குடும்பனின் பார்வையில்

சாதி மறுப்பு, சாதி ஒழிப்பு, சமூக நீதி என்பதெல்லாம் அரசியலில் "கிச்சுக் கிச்சுத் தாம்பூலம் விளையாட்டு தான்."




அதிமுக, திமுக, மதிமுக .. இவற்றின் கடந்த கால வரலாறுகளை தமிழக மக்கள் தேர்தல் நேரங்களில் எளிமையாகக் கடந்து போவதுதான் அந்தக் கட்சிகளின் பலம்..

தேவேந்திரர்கள் இந்த மாதிரியான நேரத்திற்கு ஏற்ப தம்முடைய அரசியல் தகவமைப்புகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.

வாக்கு வங்கி அரசியலில் வெறும் கொள்கையை மட்டுமே விடாப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு தொங்குவது நம்மை ஒருபோதும் கரை சேர்க்காது..

தென்காசியில் ஒரு சமூகத்தின் வாக்குகளைப் பெறுவதற்கு இருபெரும் தலைமைகள் மோதுவது பெரும் பலவீனம்.

இருபெரும் தலைமைகளும் நேரடிப் போட்டியிலிருந்து விலகி ஆதரவு தெரிவித்து விட்டுக்கொடுத்திருக்கலாம்..

2016 ஆம் ஆண்டு தி இந்து நாளிதழில் சமஸ் எழுதிய தமிழ்நாட்டு அரசியல் என்ற தலைப்பிட்ட கட்டுரையை நாம் வாசிக்க வேண்டும்.

சாதி மறுப்பு, சாதி ஒழிப்பு, சமூக நீதி என் பதெல்லாம் அரசியலில் கிச்சுக் கிச்சுத் தாம்பூலம் விளையாட்டு தான்.

எல்லா அரசியல் கட்சிகளுக்குள்ளும் சாதியப் பாகுபாடுகள் உள்ளன.

அவற்றின் அடிப்படையிலே தான்

அரசியலே நடக்கிறது.

புரிந்து கொண்டால் நல்லது..

புரியாவிட்டால் ஏதோ ஒரு விதத்தில் நாம் கையூட்டுப் பெற்றுக் கொண்டு சமூகத்தைக் குழப்புகிறோம் என்று தான் பொருள்.

©️✒️ யாழி

31.03.2024.

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்