பாண்டியர்களின் மரபில்

 #வரலாறு_நமக்கானது....

#எழுவோம்



வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும்போது, ஒருபக்கத்தில்

சேரனும் வீழ்ந்திருக்கிறான்; சோழனும் வீழ்ந்திருக்கிறான்;

பாண்டியனும் வீழ்ந்திருக்கிறான்.

ஆனால், மறுபக்கத்தில் வீறுகொண்டு மீண்டுமெழுந்திருக்கிறான்!


வீழ்ச்சியும் எழுச்சியும் தமிழினத்திற்கொன்றும் புதிதல்ல; பழக்கப்பட்ட ஒன்றுதான்.


எத்தனையோ சமர்களைச் சமாளித்துதான் இதுநாள்வரை தமிழினம் வரலாற்றோடு வரலாறு படைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறது!


ஆம். நிகழ் நூற்றாண்டில் இந்தத் தமிழீழ வீழ்ச்சி தோல்விதான், மறுப்பதற்கில்லை; மறப்பதற்கில்லை. ஆனால், அத்தோல்வியும் பல்வித ப் பாடங்களைக் கற்றுக் கொடுத்துதான் சென்றிருக்கிறது!


அதிலிருந்து தெளிவு பெற புது யுக்திகளை வழங்கித்தான் சென்றிருக்கிறது!


வெடித்தெரிந்து தணிந்த எரிமலைகள் ஒருநாள் பாறைகளாகி மூடித் தணிந்திருந்திருக்கும். அதன் பெயர் அது அணைந்துவிட்டது அடங்கிவிட்டது என்றல்ல. அது மீண்டும் வெடித்துச் சிதற நேரங்காலம் நோக்கி உள்ளே கொதித்துக் கொண்டுதானிருக்கும்!


இங்கே தோல்வியை நோக்கி கண்ணீர் சிந்தவும், மீண்டும் மீண்டும் தோல்வி தோல்வியென ஓலமிடவும் நேரமில்லை.


ஏனெனில், தமிழினம் இந்நூற்றாண்டில் கண்ணீரோடு உதிரமெனும் செந்நீரையும் அதிகம் கண்டுவிட்டது!


புகழ்ப்பாக்களையும் சமரின் ரௌத்திர ஒலிகளை மட்டுமே நெடுங்காலம் கண்டு கொண்டிருந்த தமிழிசையோ இரங்கற்பாவையும் ஓலங்களையுமே அதிகம் கேட்டுவிட்டது!


முன்காலத்தைப் பின் நோக்கிச் சென்று, நிகழ்ந்ததை யாவும் மாற்றும் வல்லமை யாரிடத்துமில்லை. ஆனால் பின்வருங்காலத்தை யாவையும் மாற்றும் வல்லமை நம் கையிலுள்ளது!


ஒரு மாபெரும் சரித்திரத்தை கால்நூற்றாண்டு காலத்திலேயே புலிகள் படைத்துக் காட்டிவிட்டனர்.


'அலைமாகடல் நிலம்வானிலுன் அணிமாளிகை ரதமே அவைஏறிடும் விதமேயுன ததிகாரம் நிறுவுவாய்!" 

என்றான் புரட்சிப்பாவலன் பாரதிதாசன். அதை அப்படியே நிகழ்காலத்தில் நிகழ்த்திக் காட்டினர் புலிகள்.


இதுபோல ஒவ்வொரு கனவும் கணந்துயர்களுக்குப் பின் நினைவாகும்!


இந்நூற்றாண்டு கடந்தாலும் எதோ ஒரு நூற்றாண்டு தமிழருக்கென ஒரு தேசம் சமைத்தே தீர்வோம்!


புலிகளின் தாகமாயிருந்தது இன்று தமிழரின் தாகமாக உருவெடுத்துள்ளது!


வீழ்ந்தோம் என்கிறார்களா?


ஆம் வீழ்ந்தோம், ஆனால் நாங்கள் எழுவோம்!


வரலாறு நெடுக நமக்குச் சுட்டிக் காட்டுவது அதுதான். அது மட்டுந்தான்.


- ஏர் மகாராசன் 

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்