குடும்பனின் பார்வையில்
தேர்தல் என்பது மாட்டுவண்டி எல்கைப் பந்தயமல்ல..
கலப்புத் திருமணம் வந்ததற்கு யார் காரணம்..?
அரசியலில் தனிமனித வாழ்க்கையைப் பெரிதுபடுத்துவதில்லை..!!!
தேவேந்திரர்கள் மட்டும்தான் பண்பாட்டு அரசியலைக் கட்டமைக்க முயற்சிக்கிறோம்..
தென்காசியில் Dr.KK க்கு செல்வாக்கு அறவே இல்லை எனச் சொல்லிவிட இயலாது..
எல்லாத் தலைவர்களும் 1980 களில் தலித் கருத்தியலை ஆதரித்தவர்கள் தான்.
பிறகு சுய அடையாளம் பறிபோனதை அறிந்த பின்பு தான் பண்பாட்டு அரசியலைக் கட்டமைக்க முனைந்தோம்..
1990 களில் நான் அண்ணன் JP அவர்களையும், Dr.KK அவர்களையும் ஆதரித்தவன் தான்.
பிறகுதான் பொது அரசியலில் காணப்படும் நுட்பங்களை அறிந்து கொண்டேன்.
எதிரியைக் கூட நாகரிகமாக விமர்சனம் செய்யப் பழகுவோம்..
விசிக வுக்கு முந்தியது பூவை. ஜெகன்மூர்த்தியின் அமைப்பு..
இன்று இரண்டும் அரசியலில் நிலை கொண்டுள்ளன.
தேவேந்திரர்கள் பண்பாட்டைப் பேசுகிற போது அரசியலையும் பேசுகிறோம்.
இரண்டிலும் முரண்களை வளர்க்கிறோம்.!!!
அரசியல் களத்தில் வாக்குச் சேகரிக்கப் போகும் போது இடையூறுகளைச் சந்திக்கிறோம்..!!!!
வருத்தம் வஞ்சமாக மாறும் என்பது பழமொழி..
கடந்த தேர்தலில் ஒரு கட்சி இன்னொரு கட்சிச் சின்னத்தில் போட்டியிட்டதைப் பார்த்தோம்.
இந்த முறையும் அதே நிலை நீடித்தாலும் மதிமுக, விசிக தனிச் சின்னத்தில் போட்டியிடுகின்றன.
அரசியலில் அடுத்த கட்டத்துக்குத் தாவும் முயற்சி இது..
தேவேந்திரர்கள் வெறுப்பு அரசியலையே தொடர்ந்து செய்கிறோம்..
கடந்த இருபது முப்பது ஆண்டுகளில்
தேவேந்திரர்கள் அரசியலில் ஒன்றிணைய வில்லை.
தனித்துவமான தலைவர்கள் உருவாகவில்லை.
உருவாகும் சூழலையும் உடைத்து நொறுக்கி விடுகிறோம்..
நானறிந்த வகையில் தேவேந்திரர்கள் தான் பல உட்பிரிவுகளாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த உட்பிரிவு கருத்தியல் இறுக இறுக வேறொன்றைத் தேர்வு செய்து விடுகிறார்கள்.
எடுத்த முடிவு தவறு என்று அறிந்த பிறகு சரி செய்ய முடியாத பிழைக்கு ஆளாகி விடுகிறோம்.
குடும்பம் என்பது வேறு.!!!!
அரசியல் கட்சி என்பது வேறு என்பதைப் புரிந்து கொள்ளவில்லை..!!!
பள்ளர்களைத் தாழ்த்தப்பட்ட மக்கள் என்றும் ஆதிதிராவிடர் என்றும் பதிவு செய்வதை இன்னும் மாற்ற முடியவில்லை..
தலித் என்ற கருத்தியலிலிருந்து விடுதலையைத் தந்தது தேவேந்திரகுல வேளாளர் என்ற அடையாளம்..
ஒரு பாரளுமன்ற வேட்பாளரே தமது சமூகத்தைச் சரியாகக் குறிப்பிடத் தவறி விட்டார்.
இதெல்லாம் லேசாகக் கடந்து போகிற காரியமில்லை..
ஆனால் அரசியலில் தவிர்க்க முடியாதவை
வெற்றி பெற்று விடுகின்றன.
வெறுங் கூச்சலை விடச் சில நேரங்களில் அமைதி வென்று விடும்..
அரசியலில் பெருங் கோபங்கள் வெறும் வெத்து வேட்டுகள் தான்..
தேர்தல் நெருங்கி விட்டது.
திக்குத் தெரியாத காட்டில்
நமக்கான அரசியலைத் தேடித் திரிகிறோம்.
ஏதாவது ஒரு கருத்தியலை மையமாக வைத்து
தேவேந்திரர்கள் அரசியல் செய்யத் தயாராகப் போவது எந்நாளோ..
பட்டியல் வெளியேற்றத்தை ஆதரிக்கிறவர்கள் மத்தியில் எந்தக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என யூகித்து அந்தக் கூட்டணியை ஆதரியுங்கள்.
அல்லது அதற்காகக் குரல் கொடுக்கும் என நீங்கள் நம்பும் கட்சிக்கு வாக்களியுங்கள்..
காகித ஓடங்கள் ஒரு போதும் நம்மைக் கரைச் சேர்க்காது.
நட்டாற்றில் தென்படும் மண் குதிர்களை நம்பி உங்கள் நீச்சலைத் தீர்மானிக்காதீர்கள்.
ஆதாயத்தோடு தான் ஆளாளுக்கு ஆற்றைக் கட்டியிறைக்கிறார்கள்..
பதினைந்தாம் புலி / ஆடு புலி ஆட்டத்தில் காய்களை நகர்த்து முன் யோசியுங்கள்..
வெறும் வெறுப்பரசியலால் பகையைத்தான் வளர்க்க முடியும்..
நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படும் பட்டியல் வெளியேற்றத் தீர்மானம் சட்ட வடிவம் பெறும் வரை
அடக்கி வாசிக்கவும்
பொறுத்துப் போகவும்
கற்போம்..
அரசியலில் ஆதாயம் தான் முக்கியம்..
இது மாட்டுவண்டி எல்கைப் பந்தயமல்ல..
©️✒️ யாழி
31.03.2024.
Comments
Post a Comment