குடும்பனின் பார்வையில்
✒️ தாயுள்ளம் கொண்டோர் நடிப்பதில்லை..
மதுரைப் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர் பேரா. இராம.சீனிவாசன் தமது தேர்தல் பரப்புரைகளுக்கிடையே தனியார் வலையொளி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தேவேந்திர குல வேளாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பட்டியல் மாற்றக் கோரிக்கையை தமது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இடம்பெறச் செய்வேன் என உறுதிபடப் பதிவிட்டமைக்கு யாழி வாசகர் தளம் நன்றி தெரிவித்து மகிழ்கிறது..
https://youtu.be/G7o-_Fufbt8?si=bVhU_6OsdMsiFCJD
யாரும் பேசத் துணியாத வாக்குறுதியைத் தந்தமைக்கு நாம் என்ன கைமாறு செய்யப் போகிறோம்..
பட்டியல் வெளியேற்றம் என்ற மகத்தான கோரிக்கையை எப்படி நிறைவேற்றுவது அதன் வழிமுறைகள் என்ன அதனால் ஏற்படும் இடர்பாடுகள் என்னென்ன அவற்றை எப்படி எதிர்கொள்வது என்பதையெல்லாம் மிகத்தெளிவாக குறிப்பிட்டுள்ளார்..
அரசாணை நிறைவேற்றியதையே இன்னும் நம்மில் பலர் அறியவில்லை.
சிலர் இனம் தெரியாப் பகையாளிகவே தொடர்கிறார்கள்.
பலர் அதனை விமர்சித்துக் குறுக்குச் சால் ஓட்டுகின்றனர்..
பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை ஆதரிக்கிறவர்கள் ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அது பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவோடு நிறைவேற்றப்பட வேண்டும்.
காங்கிரஸ் கட்சியும் திமுகவின் ஆதரவுக் கட்சிகளும் அது பற்றி இதுவரை வாய்திறக்கவே இல்லை..
மோடி தான் நம்பிக்கையை விதைத்தவர்..
நாம் அதையும் ஏற்றுக் கொள்ளவில்லை.
அனைவரையும் விமர்சிக்கிறோம்..
அரசியலில் நாகரிமாக நடந்து கொள்ள வேண்டும்..
அரசியல் ஆதாயத்தைப் பெறுகிறவர்கள் பல நேரங்களில் கொள்கைகளில் சமரசம் செய்து கொள்கிறார்கள்..
தம்மை வலுப்படுத்திக் கொள்ள முனைகிறார்கள்..
புதிய தமிழகமும், தமமுகவும் பாஜகவோடு நெருக்கம் காட்டி வந்தது ஆனால் தமமுக மட்டுமே பாஜக கூட்டணியில் இடம் பிடித்தது.
ஆனால் பாஜகவின் அணுகுமுறைகளில் பாமக வோடு நடந்து கொண்ட விதம் வேறு விதமானது.
காரண காரியங்களை நாம் புரிந்து கொள்ளத் தவறுகிறோம்.
சட்டமன்றத் தேர்தலுக்கும், பாராளுமன்றத் தேர்தலுக்கும் வேறுபாடுகள் அதிகம்.
திமுக கூட்டணியில் முரண்பட்ட கருத்தியல்கள் இருந்தாலும் சமரசம் சாத்தியமாகிறது..
மதிமுக ஒரு தொகுதிக்கு ஒத்துக் கொண்டிருக்கிறது.
கம்யூனிஸ்ட்டுகளும், விசிகவும் வழக்கமாக தலா இரு தொகுதிகளுக்கு ஒத்துக் கொண்டன..
39 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கூட்டணி கடந்த ஐந்தாண்டுகளில் சாதித்தவை அதிகம் இல்லை..
தேவேந்திரர்கள் இன்னும் தம்மை அரசியலுக்குப் பக்குவப்படுத்திக் கொள்ளவில்லை என்பதே பலரது அவதானிப்பு..
தென்காசியில் இரு கட்சித் தலைவர்கள் போட்டியிடலாமா...⁉️
யார் தோற்றாலும் வெற்றி பெற்றவர் மகிழ்ச்சியடையப் போவதில்லை..
காரணம்
ஒரு சமூகம் துண்டாடப்படும்..
ஒட்டுமொத்தத் தமிழ்நாடே எதிர்நோக்குவது இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பிடிக்கப் போகிற கட்சி எது என்ற வினோத எதிர்பார்ப்புத் தான்
மொழியை மையமாகக் கொண்டு தேர்தல் நடந்தது.
பிறகு ஊழலை மையப்படுத்தி தேர்தல் பரப்புகள் இருந்தன.
பிறகு இலங்கைத் தமிழர்களை மையப்படுத்தி தேர்தல் களம் காணப்பட்டது.
மக்கள் நலக் கூட்டணிகள் அமைந்தன..
மத அரசியல் பேசப்பட்டது ...
பிரிந்தவர்கள் இணைந்தார்கள்
சிறுபான்மையினர் என்று ஒரு கருத்தியல் மையங்கொண்டது.
கொள்கைகள்,வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் பறந்தன..
பல கோடிகள் தேர்தல் பேரங்களாகக் கைமாறியதை பெருமையோடு ஒத்துக் கொண்டனர்..
தனித் தொகுதிகளில் தென்காசி மட்டும் அதிகம் கவனம் பெறுகிறது..
சமூகத்திற்கு யாருடைய வெற்றியால் பயன் என்பதைப் புரிந்து கொண்டு வாக்களித்துக் கடந்து போவோம் உறவுகளே...
தனித் தொகுதிகளில்
மற்ற சமூக உறவுகளின் வாக்குகள் தான் வெற்றியைத் தீரமானிக்கப் போகின்றன என்பதைப் புரிந்து கொண்டு அரசியல் செய்வோம்...
நிதானமாய்த் தேர்தல் பணியாற்றுவோம்..
ஏனெனில் அடுத்தடுத்து தேர்தல்கள் வரப்போகின்றன..
கூட்டணிகள் மாறலாம் ...
அதிகாரங்கள், அரசாங்கங்கள் மாறலாம்..
உறவுகள் எப்போதும்
மேம்படட்டும்..
தேர்தலை ஒரு முதிர்ச்சியோடு அணுகுவோம்..
ஏனெனில் அரசியலில் நிலையான நண்பனும் இல்லை.
நிலையான எதிரியுமில்லை..
வாக்கு வங்கி அரசியலில்
பொதுச் சமூகத்தின் ஆதரவைப் பெறப் பழகுவோம்.
நமது கோரிக்கைக்கு ஆதரவு தருவோருக்கு தவறாமல் நன்றி செலுத்துவோம்..
நன்றி🙏
©️✒️மடைக் குடும்பர்
27.03.2024.
Comments
Post a Comment