குடும்பனின் தொகுதியில்

 ஆபரேஷன் நயினார்.. ஒரு சீட் வரக்கூடாது.. இல்லை பதவி காலியாகிடும்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்!


வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க ஒரு இடத்தில் கூட வெற்றி பெறக் கூடாது என்பதில் தி.மு.க தலைமை மிக உறுதியாக உள்ளது. குறிப்பாக, பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை ( Nainar Nagendran )அவரது சொந்தக் கோட்டையிலேயே வீழ்த்துவதற்காக 'ஆபரேஷன் நயினார் ' என்ற பெயரில் தி.மு.க ஒரு பிரம்மாண்டமான தேர்தல் வியூகத்தை வகுத்து வருகிறதாம்.. இதை எப்படியாவது சரியாக நிறைவேற்றி.. பாஜகவை "ஜீரோ" என்ற நிலைக்கு கேட்ஸ் செல்ல வேண்டும் என்று திமுக காய் நகர்த்தி வருகிறதாம்.


தலைமையின் நேரடி எச்சரிக்கை

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பாஜக சார்பாக இவர் நெல்லையில் இருந்து எம்எல்ஏவாக தேர்வானார். அதன்பின் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நயினார் நாகேந்திரன் தோல்வியுற்றாலும், அவர் பெற்ற கணிசமான வாக்குகள் தி.மு.க-வை யோசிக்க வைத்துள்ளன. இதன் விளைவாக, திருநெல்வேலி மண்டல நிர்வாகிகள் மற்றும் தி.மு.க பலவீனமாக உள்ள பகுதிகளின் பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியாக ஆலோசனை நடத்தியுள்ளார்.


நெல்லை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் தோல்வி அடைந்தால் கூட, அந்தப் பகுதியின் ஒட்டுமொத்த கட்சி அமைப்பும் அதிரடியாக கலைக்கப்படும் என்று முதலமைச்சர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம், கீழ்மட்ட நிர்வாகிகள் முதல் மாவட்டச் செயலாளர்கள் வரை அனைவரும் மிகுந்த நெருக்கடியில் பணியாற்றி வருகின்றனர்.


அதன்படி வீடியோ மீட்டில் கடுமையாக எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்.. நெல்லை திமுகவின் கோட்டை இல்லை. அங்கே திமுக அதிமுகதான் மாறி மாறி வெற்றிபெறுகிறது. கடந்த முறை பாஜக வென்றுவிட்டது. இந்த நிலை மாற வேண்டும். அங்கே திமுக தொடர் வெற்றிபெறுவதை உறுதி செய்ய வேண்டும். அதற்கான பணிகளை செய்யுங்கள்.. இல்லையென்றால் உங்கள் சீட் காலியாகிவிடும் என்று ஸ்டாலின் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.


சாதி ரீதியான கணக்குகள்: நைனாருக்கு செக்!

நெல்லை தொகுதியின் வாக்கு வங்கியை ஆய்வு செய்த தி.மு.க தலைமை, அங்கு  பிள்ளைமார்,மறவர்

சமூகத்தின் வாக்குகளை விட 

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் 

 வாக்குகள் அதிகளவில் இருப்பதை கண்டறிந்துள்ளது. கடந்த 2021 தேர்தலில் நயினார் நாகேந்திரனின் வெற்றிக்கு அந்தச் சமூக வாக்குகள் முக்கியப் பங்காற்றியதும் தெரியவந்துள்ளது.


சாதி வாரியாக நெல்லையில் வாக்காளர்களின் எண்ணிக்கை


தேவேந்திர குல வேளாளர்- 90,000

பிள்ளைமார் -60,000

யாதவர் -45,000

தேவர் - 30000

நாடார் - 12,000

கிறிஸ்துவர் நாடார்

8000

இஸ்லாமியர் 20,000

இதர பிரிவினர் 49077

மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 3,04,077


நெல்லை சட்டமன்ற

தொகுதியில்

தேவேந்திர குல வேளாளர் சமுதாய 

மக்களின் நன் மதிப்பை

பெற்று,

மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் முதல் ஆளாக நின்று வருபவர் 

தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் உறவின் முறை

தலைவர் வே.ச.முத்துக்குமார்

ஆவார்,

கடந்த முறை நைனாருக்கு தேவேந்திர குல வேளாளர் சமுதாய வாக்குகளை பெற்றுக் கொடுத்ததில் பெரும் பங்கு இவருக்கு உண்டு

நெல்லையில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சார்ந்த தலைவர்கள் சிலை இல்லாதது பெரும் குறையாக இருந்து வந்திருந்த நிலையில் 

முதன்முதலாக இந்த கோரிக்கை நைனார் அவர்களிடம் சட்ட சபையில்

பேச சொல்லி வலியுறுத்தப்பட்டுள்ளது 

அவர் மௌனம் காத்ததின் காரணமாக 

அந்த கோரிக்கை நெல்லை மாநகராட்சி நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட உடன்

உடனடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 

தற்பொழுது

தேவேந்திர குல வேளாளர் உறவின் முறையின் 

கோரிக்கையை ஏற்று

திமுக அரசு

நெல்லையில் தியாகி இம்மானுவேல் சேகரன்

அவர்கள் 

முழு உருவ வெண்கல

சிலை அமைத்திட 

முதல்கட்ட

பணிகளை செய்து வருகிறது,

ஆதலால்

இந்த முறை 

திமுக விற்கு

ஆதரவாக

இவர்கள்

பிரச்சாரத்தில்

ஈடுபடுவார்கள் என கூறப்படுகிறது

இதனால்

தேவேந்திர குல வேளாளர் ஓட்டுக்களில் கணிசமாக திமுகவுக்கு கிடைத்துவிடும்

எனவும்,

இது நைனாருக்கு பெரும் பின்னடைவாக இருக்கக்கூடும் 

என

கூறப்படுகிறது,

மேலும்

தேர்தல் முடிவை தீர்மானிப்பதில் 

பிள்ளைமார்களும்

யாதவர்களும்

என்பதால் திமுக அவர்கள் மீது தனிக்கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது என்கிறார்கள்.


பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த தி.மு.க நெல்லை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் சுப்பிரமணியன்

அல்லது

மேயர் கிட்டு,

அல்லது

யாதவர் .சமுதாயத்தைச் சார்ந்த

துணை மேயர் கே ஆர் ராஜு 

ஆகியோரை

நயினாருக்கு எதிராகக் களமிறக்க தலைமை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

யாதவர் சமுதாயம் சார்பில்

துணை மேயர் 

கே.ஆர் ராஜீவும் MLA சீட்டு பெறுவதில் முன்னணியில் இருந்து வருகிறார் 

இதன் மூலம் பா.ஜ.க-வின் வாக்கு வங்கியைப் பிரித்து, வெற்றியைத் தன்வசமாக்க தி.மு.க திட்டமிட்டுள்ளது.


கனிமொழியின் சிறப்புப் பணி

தென் மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் பா.ஜ.க-வின் செல்வாக்கை சிதைக்க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு ஒரு தனிப்பணி வழங்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் நேரடியாக கனிமொழிக்கு கொடுத்த டாஸ்க் இது என்கிறார்கள்.


ஒவ்வொரு தொகுதிக்கும் தகுதியான மூன்று வேட்பாளர்களின் பட்டியலைத் தயாரித்தல்.


பா.ஜ.க வேட்பாளர்களின் பலம் மற்றும் பலவீனங்களை ஆய்வு செய்தல்.


எதிர்க்கட்சிகளின் வியூகத்தை முறியடிக்கும் திறன் கொண்ட வேட்பாளரைத் தேர்வு செய்தல்.


நயினாருக்கு என்று சிறப்பாக திட்டங்களை வகுத்து.. அவருக்கு எதிராக களத்தை மாற்றுதல்.


போன்ற பொறுப்புகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பா.ஜ.க-வின் கோட்டையாகக் கருதப்படும் இடங்களைக் கைப்பற்ற தி.மு.க மேலிடம் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கைகள், தென் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்