குடும்பனின் பார்வையில்
நீ பதில் சொல்லவேண்டுமெனில் ஒவ்வொருத்தருக்கும்ஞ பதில் சொல்லவேண்டும். பதில் சொல்லிக்கொண்டே இருந்தால் உனது இலக்கை நீ ஒருபோதும் அடையமுடியாது. உன்னுடைய பதிலை ஏற்கப்போவதுமில்லை.
இது முரண்பாடான உலகம், எல்லோருக்கும் பிடித்தமாதிரி நடந்துகொள்ள முடியாது. நீ ஓடு ஓடிக்கொண்டேயிரு, உன்னை விரும்புகிறவர்கள் உன்னை பின்தொடர்வார்கள்.
எந்தவொரு விடயமும் எளிதில் கிடைத்துவிடாது. குறை சொல்லவேண்டும் என நினைத்துவிட்டால் எவ்வாறு வேண்டுமானாலும் சொல்வார்கள்.
மேதகு செல்வாபாண்டியர் இருக்கும் போது, அவரையும் ஏசியவர்கள்தான் நாம். பள்ளர் சமுதாயம் உயிருடன் இருப்பவர்களை பயன்படுத்த தெரியாத சமூகம்.
இந்தநிலை தொடர்ந்தால், அரசியலில் அனாதைதான்.
இங்கு எல்லோரும் தன்னை முன்னிலைபடுத்திக் கொள்ளவே ஆசைப்படுகிறோம், சமுதாயம் என்ற போர்வையில்,,,,
எத்தனையோ பேர் இந்த சமுதாயத்தை நினைத்துக்கொண்டு தூங்காமல், ஏதாவதொரு மாற்றம் ஏற்படாதா என்று ஏங்கிகொண்டே இருக்கிறார்கள்.
எத்தனையோ பிரச்சினை நம்மை சுற்றி நடக்கிறது. ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல், சமுதாயம் என்று சிந்திப்பவர்கள் இங்கு ஏராளம். அவர்கள் விரும்புவதெல்லாம் சமுதாய ஒற்றுமையே...
ஒருவரை வீழ்த்திதான் ஒருவர் முன்னுக்கு வரவேண்டும் என்பது விதியாக இருக்குமானால், அது ஆட்சி, அதிகாரத்தை நோக்கி இருக்கவேண்டும். சமுதாயத்தின் அடையாளத்தை வீழ்த்தி என்னபயன்?
எழுதுவதற்கு எழுத்துக்கள் ஏராளம், படிப்பது என்னவோ சிலர்தான். இருந்தும் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள், நாம் விரும்பும் அதிகாரம் நமக்கு கிடைத்துவிடாதா,என்று எத்தனையோபேர் இருக்கிறார்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டே,,,,,
எதுவும் கடந்து போகும்.
தேவராஜ் குடும்பர்
Comments
Post a Comment