குடும்பனின் பார்வையில்
அன்பானவர்களே!,
"சமூகம் சார்ந்து,
ஓரணியாக
தேவேந்திர குலம்
என்றைக்கு நடைபயிலுமோ,
அன்றைக்குத்தான்
இந்த இனம்
தனது உண்மையான இலக்கினை
அடையமுடியும்."
சும்மாச் சும்மா
'என் தலைவன்...'
'உன் தலைவன்!'
வீரவசனம் பேசி,
இந்த இனம்
ஆகாயத்தில் சிலம்பம் வீசுவதெல்லாம்,
இனத்துரோகச் செயலேயன்றி,
வேறல்ல!.
கற்றறிந்த பலரும்கூட,
கபோதிகளை
விடக் கேவலமாக
இனத்தை வழிநடத்துவதை நினைக்கும் போது,
இவர்களெல்லாம்,
இருபத்தொன்றாம் நூற்றாண்டு மனிதர்கள் அல்லர்,
"கற்காலப்
பிறவிகள்"
என்றே எண்ணத் தோன்றுகிறது.
இப்படிப்பட்ட தொங்கு அரசியல் வழிகாட்டிகளால் தான்,
மாற்றான் நம் இனத்தை அதலபாதாளத்தை நோக்கி தள்ளுகிறான்.
இவர்களோ,
அப்பத்தை குரங்கு கையில் பறிகொடுத்து விட்டு,
"அச்சச்சோ,
போச்சே!"
என்று ஆலோலம் பாடுகிறவர்களாக
முகாரி இராகம் இசைக்கிறார்கள்.
ஏ... தேவேந்திரர்களே!,
இன்னும்கொஞ்சம் நேரம் இருக்கத்தான் செய்கிறது!,
ஓரணியில் நின்று,
தேர்தலை சந்திக்க வாருங்கள்!,
அல்லது,
நமது சந்ததி சீரழிந்து போகும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.
எங்கெல்லாம்
இன உணர்வுடைய தேவேந்திரன் போட்டியிடுகின்றானோ,
அங்கெல்லாம் அவனை வெற்றிபெறச் செய்வது,
உங்கள் உரிமை!
எங்கெல்லாம் உன் எதிரி நிற்கிறானோ, அவனை தோல்வியடையச் செய்வது உங்கள் கடமை!.
இது செவிடர் செவி சேர்
செழுமையாக அல்ல,
செம்மையானவர்களின் இதயத்தில் பாய்ச்சப் படுகின்ற இள இரத்தமாக கெம்பீரிக்கட்டும்.
-கவிஞர் ஆ அரிபுத்திரன்.
Comments
Post a Comment