Posts

Showing posts from December, 2024

குடும்பனின் பார்வையில்

 அன்புள்ள மகனே!   உனக்கு 20 வயது வரும் போது எனக்கு 60 வயதை தாண்டிவிடும் என்பதால்  அவ்வப்போது நடக்கும்  விவகாரத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தற்போது தமிழகத்தில் எளிய மக்கள் மீதான வன்முறை  அதிகரித்து வரும் விவகாரத்தில் ஜனநாயகவாதிகளின் கள்ள மௌனம் குறித்து பேச விரும்புகிறேன்.  கடந்த இரண்டு ஆண்டுகளில் எளிய மக்கள் மீதான வன்முறை சம்வங்களின் எண்ணிக்கை 2000 த்தை தாண்டி விட்டதாக எவிடன்ஸ் கதிர் என்ற மனித உரிமை செயற்பாட்டாளர் சுட்டி காட்டியுள்ளதையும், நெல்லை மாவட்டத்தில் மட்டும் கடந்த பத்து மாதத்தில் 84 சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் செய்திகள் வருகிறது. இது போக கடந்த மூன்று மாதத்தில் 19 பேர் படுகொலைக்கு உள்ளாக்கபட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிந்து கொள்ள வேண்டும்.  கடந்த காலங்களை விட இது மிக அதிகமான எண்ணிக்கை என்பதால் இது பேசு பொருளாக்க வேண்டிய முதன்மையான விவகாரம் ஆகும். மகனே! நீ மனிதநேய மிக்கவனாக மட்டுமல்லாமல், மனவலிமை மிக்கவனாக வளரவேண்டும் என்பதே எனது விருப்பம்.  நுட்பமாக நடக்கும் நிகழ்வுகளை ஒவ்வொன்றாக கவனி, ரோட்ல போகிறவனை வெட்டுகிறான், ஆத்த...

குடும்பனின் பார்வையில்

 நீ பதில் சொல்லவேண்டுமெனில் ஒவ்வொருத்தருக்கும்ஞ பதில் சொல்லவேண்டும். பதில் சொல்லிக்கொண்டே இருந்தால்  உனது இலக்கை நீ ஒருபோதும் அடையமுடியாது. உன்னுடைய பதிலை ஏற்கப்போவதுமில்லை. இது முரண்பாடான உலகம், எல்லோருக்கும் பிடித்தமாதிரி நடந்துகொள்ள முடியாது. நீ ஓடு ஓடிக்கொண்டேயிரு, உன்னை விரும்புகிறவர்கள் உன்னை பின்தொடர்வார்கள். எந்தவொரு விடயமும் எளிதில் கிடைத்துவிடாது. குறை சொல்லவேண்டும் என நினைத்துவிட்டால் எவ்வாறு வேண்டுமானாலும் சொல்வார்கள். மேதகு செல்வாபாண்டியர் இருக்கும் போது, அவரையும் ஏசியவர்கள்தான் நாம். பள்ளர் சமுதாயம் உயிருடன் இருப்பவர்களை பயன்படுத்த தெரியாத சமூகம். இந்தநிலை தொடர்ந்தால், அரசியலில் அனாதைதான்.  இங்கு எல்லோரும் தன்னை முன்னிலைபடுத்திக் கொள்ளவே ஆசைப்படுகிறோம், சமுதாயம் என்ற போர்வையில்,,,, எத்தனையோ பேர் இந்த சமுதாயத்தை நினைத்துக்கொண்டு தூங்காமல், ஏதாவதொரு மாற்றம் ஏற்படாதா என்று ஏங்கிகொண்டே இருக்கிறார்கள். எத்தனையோ பிரச்சினை நம்மை சுற்றி நடக்கிறது. ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல், சமுதாயம் என்று சிந்திப்பவர்கள் இங்கு ஏராளம். அவர்கள் விரும்புவதெல்லாம் சமுதாய ஒற்றுமையே.....

குடும்பனின் பார்வையில்

Image
 கீழ்வெண்மணி தீர்ப்பை மாற்றுமா நீதிமன்றம்? -  மேனாள் நீதிபதி கே.சந்துரு ================================= கீழ்வெண்மணிப் படுகொலைகள் தொடர்பில் சமூகவியலாளர்கள் கட்டுரைகள் பல எழுதிவிட்டனர். கணிசமான படைப்புகளும் வெளிவந்திருக்கின்றன. குற்றவாளிகள் உயர் நீதிமன்றத்தாலும், உச்ச நீதிமன்றத்தாலும் தண்டிக்காமல் விடுவிக்கப்பட்டதைப் பலரும் விமர்சித்திருக்கிறார்கள். ஆயினும் உயர் நீதிமன்ற விசாரணை மற்றும் உச்ச நீதிமன்ற மேல்முறையீடு முழுமையாக அணுகப்படவில்லை. அது விவாதிக்கப்படல் முக்கியம். அப்போதுதான் இனி ஒரு துயரம் இப்படி நடக்காமல் தவிர்க்கப்படும். கீழ்வெண்மணிச் சம்பவம் நடந்த நாளே அது திட்டமிட்ட சதி என்பதைச் சொல்லிவிடக் கூடியது. போராடும் விவசாயத் தொழிலாளர்களைத் தாக்குவதற்கு 1968, டிசம்பர் 25 தீர்மானிக்கப்பட்டதற்குக் காரணம் உண்டு. டிசம்பர் 23-29 தேதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு கேரளத்தின் கொச்சியில் நடைபெற்றுவந்தது. கீழத் தஞ்சையின் இரு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் பெரும்பாலானோர் இதற்காகச் சென்றிருந்தனர். டிச. 25 கிறிஸ்துமஸ் நாளின் இரவு 10...

குடும்பனின் பார்வையில்

 1957 காலகட்டத்தில் முதுகுளத்தூர் பகுதிகளில் நடந்த சாதிய கலவரம் மற்றும் படுகொலைகளுக்கு பிறகு ஒரு பிரேக்,  பிறகு 1990 காலகட்டத்தில்   துவங்கி ஒரு பத்தாண்டு காலம் தென் தமிழகத்தில் தொடர் கொலை அதற்கு பதிலடியாக தொடர் கொலை.....???? இந்த காலத்தில் தான் கமலகாசன் நடித்த தேவர் மகன் திரைபடம் வந்து சூழலை இன்னும் மோசம் ஆக்கியது, அப்போது வரை ஒருவர் ஆதிக்கம் செலுத்த முனைவதும் மற்றொருவர் அந்த ஆதிக்கத்தை தகர்ப்பதுமாக சூழல் இருக்கிறது, ஆனால் திராவிட கட்சிகளின் திருட்டுதனத்தால் ஒருவர் கை கொஞ்சம் ஓங்குகிறது,  ஆனாலும் மறுபுறம் களத்தில் எதிர்த்து நிற்கும் சூழல் தொடரவே செய்கிறது, அப்போது தான் புரச்சியாளர்கள் தென் தமிழகத்தை நோக்கி படையெடுக்கிறார்கள், தலீத்தியத்தை ஒரு தரப்பின் தலையில் ஏற்றுகிறார்கள், ஏற்கனவே அம்பேத்கரை அறிவாளி என்கிற அளவில் அறிமுகம் பெற்றிருந்த சமூகம் அம்பேத்கர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று #விளைவு புரியாமல் தலீத்தியத்தை தூக்கி சுமக்கத் துவங்குகிறது.....!!?!!! தலீத்தியத்தை சுமக்க சுமக்க தாம் உளவியலாக வீழ்த்தப்படுகிறோம் என்பதையோ, தமது அடையாளங்களும் அதோடு தொடர்பு...