குடும்பனின் பார்வையில்
வேளாளர்_யார் ??
1945.ல்
திரு #கந்தையாபிள்ளை அவர்கள் எழுதி திருநெல்வேலி தென்னிந்திய
சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம் லீமிடெட் வெளியிட்ட
"தமிழ்இந்தியா "என்ற புத்தகத்தில் ..
இயல் 2ல்
இரண்டாவது அத்தியாயம்
"நிலப்பிரிவும்"
என்பதில். ...
#மறவர்
#குறவர்
#வேளாளர் மற்றும்
#பரதவர் என
#வேளாளர் யார் என்பதை ..
#மிகசிறப்பாக
#தரமாக..
#பதிவு செய்துள்ளார்.....
ஆற்றோரங்களில் வாழ்ந்து தானியங்களை விளைவித்தோர்- "வேளாளர்" எனப்பட்டனர்.
அவர்கள் ஆற்று நீரைப் பயன்படுத்தி வேளாண்மை செய்தனர்.
ஆற்றுக்குச் சேய்மையில் வாழ்ந்தோர் மழை நீரை, ஏரிகளிலும் குளங்களிலும் தேக்கிவைத்து ஏற்றம் கமலை/கபிலை, பிழா, இடா முதலியவைகளாலிறைத்துச் சாமை, அவரை , துவரை முதலிய தானியவகைகளையும் விளைவித்தனர். அதற்கு அப்பால் பருத்தி விளைந்தது.
கற்காலத்திலேயே தமிழ் மக்கள் பருத்தி ஆடை உடுத்தார்கள். அக்காலத்தில் மற்யை நாடுகளில் மக்கள் தோல் கம்பளி சணல் ஆடைகளை உடுத்தினர்; அல்லது ஆடையின்றி யிருந்தனர்.
ஆற்றுச் சமவெளிகளில் ஆடை நெய்தற்கு வேண்டிய கற்காலப் பொருள்கள் கண்டு எடுக்கப்பட்டன. இதனால் அக்கால மக்கள் ஆடை நெய்வதில் தேர்ச்சிபெற்றிருந்தார்கள் என்று விளங்குகின்றது.
அவர்கள் மரத்தினால் வீடுகட்டி வாழ்ந்தார்கள்; நெற்களஞ்சியங்கள் மரத்தினாற் செய்யப்பட்டன. வண்டியும் மரத்தினாற் செய்யப்பட்டது. வண்டி, உரல், உலக்கை, தொட்டில் முதலியன இக்காலத்திற் போலவே இருந்தன.
இக்காலத் தச்சர் பயன்படுத்தும் ஆயுதங்கள் போன்று கல்லாற் செய்யப்பட்டவை புதிய கற்காலக் குடியிருப்புகளிற் கண்டெடுக்கப்பட்டன.
இந் நிலத்துக்குரிய குலதெய்வம் வேந்தன். அக்கால மக்கள் நல்ல அரசனின் ஆளுகையில் எல்லா நன்மைகளும் உண்டாகின்றன என்று நம்பினார்கள். ஆகவே அவர்கள் எல்லா நற்குணங்களும் அமைந்த அரசனைத் தெய்வமாக வணங்கினார்கள்.
பிற்காலத்தில் வேந்தன் இந்திரன் எனப்பட்டான். இது தமிழர் ஆரியர் கலப்பு நேர்ந்த பிற்கால வழக்கு. ஆரியர், இந்திரன் தேவர்களுக்கு அரசன் எனக் கருதினர்.
வேளாண் மக்கள் இந்திரனுக்கு விழாக்கள் சிறப்பாக எடுத்தனர். இவ்வகை விழாக்களைப்பற்றிச் சிலப்பதிகாரம் மணிமேகலை முதலிய நூல்கள் அழகுறக் கூறுகின்றன
.
வேளாண் மக்கள்
உழுதுண்போர்,
உழுவித்துண்போர்
என இருவகையினர்.
இவருள் உழுவித்துண்போர் வேள் எனப்பட்டுக் குறுநில மன்னராகவும் ஆட்சி புரிந்தனர். இவ்வகுப்பினர் அரசனால் கணிக்கப்பட்ட பெருமக்களாவர்.
'மாடு' ஒரு காலத்திற் செல்வமாக மதிக்கப்ட்டது. பின்பு 'தானியம் போன்ற உணவுவகைகள்' செல்வமாக மதிக்கப்பட்டன. "அதிக உணவுப் பொருள்களை வைத்திருப்பவனே செல்வனாக மதிக்கப்பட்டான்."
"வேளாண் மக்கள் அதிக தானியங்களை விளைவித்துச் செல்வராய் வாழ்ந்தனர். அவர்கள் பெரிய வீடுவாயில்களையும் அமைத்தனர்."
அவர்களுக்கு வேண்டிய மட்பாண்டங்கள், உலோகப் பாத்திரங்கள் ஏர்த்தொழிலுக்கு வேண்டிய கலப்பை நுகம், கொழு முதலியன, அவர் மகளிர் அணியும் ஆபரணவகை, உடுக்கும் ஆடைகள் இவையும் இவை போன்றவைகளும் செய்துதரவும் தொழலாளர் மருதநிலத்தே வந்து தங்கினர்
.
பிற நிலங்களில் வாழ்வோர் தம் நாடுகளிற் கிடைக்கும் பண்டங்களைக் தானியங்களுக்குப் பண்டமாற்றுச் செய்ய வந்தனர். இவ்வாறு மருதநிலம், மக்கள் போக்குவரத்தும் ஆரவாரம் உடைய நகரமாக மாறிற்று:
இங்கு பொழுது போக்குக்குரிய ஆடல், பாடல், விழா முதலியன நிகழ்ந்தன; இன்பக்கலைகள் வளர்ச்சியுற்றன.
ஒவ்வொரு தொழிலாளரும் வாழும் வீதிகளுடைய நகரங்கள் இங்கேதான் தோன்றின.
தமிழ் இலக்கியங்கள் மருதநில மக்களின் உண்டாட்டு, கணியாட்டு, நீராட்டு, விளையாட்டுகளையெல்லாம் அழகாகக் கூறுகின்றன.
திரு #கந்தையாபிள்ளை அவர்களின்
தமிழ் இந்தியா நூலில் இருந்து..
குடும்ப கிழவனார்
http://www.tamilvu.org/library/lA800/html/lA800ind.htm

Comments
Post a Comment