குடும்பனின் விளக்கத்தில்
மக்களுக்கு புரியற மாதிரி சொல்லுங்க..!!!!! அணையின் நீர்மட்டம் இத்தனை அடிக்கு உயர்ந்தது என்று கூவு கூவுவென்ற கூவுவார்களே தவிர, அணையின் கொள்ளளவு எவ்வளவு தற்போதைய இருப்பு எவ்வளவு என்பதை மட்டும் பெரும்பாலும் சொல்லவே மாட்டார்கள். என்றைக்கும் அப்படித்தான், இத்தனை அடி உயர்ந்தது அத்தனை அடி உயர்ந்தது என்று ஒரே அடி புராணம்தான். ஒரு அணையை, அதன் பிரமாண்டத்தை விவரிக்கும் முக்கிய அம்சம் என்னவென்றால் அதன் கொள்ளளவு தான். இந்த அதிமுக்கிய விடயம் மட்டும் ஏனோ செய்தியை எழுதுபவர்களுக்கு விளங்கவே மாட்டேங்கிறது. கர்நாடகாவின் மைசூரில் உள்ள 124 அடி கிருஷ்ணராஜ சாகர் எனப்படும் கேஆர்எஸ் அணையின் மொத்த கொள்ளளவு 45.4 டிஎம்சி. ஆனால் அதைவிட நான்கு அடி உயரம் குறைவான மேட்டூர் அணை, 120 அடிக்கு தேக்கி கொள்ளும் நீரின் முழுகொள்ளளவு 93.4 டிஎம்சி. அவ்வளவு ஏன்? சோலையாறு அணை 160 அடி உயரம் ஆனால் கொள்ளளவு வெறும் 5 டிஎம்சிதான்.. பவானி சாகர் 105 அடி, கொள்ளளவு 32 டிஎம்சி. ஆனால் 119 ...