Posts

Showing posts from March, 2024

குடும்பனின் பார்வையில்

 தேர்தல் என்பது மாட்டுவண்டி எல்கைப் பந்தயமல்ல.. கலப்புத் திருமணம் வந்ததற்கு யார் காரணம்..? அரசியலில் தனிமனித வாழ்க்கையைப் பெரிதுபடுத்துவதில்லை..!!! தேவேந்திரர்கள் மட்டும்தான் பண்பாட்டு அரசியலைக் கட்டமைக்க முயற்சிக்கிறோம்.. தென்காசியில் Dr.KK க்கு செல்வாக்கு அறவே இல்லை எனச் சொல்லிவிட இயலாது.. எல்லாத் தலைவர்களும் 1980 களில் தலித் கருத்தியலை ஆதரித்தவர்கள் தான். பிறகு சுய அடையாளம் பறிபோனதை அறிந்த பின்பு தான் பண்பாட்டு அரசியலைக் கட்டமைக்க முனைந்தோம்.. 1990 களில் நான் அண்ணன் JP அவர்களையும், Dr.KK அவர்களையும் ஆதரித்தவன் தான். பிறகுதான் பொது அரசியலில் காணப்படும் நுட்பங்களை அறிந்து கொண்டேன். எதிரியைக் கூட நாகரிகமாக விமர்சனம் செய்யப் பழகுவோம்.. விசிக வுக்கு முந்தியது பூவை. ஜெகன்மூர்த்தியின் அமைப்பு.. இன்று இரண்டும் அரசியலில் நிலை கொண்டுள்ளன. தேவேந்திரர்கள் பண்பாட்டைப் பேசுகிற போது அரசியலையும் பேசுகிறோம். இரண்டிலும் முரண்களை வளர்க்கிறோம்.!!! அரசியல் களத்தில் வாக்குச் சேகரிக்கப் போகும் போது இடையூறுகளைச் சந்திக்கிறோம்..!!!! வருத்தம் வஞ்சமாக மாறும் என்பது பழமொழி.. கடந்த தேர்தலில் ஒரு கட்சி இன்ன...

குடும்பனின் பார்வையில்

Image
சாதி மறுப்பு, சாதி ஒழிப்பு, சமூக நீதி என்பதெல்லாம் அரசியலில் "கிச்சுக் கிச்சுத் தாம்பூலம் விளையாட்டு தான்." அதிமுக, திமுக, மதிமுக .. இவற்றின் கடந்த கால வரலாறுகளை தமிழக மக்கள் தேர்தல் நேரங்களில் எளிமையாகக் கடந்து போவதுதான் அந்தக் கட்சிகளின் பலம்.. தேவேந்திரர்கள் இந்த மாதிரியான நேரத்திற்கு ஏற்ப தம்முடைய அரசியல் தகவமைப்புகளை மாற்றிக் கொள்ள வேண்டும். வாக்கு வங்கி அரசியலில் வெறும் கொள்கையை மட்டுமே விடாப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு தொங்குவது நம்மை ஒருபோதும் கரை சேர்க்காது.. தென்காசியில் ஒரு சமூகத்தின் வாக்குகளைப் பெறுவதற்கு இருபெரும் தலைமைகள் மோதுவது பெரும் பலவீனம். இருபெரும் தலைமைகளும் நேரடிப் போட்டியிலிருந்து விலகி ஆதரவு தெரிவித்து விட்டுக்கொடுத்திருக்கலாம்.. 2016 ஆம் ஆண்டு தி இந்து நாளிதழில் சமஸ் எழுதிய தமிழ்நாட்டு அரசியல் என்ற தலைப்பிட்ட கட்டுரையை நாம் வாசிக்க வேண்டும். சாதி மறுப்பு, சாதி ஒழிப்பு, சமூக நீதி என் பதெல்லாம் அரசியலில் கிச்சுக் கிச்சுத் தாம்பூலம் விளையாட்டு தான். எல்லா அரசியல் கட்சிகளுக்குள்ளும் சாதியப் பாகுபாடுகள் உள்ளன. அவற்றின் அடிப்படையிலே தான் அரசியலே நடக்கிறத...

குடும்பனின் பார்வையில்

 ஊர் குடும்பன் - தக்கார். மா.சோ. விக்டர் அவர்கள் நூல்: பண்டைய தமிழரின் நில மேலாண்மை மருத நிலம்யாவும் மள்ளர் குடியின் உருவாக்கம் ஊர்க்குடும்பன் தலைமையில் இயங்கிய வேளாண்மை, விரிவுபடத் தொடங்கியதும், மக்கள் தொகை பெருக்கமும், பல ஊர்களைத் தோற்றுவித்தன. புதுப்புது ஊர்களின் தோற்றத்தால், பொதுமைப்படுத்தப்பட்ட வேளாண்மை, தனியுடமைத் தொழிலாக மாறியது. ஊர்க்குடும்பர்களில் பலர், தனியுடமைச் செல்வர்களாயினர். காலப் போக்கில் அனைத்து ஊர்களிலும், தனியுடமையாக நிலங்கள் பிரிக்கப்பட்டன.   உழைப்பால் பெற்ற பலனில், தேவை போக, வணிகர்களிடம் விற்றனர். அவ்வாறான விற்பனை முறையில், பெரும் அறுவடை செய்தோர், தாங்களே வணிகர்களாக மாறினர். குறிப்பிட்ட பகுதிகளில் வாழ்ந்திருந்த மக்களில், விரிந்த நிலப்பரப்பைக் கொண்டிருந்தவர்கள், கிழார்கள் என அழைக்கப்பட்டனர். கிழான் என்ற நிலை, குடும்பர்களினின்றும் உயர்வானதாக கருதப்பட்டது. அச்சூழலில், உழுதுண்ணும் குடும்பர்கள், உழுவித் துண்ணும் கிழார்கள் என, வேளாண் சமூகம் பிரிந்தது. பெரும் வணிகர்களாகக் கருதப்பட்டவர்கள், கிழார்களாகவே இருந்தனர். இருப்பினும் இவ்விரு பிரிவினரும் வேளாண்மைச் சம...

குடும்பனின் பார்வையில்

✒️ தாயுள்ளம் கொண்டோர் நடிப்பதில்லை.. மதுரைப் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர் பேரா. இராம.சீனிவாசன் தமது தேர்தல் பரப்புரைகளுக்கிடையே தனியார் வலையொளி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தேவேந்திர குல வேளாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பட்டியல் மாற்றக் கோரிக்கையை தமது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இடம்பெறச் செய்வேன் என உறுதிபடப் பதிவிட்டமைக்கு யாழி வாசகர் தளம் நன்றி தெரிவித்து மகிழ்கிறது.. https://youtu.be/G7o-_Fufbt8?si=bVhU_6OsdMsiFCJD யாரும் பேசத் துணியாத வாக்குறுதியைத் தந்தமைக்கு நாம் என்ன கைமாறு செய்யப் போகிறோம்.. பட்டியல் வெளியேற்றம் என்ற மகத்தான கோரிக்கையை எப்படி நிறைவேற்றுவது அதன் வழிமுறைகள் என்ன அதனால் ஏற்படும் இடர்பாடுகள் என்னென்ன அவற்றை எப்படி எதிர்கொள்வது என்பதையெல்லாம் மிகத்தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.. அரசாணை நிறைவேற்றியதையே இன்னும் நம்மில் பலர் அறியவில்லை. சிலர் இனம் தெரியாப் பகையாளிகவே தொடர்கிறார்கள். பலர் அதனை விமர்சித்துக் குறுக்குச் சால் ஓட்டுகின்றனர்.. பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை ஆதரிக்கிறவர்கள் ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அது பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவோட...

குடும்பனின் பார்வையில்

 அன்பானவர்களே!,    "சமூகம் சார்ந்து, ஓரணியாக  தேவேந்திர குலம் என்றைக்கு நடைபயிலுமோ, அன்றைக்குத்தான் இந்த இனம் தனது உண்மையான இலக்கினை அடையமுடியும்."      சும்மாச் சும்மா 'என் தலைவன்...' 'உன் தலைவன்!'  வீரவசனம் பேசி, இந்த இனம் ஆகாயத்தில் சிலம்பம் வீசுவதெல்லாம், இனத்துரோகச் செயலேயன்றி, வேறல்ல!.    கற்றறிந்த பலரும்கூட, கபோதிகளை விடக் கேவலமாக இனத்தை வழிநடத்துவதை நினைக்கும் போது, இவர்களெல்லாம், இருபத்தொன்றாம் நூற்றாண்டு மனிதர்கள் அல்லர், "கற்காலப்          பிறவிகள்" என்றே எண்ணத் தோன்றுகிறது.    இப்படிப்பட்ட தொங்கு அரசியல் வழிகாட்டிகளால் தான், மாற்றான் நம் இனத்தை அதலபாதாளத்தை நோக்கி தள்ளுகிறான்.    இவர்களோ, அப்பத்தை குரங்கு கையில் பறிகொடுத்து விட்டு, "அச்சச்சோ,        போச்சே!"  என்று ஆலோலம் பாடுகிறவர்களாக  முகாரி இராகம் இசைக்கிறார்கள்.    ஏ... தேவேந்திரர்களே!, இன்னும்கொஞ்சம் நேரம் இருக்கத்தான் செய்கிறது!,    ஓரணியில் நின்று, தேர்தலை சந்திக்க வாருங்கள்...

குடும்பனின் பார்வையில்

 ✒️நம்மாழ்வார் பேச்சைக் கேட்டுப் பின்பற்றுகிறவர்களாக மாறவேண்டும்.. https://www.facebook.com/share/r/StUT5JgsZEgT4CTg/?mibextid=xCPwDs ஒரு முறை சொன்னார்..  ஒருவன் கூலி வேலைக்குப் போனால் அவனது உடலுழைப்பால் இழக்கும் சக்தி என்பது அவனது உடற் பயிற்சிக்குப் போதுமான சக்தியை மட்டுமே இழக்க வேண்டும் என்றார். ஆனால் இன்று பசியோடு பெருவாரியான சக்தியை இழந்து உழைக்கிறான்.. இதுவும் இப்போது மாறிப்போய் விட்டது . மதுவும் போதையும் வந்து உடலுழைப்பையே வற்றச் செய்து விட்டது.. அரிசி, காய்கறியை விட்டுவிட்டு அது போன்ற ஒரு பொருளைச் சாப்பிடுகிறோம் என்ற கருத்தை கவனத்தோடு பரிசீலிக்க வேண்டும். உதாரணமாக ஆங்காங்கே தொடங்கப்படும் தேநீர்கடைகளில் பயன்படுத்தப்படும் பால் பாலைப் போன்ற தோற்றத்தைக் கொண்டது மட்டுமே. இந்த மாதிரிக் கடைகளால் கொஞ்ச காலத்தில் புதிய புதிய நோய்களை உருவாகலாம்... இயற்கையை நேசித்தவர் நம்மாழ்வார் அவர்கள்.. மாவிலை, கொய்யா இலை,ஆவாரம் பூ போன்ற இயற்கை மூலிகையிலிருந்து தேநீர் தயாரித்துக் குடிக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தவர்.. இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவத்தை அலாதிப் பிரியத்தோடு ஆதரித்தவர்.. அ...

குடும்பனின் பார்வையில்

 ஏர் மகாராசன் அவர்களின் நினைவஞ்சலி 8.2.2024 இன்னும் எம்முடனே இருக்கிறீர்கள் அப்பா. நிலம்தான் தற்சார்பான வாழ்வையும், தன்மான மதிப்பையும் தரக்கூடியது என்பதை அப்பாவிடமிருந்தே உள்வாங்கியிருக்கிறேன்.  வாழ்வின் இறுதிவரையிலும் தன்மான உணர்வையும் தற்சார்பான வாழ்வையும் இழந்துவிடாமல் பார்த்துக்கொண்டவர். ஆனாலும், நிலத்தில் கிடந்து தவிக்கும் வாழ்க்கைக்குள் நான் வந்துவிடக் கூடாது என்று மிகமிகக் கவனமாக இருந்தார் அப்பா. படிச்சு ஆளாகுறதப் பாரு தம்பி. இந்தப் பொழப்பு ஒனக்கு வேணாந் தம்பி. எங்க காலத்துல எல்லாருமா சேந்து ஒழச்சோம். எங்க ஒழப்புக்கு நாலுகாசு மிச்சமா சேந்துச்சு. இப்பெல்லாம் சம்சாரி வேல பாக்குறதுக்கு ஆள் கெடைக்க மாட்டேங்குது. வெத, மருந்து, உரம், வேலக்கூலினு எக்குத் தப்பா எகிறிப்போச்சு. மிச்சப்படுத்துறதுக்கு ஒன்னுமில்ல. படிப்புல கோட்ட விடாம ஒழுங்கா படிச்சு ஆளாகுறதப் பாரு. எங்க காலத்துல நாங்களா ஒழச்சோம்; யாரு தயவும் இல்லாம மதிப்பு மருவாதியா வாழ்ந்தோம். இப்ப நெலம மாறிப்போச்சு. வெள்ளாமத் தொழிலப் பாக்கனும்னா மத்தவங்கள எதிர்பாக்க வேண்டி இருக்கு. சம்சாரிக மேல இருக்குற மதிப்பும் மருவாதியும் கொறஞ...

குடும்பனின் பார்வையில்

 கல்வியிற் சிறந்த தமிழ்நாடு என்ற பாரதியின் வாக்கு - ??? தமிழ்நாட்டுக் கல்வித் துறையைக் காப்பாற்ற வேண்டும் என்ற தவிப்பில் எழுதிய இந்த பதிவிற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் ஆசிரியை  உமா மகேஸ்வரி.👇 "எங்கே_பயணிக்கிறோம்_கல்விப்பாதையில்...." எனது மகன் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பயின்று வருகிறார் (M.Sc Geology). சென்னைப் பல்கலைக் கழக வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது குறித்தும் பேராசிரியர்கள் போராட்டம் குறித்தும் நேற்று முன்தினம் என்னிடம் மிக வருந்தி பேசியதுடன், அம்மா, ,(GL)ஒப்பந்தப் பேராசிரியர்கள் தான் பெரும்பாலும் இருக்கின்றனர் என்றும் இந்தச் சூழலில் இவர்களுக்கு சம்பளமே இல்லை என்றால் எப்படி பணியில் நீடிப்பார்கள் என்றும் நீண்ட நேரம் பேசியதுடன் பல்கலைக் கழகத்தில் வகுப்புகள் பாடம் நடத்துவது பற்றி என விரிவாகப் பேசி மிகவும் வருந்தினார். இதுவரை படிப்பு பற்றியோ பாடம் குறித்தோ கவலைப்படுபவரே அல்ல. குரோம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் போது கூட, கணக்கில் சந்தேகம் கேட்டுப் படிக்கையில், தன் வகுப்பு மாணவர்கள் வீட்டில் சொல்லிக் கொடுக்க யாருமில்லை, இந்த ஆசிரியர்கள் ப...

குடும்பனின் பார்வையில்

 ✒️அத்திக்குளவியின் மகத்துவத்தை அறியத் தந்த ஐயாவுக்கு நன்றி... https://www.facebook.com/share/v/hPPaZMFmoFFQuSFZ/?mibextid=xfxF2i காகங்கள் காலையில் தன் கூட்டிலிருந்து புறப்பட்டதும் தெற்கு நோக்கித்தான் பறக்கின்றன என்ற செய்தியை நம்மில் பலர் அறிந்திருக்கவில்லை.. இவை போன்ற இயற்கையான நுட்பங்கள் நிறைந்த செய்திகள் நம் பிள்ளைகளுக்கு அறியத் தர வேண்டும். பருவ நிலை மாற்றங்களால் பூச்சிகள், பறவைகள் மட்டுமல்ல மனித குலமும் குழம்பிப் போய் இருக்கின்றன எனச் சொல்லி தன் உரையை நிறைவு செய்துள்ளதை நாம் மிக உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.. முன்பெல்லாம் மூன்றாம் பாலினத்தவர்கள் இவ்வளவு எண்ணிக்கையில் தென்பட்டதில்லை.. மலட்டுத்தன்மைகள் அதிகம் இல்லை... இளம் வயதில் மனமொத்த விவாகரத்துகள் இவ்வளவு இல்லை.. எல்லாவற்றிற்கும் பருவநிலை மாற்றம் மட்டுமே காரணமல்ல.. போதைப் பழக்கங்களும், கூடாத சேர்மானங்களும் தான் பிரதானக் காரணங்களாக முன் நிற்கின்றன.. சிட்டுக் குருவிகள், அக்காக் குருவிகள், செம்பூகங்கள், பச்சைக்கிளிகள், தூக்கணாங்குருவிகள் எனப் பல பறவைகள் இப்போது எண்ணிக்கையில் குறைந்துவிட்டன.. வீரிய ஒட்டுரகத் தானியங்களும், கலப்ப...

குடும்பனின் பார்வையில்

 தேர்தல் அறிக்கையில் பட்டியல் வெளியேற்றம் குறித்து பாரதிய ஜனதா கட்சி வெளியிடுமா ?  என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்,நமது மக்கள் அரசியலில் விழிப்புணர்வு பெற வேண்டியுள்ளதை இக் கேள்வி உணர்த்துகிறது.     நமது வரலாற்று விழுமங்களை,மெய்கீர்த்திகளாக 13 வட நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு பதிவு செய்ததும்,பெயர் மாற்ற தீர்மாணம் நிறைவேற்றப் பட்டதும் தேர்தல் அறிக்கையாக வெளியிடாமலேயே நடந்தவை தான் இனமான சொந்தங்களே ! "மாண்பு மிகு" பிரதமர் மோடி நம்மவர்களை உச்சி முகர்ந்து போற்றி கடமையாற்றினார் என்பதை நினைவில் நாம் கொள்ள வேண்டும் இனமான சொந்தங்களே !       தேசிய அரசியலில் உள்ள மிகப் பெரிய கட்சி பாரதீய ஜனதா கட்சியாகும்.இக்கட்சியின் தேர்தல் அறிக்கை என்பது தேசியம் தழுவியதாக தேசத்தின் ஒட்டு மொத்த முன்னேற்றத்திற்கானதாகவே இருக்கும் மக்களே !    நரன்களின் இந்திரர் தேவேந்திரர்களின் பட்டியல் வெளியேற்றத்தை செய்வார் என்று நம்புவது மட்டுமே நமது கடமையாகும்.       குறிப்பிட்ட மாநிலத்தில் வாழும் குறிப்பிட்ட சாதிய எதிர் பார்ப்பை தேசீய தேர்தல் அறிக்கையாக,த...

குடும்பனின் பார்வையில்

Image
 எல்லீசு - கால்டுவெல் ஒப்பாய்வு கால்டுவெல் பற்றி கவர்னர் சொன்ன வார்த்தை சரியானது அவன் எந்த கல்வி கற்றான் என்பதை விட தமிழையே அவன் சரியாக படிக்கவில்லை என்பது நிஜம் அவன் தமிழை முழுமையாக கற்கவில்லை, தமிழ் உச்சரிப்பை கூட அவனுக்கு சொல்ல தெரியவில்லை. இது நாம் சொல்வது அல்ல அவன் எழுதிய நூலை படித்தாலே புரியும் "திருநெல்வேலி வரலாறு" என கால்டுவெல் எழுதிய புத்தகத்தை வாசியுங்கள், அவன் எப்படிபட்ட உளவாளி வேலை பார்த்திருக்கின்றான் என்பது தெரியும் கால்டுவெல்லுக்கு திருநெல்வேலி வரலாறே 1500ம் ஆண்டில்தான் தொடங்குகின்றது அதற்கு முன் திருநெல்வேலி எனும் ஒரு ஊர் இருந்தததாகவும் தாமிரபரணி என ஒரு நதி ஓடியதாகவும் அவர் சொல்லவே இல்லை அன்னாரின் "திராவிட" ஆராய்ச்சியின் முடிவு இப்படி செல்கின்றது நெல்லையப்பர் கோவிலில் சிவன் நெல்லுக்கு வேலியிட்டது கட்டுகதையாம், அரிசி என்றால் உமியோடு சேர்ந்தது என வராதாம், மூங்கிலில் இருந்து வருவதுதான் அரிசியாம், தாமிரபரணி கரையில் நெல் விளையாமல் மூங்கில் அரிசியில்தான் பசியாரினார்களாம் வ்ற்றாத நதி தாமிரபரணி ஓடும் மண்ணில், ஆதிச்சநல்லூர் என பெரும் நாகரீகம் உருவாகிய கரையில்...

குடும்பனின் பார்வையில்

 ✒️மனிதர்களைத் தவிர வேறு எந்த உயிரினமும் தற்கொலை செய்து கொள்வதில்லை. மானுடப் பெருக்கத்தால் எந்தப் பிற்போக்கும் நிகழப்போவதில்லை. ஜனநாயகத்தில் எண்ணிக்கைப் பலம் தான் முக்கியம்.. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் வெற்றிக் கணக்குக் குறித்து இலங்கை வானொலியில் ஒரு நேர்காணலில் கூறப்பட்ட கருத்தை இங்கே பகிர வேண்டும்.. ஒரு தொகுதியில் பத்து வாக்காளர்கள் உள்ளனர். மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இருவர் தலா மூன்று வாக்குகளையும் ஒருவர் நான்கு வாக்குகளையும் பெற்றார். இப்போது அதிக மக்களால் ஆதரிக்கப்பட்டவர் நான்கு வாக்குகளைப் பெற்றவர் என்ற அடிப்படையில் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் ஆறு வாக்காளர்கள் அவரை ஏற்கவில்லை என்பதை நாம் யோசிக்க மறுக்கிறோம் என்ற கருத்தை முன்வைத்தார். இந்தக் கேள்வியை நாம் இன்றும் யோசித்த பாடில்லை.. அந்த அடிப்படையில் திரு.ராம சீனிவாசன் அவர்களின் பிராமணர்கள் தங்கள் சமூகத்தைப் பெருக்க வேண்டும் என்ற கருத்தியலை ஏற்றாக வேண்டும் அல்லது பரிசீலிக்கத் தான் வேண்டும். பிராமணப்பெண்கள் குடும்பக் கட்டுப்பாட்டைப் பின் பற்றாமல் அதிகமாக குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்ற ஆலோசனை நமக்கும்...

குடும்பனின் பார்வையில்

  https://www.facebook.com/share/v/41ffD5cLbnwj4oKm/?mibextid=w8EBqM ஒரு மொழியின் எழுத்துகளை இன்னொரு மொழியில் எழுதுவதை Transliteration என்பர். Appa inge / inke vaa .... Konjum Tamizh.. இப்படியான முறையை ஆங்கிலேயர்கள் தமிழர்களை அடக்கி ஆளப் பயன்படுத்திய செய்தியைப் பற்றி நெல்லைப் புத்தகத் திருவிழாவில் திரு நாறும்பூநாதன் அவர்கள் குறிப்பிட்ட "கூலித் தமிழ்" என்ற நூல் மூலம் அறியமுடிகிறது.. அந்த உரையின் ஊடாக வரும் 'ஜான் டி பிரிட்டோ' என்பவர் தான் 'புனித அருளானந்தர்'. இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் ஓரியூரில் கொலை செய்து உடலை கழுமரத்தில் தொங்கவிட்டனர்.. இன்று 03.03.2024 புனித அருளானந்தர் தேவாலயம் "பசிலிகா " என அறிவிக்கப்படவுள்ளது... டவுசர் சர்ச் பற்றி பேரா. ஆ.சிவசுப்ரமணியம் தமது நூலில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.. தென் தமிழகத்தில் கிறித்தவம் பரவிய விதம் அல்லது பரப்பிய விதம் பல சுவாரஸ்யங்களைக் கொண்டது.. கல்வியை, மருத்துவத்தைத் தந்த அந்த மத நிறுவனம் மக்களை வதைத்த வரலாறுகளையும் நாம் பேசத் தான் வேண்டும்.. கிறிஸ்தவத்தில் சாதிகள் இன்னமும் இருக்கிறது. அதன் நவீன வடிவ...