2024 அன்று சாதிய பயங்கரவாதிகளால் வீழ்த்தப்பட்ட தீபக்பாண்டியனை வன்முறையாளனாக கட்டமைத்து இருட்டடிப்புச் செய்ய பலரும் கச்சை கட்டுவதையும் நாமறிவோம்.  "சமூக விடுதலைக்கான பயணத்தில் ஆயுதம் ஏந்திய போராட்டம் தீர்வாகாது என உணர்ந்தேன்"  என்று 30.04.2023 அன்று தனது முகநூலில் எழுதிய  சட்டக் கல்லூரி மாணவர் தீபக் பாண்டியன் திருமணம் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் 20.05.2024 அன்று சாதிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்.  கல்வியும்; அதிகார அரசியலும்தான் பூர்வகுடிகளை/மண்ணின் மைந்தர்களை விடுதலை செய்யும் என்பதை உணர்ந்து செயல்படத் தொடங்கி மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து எழுச்சியை உருவாக்கி வந்த சூழலில்தான் தீபக் பாண்டியன் படுகொலை அரங்கேற்றப்பட்ட...

குடும்பனின் பார்வையில்

 "போர் வெற்றி விழா கொண்டாட்டம்"-  கொழும்பில் ------- ”தேசிய போர் வீரர்கள் நாள்” (National War Heroes Day) நாளை 19 ஆம் திகதி திங்கட்கிழமை நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்பாகவுள்ள, போரில் கொல்லப்பட்ட இலங்கை இராணுவத்தின் நினைவுத் தூபியில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வு 2009 மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் போர் இல்லாதொழிக்கப்பட்ட நாளின்  "வெற்றிவிழா கொண்டாட்டம்” என்பதில் சந்தேகமே இல்லை. உண்மையில் இப் போர் வெற்றியைக் கொண்டாட வேண்டியது ஜேவிபிதான் ---- ஏனெனில், 1994 இல் இருந்து 2009 மே இறுதிப் போர் வரையும் புலிகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று ”கங்கணம் கட்டியது” (Bracelet) ஜேவிபிதான். சந்திரிகா - மகிந்த ஆகியோருடன், ஜேவிபி செய்து கொண்ட ஒப்பந்தங்கள் அதனை வெளிப்படுத்தும். இலங்கை இராணுவம் வேறெந்த ஒரு நாட்டுடனும் போர் நடத்தவில்லை. இராணுவத்தினர் இறக்கவுமில்லை. 1920 இல் ஆரம்பித்த சிங்கள - தமிழ் முரண்பாடு, 1983 இல் இருந்து ஆயுதப் போராட்டமாக மாறிய பின்னரே, இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர், அங்கவீனமடைந்துமுள்ளனர். ஆகவே, 2009 மே மாதம் விடுதலைப் புலிகளை வெற்றிகொண்ட நாள் என்பது,...

பாண்டியர்களின் மரபில்

Image
 #வரலாறு_நமக்கானது.... #எழுவோம் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும்போது, ஒருபக்கத்தில் சேரனும் வீழ்ந்திருக்கிறான்; சோழனும் வீழ்ந்திருக்கிறான்; பாண்டியனும் வீழ்ந்திருக்கிறான். ஆனால், மறுபக்கத்தில் வீறுகொண்டு மீண்டுமெழுந்திருக்கிறான்! வீழ்ச்சியும் எழுச்சியும் தமிழினத்திற்கொன்றும் புதிதல்ல; பழக்கப்பட்ட ஒன்றுதான். எத்தனையோ சமர்களைச் சமாளித்துதான் இதுநாள்வரை தமிழினம் வரலாற்றோடு வரலாறு படைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறது! ஆம். நிகழ் நூற்றாண்டில் இந்தத் தமிழீழ வீழ்ச்சி தோல்விதான், மறுப்பதற்கில்லை; மறப்பதற்கில்லை. ஆனால், அத்தோல்வியும் பல்வித ப் பாடங்களைக் கற்றுக் கொடுத்துதான் சென்றிருக்கிறது! அதிலிருந்து தெளிவு பெற புது யுக்திகளை வழங்கித்தான் சென்றிருக்கிறது! வெடித்தெரிந்து தணிந்த எரிமலைகள் ஒருநாள் பாறைகளாகி மூடித் தணிந்திருந்திருக்கும். அதன் பெயர் அது அணைந்துவிட்டது அடங்கிவிட்டது என்றல்ல. அது மீண்டும் வெடித்துச் சிதற நேரங்காலம் நோக்கி உள்ளே கொதித்துக் கொண்டுதானிருக்கும்! இங்கே தோல்வியை நோக்கி கண்ணீர் சிந்தவும், மீண்டும் மீண்டும் தோல்வி தோல்வியென ஓலமிடவும் நேரமில்லை. ஏனெனில், தமிழினம் இந்நூற்றாண...

குடும்பனின் வாழ்வியலில்

 மூன்றாவது முறையாக வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்தது. # திணை : புறவு, இதயவனம், இரும்பொறை  # சிறுபொழுது : 12.10 யாமம், பத்தாம் வளர்பிறை மதி பூரம் நல்சித்திரத்தில், செவ்வாய்  # பெரும்பொழுது :  வைகாசி-17 இளவேனில், 5126 # காட்சி : வீட்டிலேயே தாய் குழந்தையை பெற்றெடுத்தல் # குழந்தை_பிறப்புக்கு_முன் :  மாலை உணவிற்குப்பின் வானில் மதியை கண்ட மனைவி இன்று மதி எந்த நல்சித்திரத்தில் பயணிக்கிறது என கேட்க தற்போது மகம் நல்சித்திரத்தில் பயணிக்கிறது என கூறினேன்.  ஏன் கேட்கிறாய் என நான் வினவிய போது பிள்ளைப்பேறு வலி தொடங்கிவிட்டது என மனைவி கூறினார். பிறகு சீரக நீர் காய்ச்சி கொடுத்தேன். # குழந்தை_பிறப்பு : இரவில் வீட்டின் விளக்கெண்ணெய் தீப ஒளி, தேன் வண்ணத்தில் நிறைந்திருந்த போது, பூரம் நல்சித்திரத்தில் பயணித்து கொண்டிருந்த  வான் மதி வெளிச்சம் பசும்பால் வண்ணத்தில் கூரையின் ஓட்டை வழியாக வானிலிருந்து விழுந்திருந்த போது .... நானும் எனது தாயும் எனது மனைவிக்கு பின்னிருக்க... மகள் நிலா மனைவிக்கு முன்னிருக்க... பெண் எனும் பேராற்றல் படைப்பை செய்தது. ஆம் செல்வ மகள் #பிறந்தாள் # பெயர...
Image
 சித்திரை முழுநிலவு  வருடத்தின் #ஒளி பொருந்திய முழுநிலவு,  மனித மனங்களை மிகவும் ஆட்கொள்ளும் சக்தி வாய்ந்த நாள் இது,  உங்களுக்கு ஏதாவது மன போராட்டம் இருந்தாள் இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்  உங்களால் தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியும்.....! வடக்கே காஞ்சியிலிருந்து தென்மதுரை வரை தமிழர்கள் கொண்டாடும் நாள்,  ஒவ்வொரு மனிதனும் தன் #நன்மை தீமைகளை ஆராய்ந்து பாவங்களில் இருந்து மீள ஏதுவான நாளாக இதை கருதுகிறான்,  முயற்சித்துப் பாருங்கள்,  உங்கள் மனதில் மேஜிக் நிகழும்....☯️ வரலாற்றில் இந்த #முழுநிலவு  தமிழர்களின் வாழ்வியல்  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திக்க வேண்டும்,  இன்று அது பல்வேறு கலாச்சாரமாக நிகழ்வுகளாக திரிந்து ஆனால் நிகழ்ந்து கொண்டிருப்பதை காண முடிகிறது,  உலக மக்கள் யாவருக்கும் எம் பாட்டன் இந்திரனின் அருள் கிட்டட்டும்.... ☯️ -ஆதி

குடும்பர்களின் வாழ்வியலில்

Image
 குடும்பு முறையை தோற்றுவித்து உலகாண்ட பாண்டிய மரபுக் குடியான குடும்பர்கள்(பள்ளர்கள்) மற்றும் இதன் கிளை மரபுக் குடியினர்களின் இறப்பு சடங்கு முறை நிகழ்வுகளை படித்து பண்பாட்டை காக்க முற்படவும்!!!     குடும்பர்கள் (பள்ளர்கள்) இனத்தில் வயது முதிர்ந்த இயற்கை மரணம் அடைந்த தெய்வங்களுக்கு  பண்பாட்டு ரீதியாக குடும்பர்கள் செய்யும் சடங்கு முறைகள் ♦இறந்தவரை வடக்கு நோக்கி உரல் அல்லது மரச் சேரில் உக்கார வைத்து வௌ்ளைத் துணியை நாடியோடு சேர்த்து கட்டி நெற்றியில் சந்தனம் இட்டு நாணயத்தை ஓட்ட வைப்பர். ♦இறந்தவரின் அருகில் வெண்கல நாழியில் நெல் இட்டு, அதன் மேல் ஈசன் (சிவ) மற்றும் பெருமாள் அடையாளத்துடன் கூடிய சிறு விளக்கை ஏற்றுவார்கள். ♦குத்து விளக்கையும் ஏற்றி வைப்பார்கள். தேர் செய்தல்:  ♥இறந்தவரை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல தேர் செய்வார்கள்.. ♥ 3 முகம், 5 முகம் மற்றும் 7 முகத் தேர்கள் செய்வார்கள். ♥இந்த தேரில் 8 பேர் தூக்கும் வடிவில் செய்யப்பட்டிருக்கும்,  ♥தேரில் இறந்தவரை இராஜா போல் உட்கார வைக்கும் படியாக கட்டப்பட்டிருக்கும்,  ♥தேர் சுற்றிலும் சீலைகள் மற்றும் வண்ண பட்டுத்...