குடும்பனின் பார்வையில்
https://www.facebook.com/share/v/41ffD5cLbnwj4oKm/?mibextid=w8EBqM
ஒரு மொழியின் எழுத்துகளை இன்னொரு மொழியில் எழுதுவதை Transliteration என்பர்.
Appa inge / inke vaa ....
Konjum Tamizh..
இப்படியான முறையை ஆங்கிலேயர்கள் தமிழர்களை அடக்கி ஆளப் பயன்படுத்திய செய்தியைப் பற்றி நெல்லைப் புத்தகத் திருவிழாவில் திரு நாறும்பூநாதன் அவர்கள் குறிப்பிட்ட "கூலித் தமிழ்" என்ற நூல் மூலம் அறியமுடிகிறது..
அந்த உரையின் ஊடாக வரும் 'ஜான் டி பிரிட்டோ' என்பவர் தான் 'புனித அருளானந்தர்'.
இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் ஓரியூரில் கொலை செய்து உடலை கழுமரத்தில் தொங்கவிட்டனர்..
இன்று 03.03.2024 புனித அருளானந்தர் தேவாலயம் "பசிலிகா " என அறிவிக்கப்படவுள்ளது...
டவுசர் சர்ச் பற்றி பேரா. ஆ.சிவசுப்ரமணியம் தமது நூலில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்..
தென் தமிழகத்தில் கிறித்தவம் பரவிய விதம் அல்லது பரப்பிய விதம் பல சுவாரஸ்யங்களைக் கொண்டது..
கல்வியை, மருத்துவத்தைத் தந்த அந்த மத நிறுவனம் மக்களை வதைத்த வரலாறுகளையும் நாம் பேசத் தான் வேண்டும்..
கிறிஸ்தவத்தில் சாதிகள் இன்னமும் இருக்கிறது.
அதன் நவீன வடிவம் தலித் கிறிஸ்தவம்..
மத நம்பிக்கையாளர்களை நாம் புண்படுத்தவில்லை..
16 ஆம் நூற்றாண்டு தொடங்கி இன்னமும் தமிழகக் கிறிஸ்தவத்தில் மாற்றங்கள் நடந்து கொண்டு தான் உள்ளன.
இன்றையக் காலக் கட்டத்துப் பிள்ளைகள் தாம் பின்பற்றுகிற மதம், அரசியல் குறித்து தெரிந்து கொள்வது அவசியம்.
காரணம் பல சோகங்களையும், துரோகங்களையும், பலிகடாக்களையும் தொடர்ந்து கடந்து வந்து கொண்டேதான் இருக்கிறது..
தேவனும் ,தெய்வமும் நம்மைக் காக்கும் என்ற வெறும் நம்பிக்கை மட்டுமே போதாது.
உன் வாழ்க்கையை உன் காலத்தில் வாழ்ந்து விடு..
அதற்கு முன்பு உன் சமூகம் கடந்து வந்த வரலாற்றைக் கற்றுக் கொள்...
திரும்பத் திரும்பக் கூறுகிறேன்...
ஒழுக்கமில்லாத கல்வி அறிவுள்ள பிசாசுகளை உருவாக்கும் என்ற விவேகானந்தரின் சிந்தனையை நிதமும் யோசிக்கிறேன்.
அந்நிய அடிமை முறைகளிலிருந்து தப்பித்து வித விதமான போதை வலையில் சிக்கிக் கொண்டிருக்கிறோம்.
இந்தத் தலைமுறையைப் பாதுகாக்கத் தவறிய பெருங்குற்றவாளிகள் நாம் தான்.
தொலைக்காட்சிப் பெட்டியும், குளிர்பதனப் பெட்டியும் மெல்லக் கொல்லும் விசப் பெட்டிகள் என்கிறோம்.
வீடுகளில் நல்ல கதைகள் பேசும் கலாச்சாரம் பெருக வேண்டும்..
கல்வியில் மாற்றம் தேவை. அதற்கு அரசியல் மாற்றமே அடிப்படை..
ஆனால் தேர்தல் கூட்டணிச் சேர்க்கையில் நடக்கிற கூத்துகளை கவனித்தால் மக்கள் தினமும் ஏமாற்றப்படுகிறார்கள்..
அந்த விசம் தடவிய அரசியலையும் ரசித்தபடியே வாக்களிக்கத் தயாராகிறார்கள்..
டவுசர் சர்ச்சுகளுக்கும் இன்றைய அரசியல் நிலவரங்களுக்கும் அதிக வேறுபாடுகள் ஏதுமில்லை..
நம்பகத்தன்மை எல்லாம் பெரும் கேள்விக்குறிகள் தான் ????????..
©️✒️ யாழி
02.03.2024.
Comments
Post a Comment