குடும்பனின் பார்வையில்
தேர்தல் அறிக்கையில் பட்டியல் வெளியேற்றம் குறித்து பாரதிய ஜனதா கட்சி வெளியிடுமா ?
என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்,நமது மக்கள் அரசியலில் விழிப்புணர்வு பெற வேண்டியுள்ளதை இக் கேள்வி உணர்த்துகிறது.
நமது வரலாற்று விழுமங்களை,மெய்கீர்த்திகளாக 13 வட நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு பதிவு செய்ததும்,பெயர் மாற்ற தீர்மாணம் நிறைவேற்றப் பட்டதும் தேர்தல் அறிக்கையாக வெளியிடாமலேயே நடந்தவை தான் இனமான சொந்தங்களே ! "மாண்பு மிகு" பிரதமர் மோடி நம்மவர்களை உச்சி முகர்ந்து போற்றி கடமையாற்றினார் என்பதை நினைவில் நாம் கொள்ள வேண்டும் இனமான சொந்தங்களே !
தேசிய அரசியலில் உள்ள மிகப் பெரிய கட்சி பாரதீய ஜனதா கட்சியாகும்.இக்கட்சியின் தேர்தல் அறிக்கை என்பது தேசியம் தழுவியதாக தேசத்தின் ஒட்டு மொத்த முன்னேற்றத்திற்கானதாகவே இருக்கும் மக்களே !
நரன்களின் இந்திரர் தேவேந்திரர்களின் பட்டியல் வெளியேற்றத்தை செய்வார் என்று நம்புவது மட்டுமே நமது கடமையாகும்.
குறிப்பிட்ட மாநிலத்தில் வாழும் குறிப்பிட்ட சாதிய எதிர் பார்ப்பை தேசீய தேர்தல் அறிக்கையாக,தேசீய பார்வையாக பார்க்க இயலாது மக்களே !
இந்தியாவில் பட்டியலில் இருந்து வெளியேறிய அனைத்து சாதிகளையும் தேர்தல் அறிக்கையாக தேசீய கட்சிகள் வெளியிடாமல் அம்மக்களுக்கான எதிர்பார்ப்பை பாரதீய ஜனதா கட்சி நிறை வேற்றி உள்ளதை "அமரேந்திரர்"திரு. ப.ச.ராஜேந்திரர் முயற்சியில், திருச்சியில் நடந்த கூட்டத்தில் அடியேன் சுட்டிக் காட்டி பேசியுள்ளேன்.
நமது கடமை நன்றி மறக்காமல் தாமரை சின்னத்திற்கு வாக்களிப்பது மட்டுமேயாகும்.
கடமையை செய் பலன் தானாய் கிடைக்கும் !
545 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில், சாதிய கட்சி ஒரு உறுப்பினராக இருந்து எதையும் சாதிக்க முடியாது என்பதை நமது மக்கள் உணரவேண்டும்.
ஒற்றை உறுப்பனர் வலியுறுத்தும் எந்த கோரிக்கைக்கும் பேச அனுமதியோ, ஆதரவோ பாராளுமன்றத்தில் பெரும்பான்மையையோ உருவாக்கவோ இயலாது மக்களே !
பொது அரசியலில் நாமது இன மக்கள் கற்க வேண்டியது ஏராளமாக உள்ளது இனமான சொந்தங்களே !
நம்மை அறிந்து, மதித்து நம்மை பற்றி மக்கள் மன்றத்தில் பேசிய 140 கோடி மக்களின் தலைவர் மட்டுமல்ல உலத்தலைவர்களால் பெரிதும் மதிக்கப்படும், ரசிக்கப்படும்
பாரதத்தின் "மாண்புமிகு" பிரதமர் மோடி அவர்கள் மட்டுமே!
70 ஆண்டுகளுக்கும் மேலாக இலவசமாக நமது மக்களிடத்தில் ஓட்டுக்களைப் பெற்ற, தி மு க,அ திமுக,கம்யூனிஸ்கள்,காங்கிரஸ், போன்ற கட்சிகள் இது நாள் வரை நமது இனத்திற்கு எதையும் செய்யவில்லை என்பதை நமது குடி மக்கள் அனைவரும் உணர்ந்து தாமரை சின்னத்தில் வாக்களிப்பீர்.
இவண்,
"சுயம்பு" குருமகா சன்னிதானம்
தேவேந்திர மடாதிபதி
ராஜதேவேந்திர சுவாமிகள்.
Comments
Post a Comment