குடும்பனின் புரிதலில்
மேரி கொல்வின் - தமிழினம் மறக்காத வரலாற்றுப் பெயர்! "ஈழத் தமிழ் மக்கள் பட்ட அவஸ்தையை விட நான் பட்ட கஷ்டம் ஒன்றும் இல்லை..." – இலங்கை இராணுவத்தின் தாக்குதலில் தனது ஒரு கண்ணைப் பறிகொடுத்த போது மேரி கொல்வின் உதிர்த்த வார்த்தைகள் இவை. பிப்ரவரி 22 இந்த வீரமங்கையின் நினைவு நாள்! யார் இந்த மேரி கொல்வின்? 2001-ல் வன்னிக்குள் நுழைந்து, 6 ஆண்டுகளாக உலகம் அறியாமல் மறைக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் அவலத்தை வெளிக்கொண்டு வந்தவர். பார்வை இழந்தும் பணியைத் தொடர்ந்தவர். வன்னியிலிருந்து வெளியேறும்போது இலங்கை இராணுவம் வீசிய எறிகுண்டில் தனது இடது கண்ணை இழந்தார். அன்று முதல் கருப்புத் துணியால் கண்ணை மறைத்துக் கொண்டு, ஈழத்தின் குரலாய் உலக அரங்கில் வலம் வந்தார். வெள்ளைக் கொடி துரோகத்தின் சாட்சியும் இவரே. 2009 மே 18 அதிகாலையில், இலங்கை இராணுவத்திடம் சரணடையச் சென்ற அரசியல் துறைப் பொறுப்பாளர்கள் நடேசன், புலித்தேவன் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்ட அந்த 'வெள்ளைக் கொடி' துரோகத்தை உலகிற்கு அம்பலப்படுத்தியவர் இவரே! ஈழத்தில் ஒரு கண்ணை இழந்த மேரி, 2012-ம் ஆண்டு இதே நாளில் சிரியப் போரின் கோரத்தை ஆவணப்...