குடும்பனின் பார்வையில்
ஊர் குடும்பன்
- தக்கார். மா.சோ. விக்டர் அவர்கள்
நூல்: பண்டைய தமிழரின் நில மேலாண்மை
மருத நிலம்யாவும் மள்ளர் குடியின் உருவாக்கம்
ஊர்க்குடும்பன் தலைமையில் இயங்கிய வேளாண்மை, விரிவுபடத் தொடங்கியதும்,
மக்கள் தொகை பெருக்கமும், பல ஊர்களைத் தோற்றுவித்தன. புதுப்புது ஊர்களின்
தோற்றத்தால், பொதுமைப்படுத்தப்பட்ட வேளாண்மை, தனியுடமைத் தொழிலாக மாறியது. ஊர்க்குடும்பர்களில் பலர், தனியுடமைச் செல்வர்களாயினர். காலப் போக்கில்
அனைத்து ஊர்களிலும், தனியுடமையாக நிலங்கள் பிரிக்கப்பட்டன.
உழைப்பால் பெற்ற பலனில், தேவை போக, வணிகர்களிடம் விற்றனர். அவ்வாறான விற்பனை முறையில், பெரும் அறுவடை செய்தோர், தாங்களே
வணிகர்களாக மாறினர். குறிப்பிட்ட பகுதிகளில் வாழ்ந்திருந்த மக்களில், விரிந்த நிலப்பரப்பைக் கொண்டிருந்தவர்கள், கிழார்கள் என அழைக்கப்பட்டனர். கிழான்
என்ற நிலை, குடும்பர்களினின்றும் உயர்வானதாக கருதப்பட்டது. அச்சூழலில், உழுதுண்ணும் குடும்பர்கள், உழுவித் துண்ணும் கிழார்கள் என, வேளாண் சமூகம்
பிரிந்தது. பெரும் வணிகர்களாகக் கருதப்பட்டவர்கள், கிழார்களாகவே இருந்தனர். இருப்பினும் இவ்விரு பிரிவினரும் வேளாண்மைச் சமூகத்தினர் என்றே அழைக்கப்பட்டனர், குடும்பர்கள் என்ற குறுநில உரிமையாளர்கள், கருங்கை வினைஞர் என்றும், களமர் என்றும் சொல்லப்பட்டனர். வெய்யிலில் நின்று வேளாண் தொழில் செய்ததால் உடல் கறுத்துப் போனவர்களே, கருங்கை வினைஞர் என்று சொல்லப்பட்டனர். இவர்களைப் பள்ளர்கள் என்று, உ.வே. சாமிநாதையர், தனது சிலப்பதிகார விரிவுரையில் கூறுகிறார்.
வேளாண் குடியிலிருந்து வணிகர் என்ற குலம் நாளடைவில் தனியாகப் பிரிந்தது. பிற்காலத்தில், கடல் கடந்த நாடுகளிலும் வணிகம் மேற்கொள்ளப்பட்டது. உள்நாட்டு வணிகர், வெளிநாட்டு வணிகர் என இரு பிரிவுகள் தோன்றினர். உள்நாட் வணிகர்களைப் பொதுவாகச் சாத்தன் என்றும், உணவுப் பொருட் களை விற்றவன் கூல வாணிகன் எனப்பட்டான். வெளிநாட்டு வணிகன், நாய்கன் என பட்டான். நாவி என்ற சொல்லின் (மரக்கலம்) விரிவு, நாய்கன் என்பதாகும். கண்ணகியின் தந்தை மாசாத்தன் என்றும், கோவலனின் தந்தை நாய்கன் என்றும் அழைக்கப்பட்டனர்
ஊர்கள் பெருக்கம் அடைந்தபோது, குடும்பன் என்ற தலைவன், ஊர்த்தலைவனாக மாறினான். ஊரின் ஆளுமைப் பொறுப்பை ஏற்றான். ஊருக்கு ஊர் குடும்பர்கள் பெருகினர். அவர்கள் வேளாண்மையை விடுத்து ஊராள்வோராக மாறினர். ஆளுகின்ற பிரிவு ஒன்று வேளாண்மையினின்றும் பிரிந்தது. ஆள்வோரின் உதவிக்கெண காவலர்கள், இரவு நேரக் காவலர்கள் என ஒரு பிரிவு இயங்கியது. வேளாண் கருவிகளை வடித்துக் கொடுக்க கைவினைஞர் பெருகினர். கம்மாளர் அவ்வினைஞர்கள்,
ஊர் மக்களின் நோய்களை தீர்க்க சித்தர்கள் வழியில் மருத்துவர்கள் தோன்றினர். மக்கள் பெருக்கம் விரிவடைய சமய நம்பிக்கைகளும் வளர்ந்தன. பண்டாரம் பூசாரி போன்ற சமய சடங்குகள் செய்வோர் கிளைத்தனர். ஊராளும் குடும்பனுக்கு அறிவுரை கூற கல்வி கேள்விகளில் சிறந்தோர் உதவி புரிந்தனர். குடும்பன், கிழான், வேளிர், மன்னன் என்ற படிநிலைகளில் வேளாண் மக்களில் சிலர் ஆளும் அதிகாரத்தை பெற்றனர். இவர்கள் அனைவரும் வேளாண் குடியினரே என்பதை மறந்து விடக்கூடாது. வேளாண் தொழிலை விடுத்து ஆளும் துறையில் இவர்கள் பட்டறிவை பெற்றிருந்ததால் பிற்காலத்தில் குடும்பன் முறையில் இருந்து மன்னன் வரை மரபு வழியில் அமர்வதற்கான சூழ்நிலை உருவாயிற்று. ஊர் குடும்பனே மன்னர் ஆட்சியின் தொடக்கமும், அடிப்படையாக இருந்தது. சங்க இலக்கியங்கள் தரும் செய்திகளின்படி குடும்பன், கிழான், வேளிர் போன்றோரும் அவ்வப்போது மன்னர் பொறுப்பில் இருந்துள்ளனர்.
மருத நிலத்துக் குடிகளிடம் பதினெட்டுக் கைத்தொழில்கள் அறியப்பட்டிருந்ததாக, சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இக் கைத் தொழில்கள், வேளாண்மையை
அடிப்படையாகக் கொண்டு உருவானவைகளே. மருத நிலத்தில் தோன்றிய இக்கைத்தொழில்கள் படிப்படியாக மற்ற நிலங்களுக்கும் பரவின. காலப்போக்கில், நான்கு
நிலத்து மக்களும் மருத நிலத்தில் வாழத் தலைப்பட்டனர். நாகரிக வளர்ச்சியில்,
மருதநிலத்து மதுரை போன்ற நகரங்களும், கொற்கை போன்ற துறைமுகங்களும்
பெருநகரங்களாக வளர்ந்து மக்கள் தொகை அதிகமுள்ள நகரங்களாக மாறின.
நாகரிக முன்னேற்றங்களின் அடிப்படையில், பதினெட்டுக் கைத்தொழில்களும், மேலும் பலவாகப் பெருகின. ஒவ்வொரு தொழிலையும் செய்தவர்களின் மரபுகள் தனிக்குலமாகக் கருதப்பட்டன. ஒரு கைத்தொழில் மேலும் பல தொழில்களாகப் பிரிந்தபோது,
ஒவ்வொரு தொழிலும் ஒரு மரபாக மாறியது.
கிழான்,வேளாண் குடி தலைவன் கிழார் என்று அர் விகுதி பெற்றது
அரிசில் கிழார், ஆலந்தூர் கிழார், ஆவூர் கிழார், இடைக் குன்றூர் கிழார், காரிக் கிழார், குரும் கோழியூர் கிழார், குன்றூர் கிழார், கூடலூர்க் கிழார், கோவூர் கிழார், துறையூர் ஓடைக் கிழார்,மாங்குடிக்கிழார், வடமோதங் க கிழார் (சேக்கிழார் ) ஐயூர் மூங்கிழார் இவர்கள் அனைவரும் வேளாண் குடி மரபினரே.
- தக்கார்.மா.சோ. விக்டர் அவர்கள்
நூல்: பண்டைய தமிழரின் நில மேலாண்மை
🟥🟩 மள்ளர் எழுச்சி பேரவை - தஞ்சை
Comments
Post a Comment