குடும்பனின் பார்வையில்
✒️மனிதர்களைத் தவிர வேறு எந்த உயிரினமும் தற்கொலை செய்து கொள்வதில்லை.
மானுடப் பெருக்கத்தால் எந்தப் பிற்போக்கும் நிகழப்போவதில்லை.
ஜனநாயகத்தில் எண்ணிக்கைப் பலம் தான் முக்கியம்.. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு
தேர்தல் வெற்றிக் கணக்குக் குறித்து இலங்கை வானொலியில் ஒரு நேர்காணலில் கூறப்பட்ட கருத்தை இங்கே பகிர வேண்டும்..
ஒரு தொகுதியில் பத்து வாக்காளர்கள் உள்ளனர்.
மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இருவர் தலா மூன்று வாக்குகளையும் ஒருவர் நான்கு வாக்குகளையும் பெற்றார்.
இப்போது அதிக மக்களால் ஆதரிக்கப்பட்டவர் நான்கு வாக்குகளைப் பெற்றவர் என்ற அடிப்படையில் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.
ஆனால் ஆறு வாக்காளர்கள் அவரை ஏற்கவில்லை என்பதை நாம் யோசிக்க மறுக்கிறோம் என்ற கருத்தை முன்வைத்தார்.
இந்தக் கேள்வியை நாம் இன்றும் யோசித்த பாடில்லை..
அந்த அடிப்படையில் திரு.ராம சீனிவாசன் அவர்களின் பிராமணர்கள் தங்கள் சமூகத்தைப் பெருக்க வேண்டும் என்ற கருத்தியலை ஏற்றாக வேண்டும் அல்லது பரிசீலிக்கத் தான் வேண்டும்.
பிராமணப்பெண்கள் குடும்பக் கட்டுப்பாட்டைப் பின் பற்றாமல் அதிகமாக குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்ற ஆலோசனை நமக்கும் பொருந்தும்..
தமிழகத்தில் கிராமங்களில் இருந்த பிராமணக் குடியிருப்புகளான அக்ரகாரங்கள் திட்டமிட்டே அழிக்கப்பட்டு விட்டன.
பிராமணர்கள் தங்கள் இருப்பை விட்டு, இடத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
அவர்களது சொத்துகள் இன்று யார் வசமாகியுள்ளன என்பதை ஆய்வு செய்து பாருங்கள்.
அரசியல் அதிகாரத்தைத் தக்க வைத்துள்ளவர்களிடம் தான் உள்ளன..
தஞ்சை மராத்திய மன்னர்கள் ஆட்சியில்
தஞ்சையிலிருந்து இராமேஸ்வரம் வரை இருபதுக்கும் மேற்பட்ட சத்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இராமேஸ்வரத்திற்குப் பாத யாத்திரை மேற்கொள்வோர்க்கும், வழிப் போக்கர்களுக்கும் தங்கும் வசதியும் உணவும் அன்ன சத்திரங்களில் வழங்கப்பட்டன.
அவற்றை நிருவகிக்க வேலிக் கணக்கில் நிலக்கொடைகள் வழங்கப்பட்டிருந்தன..
ஒவ்வொரு சத்திரம் இருந்த இடத்திலும் பிராமணர்கள் குடியிருப்பதற்கு ஒரு அக்ரகாரம் இருந்தது..
பட்டமுடையான், பட்டவிருத்தி, சுரோதிரியம், போன்ற பெயர்களில் நிலக்கொடைகள் வழங்கப் பட்டிருந்தன.
அந்த நிலங்கள் எல்லாம் இன்று பலரிடம் கைமாறிவிட்டன.
கைமாற்றம் பெற்றது ஆதிக்கச் சாதிக்காரர்களிடம் தான்..
தஞ்சை, ஒரத்தநாடு, ராஜாமடம், சேதுபாவா சத்திரம், அம்மனி சத்திரம்,
மணமேல்குடி, மீமிசலில் ராஜகுமாராம்பாள் சத்திரம் எனப் பல சத்திரங்கள் இருந்தன..
காலப்போக்கில் சத்திரக் கட்டடங்களில் தமிழக அரசுப் பள்ளிகள் நடந்தன..
இப்போது பல இடங்களில் சத்திரங்கள் இருந்த இடமே இல்லை..
இப்படியாக ஒரு பிராமணச் சமூகம் தமது இருப்பை இழந்து விட்டன..
அதே போல பல கிராமங்களில் வாழ்ந்த இசுலாமியர்களின் இருப்பும் காணாமல் போய் விட்டாலும்
புதிய குடியிருப்புகள் தொடங்கப்பட்டு புதுப்புதுப் பள்ளிவாசல்கள் எழும்பியுள்ளன..
காரணம் இசுலாமியர்கள் பிராமணர்களைப் போல மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவில்லை.
தமது இருப்பை, மத அடையாளத்தை, உடைக்கலாச்சாரத்தை இழந்து விடவில்லை..
பல அரசியல் அமைப்புகள் இருந்தாலும் பொது அரசியலிலும் மேலோங்கியுள்ளனர்.
எத்தனை வசதிப் பெருக்கம் ஏற்பட்டாலும் தேவேந்திரர்கள் தமது கிராம அடையாளங்களை இழந்துவிடாதீர்..
மடைக் குடும்பர்கள்,
நீர்ப் பாய்ச்சிகள் இன்று அனேக இடங்களில் இல்லை..
ஊரை, கண்மாயை, ஏரியை, வெள்ளாமையைக் காத்த சமூகம் குடும்பர்கள் என்ற தேவேந்திரகுல வேளாளர்கள்..
நீங்கள் எந்த அரசியலையும் ஆதரித்து விட்டுப் போங்கள்.
ஆனால் சமூகத்தைப் பொது வெளியில் அடையாளப்படுத்திய நரேந்திர மோடியை மட்டும் விமர்சிக்காதீர்..
நன்றி மறப்பது நன்றன்று.
சொந்த நலனுக்கான அரசியலை முன்னெடுப்பவர்கள் மட்டும்தான் இப்படியான துயரமான விமர்சனத்தை முன்வைக்கிறார்கள்..
எத்தனையோ அரசியல் கட்சிகளையும், அவற்றின் கூட்டணித் தந்திரங்களையும் பார்த்து விட்டோம்.
இதுவரை தேவேந்திரர்களை முழு மனதோடு ஏற்றுக் கொள்ள எவருக்கும் மனதில்லை..
கனிம வளம், மணல் கொள்ளையை விட இன்று போதைப்பொருள் கடத்தல் தான் பிரதானம்.
இன்னும் கொஞ்சக் காலத்தில் தமிழினமே கலாச்சாரச் சீரழிவிற்கு ஆட்படும் அபாயத்தைத் தவிர்க்க இயலாது..
எதிர்க்க வேண்டிய அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் அரசியல் பேரங்களுக்குத் துணை போகின்றன.
பிராமணர்களுக்கும், அக்ரகாரங்களுக்கும் ஏற்பட்ட ஆபத்துகளும் அபாயங்களும் இன்று நமக்குத் தொடங்கி விட்டன.
அவர்கள் எதிர்க்கவில்லை.
இடம் பெயர்ந்து போனார்கள் ஆனால் நாம் எதிர்க்கிறோம்.
ஆயிரம் தொந்தரவுகள் வந்தாலும் பிராமணியம் பிராமணியம் தான்.
பெயர் மாறப் போவதில்லை..
இனித் தேவேந்திரனியமும் அப்படித்தான் வாழும்..
திராவிடம், கம்யூனிசம் மற்றும் தலித் தியக் கருத்தியல்களால் தேவேந்திரனியம் ஒருபோதும் அழியப் போவதில்லை.
கால ஓட்டத்திற்கு ஏற்ப அல்லது ஆற்றின் வெள்ளப் போக்கிற்கு ஏற்ப நீந்திக்கரை சேரக் கற்றுக் கொள்வோம் அல்லது தகவமைப்பை மாற்றிக் கொள்வோம்.
வாழ்க தேவேந்திரனியம்.
©️✒️ யாழி.
04.03.2024.
Comments
Post a Comment