குடும்பனின் பார்வையில்
✒️நம்மாழ்வார் பேச்சைக் கேட்டுப் பின்பற்றுகிறவர்களாக மாறவேண்டும்..
https://www.facebook.com/share/r/StUT5JgsZEgT4CTg/?mibextid=xCPwDs
ஒரு முறை சொன்னார்..
ஒருவன் கூலி வேலைக்குப் போனால் அவனது உடலுழைப்பால் இழக்கும் சக்தி என்பது அவனது உடற் பயிற்சிக்குப் போதுமான சக்தியை மட்டுமே இழக்க வேண்டும் என்றார்.
ஆனால் இன்று பசியோடு பெருவாரியான சக்தியை இழந்து உழைக்கிறான்..
இதுவும் இப்போது மாறிப்போய் விட்டது .
மதுவும் போதையும் வந்து உடலுழைப்பையே வற்றச் செய்து விட்டது..
அரிசி, காய்கறியை விட்டுவிட்டு அது போன்ற ஒரு பொருளைச் சாப்பிடுகிறோம் என்ற கருத்தை கவனத்தோடு பரிசீலிக்க வேண்டும்.
உதாரணமாக ஆங்காங்கே தொடங்கப்படும் தேநீர்கடைகளில் பயன்படுத்தப்படும் பால் பாலைப் போன்ற தோற்றத்தைக் கொண்டது மட்டுமே.
இந்த மாதிரிக் கடைகளால் கொஞ்ச காலத்தில் புதிய புதிய நோய்களை உருவாகலாம்...
இயற்கையை நேசித்தவர் நம்மாழ்வார் அவர்கள்..
மாவிலை, கொய்யா இலை,ஆவாரம் பூ போன்ற இயற்கை மூலிகையிலிருந்து தேநீர் தயாரித்துக் குடிக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தவர்..
இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவத்தை அலாதிப் பிரியத்தோடு ஆதரித்தவர்..
அவரது கருத்துக்களை இளைய தலைமுறைகள் கவனிக்கத் தவறியதின் விளைவுகள் தான் மதுவும் போதையும் நம்மை ஆட்டிப் படைக்கின்றன.
தேங்காய்த் துருவலிலும், கேழ்வரகு மாவிலும் போதைப்பொருட்கள் கலந்து கடத்தப்பட்டதாக அறிகிறோம்..
அவற்றிற்கு நிறமும் இல்லை, சுவையும் இல்லை ஆனால் அதிகப்படியாகப் போதை நீண்டு நிற்கிறது..
எஸ்.டி. கொரியர் சர்வீஸ்கள் போன்ற நிறுவனங்கள் தபால்களை மட்டும் அனுப்பவில்லை என்றும் அவை சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுகின்றன என்ற செய்திகள் எல்லாம் நம்மை அதிர்ச்சி அடைய வைக்கின்றன..
சமீப காலங்களில் ஒரு சிலர் மட்டும் பெருஞ் செல்வந்தர்களாக மாறுவதெல்லாம் இப்படித்தான்.
இதற்கு அரசியல் சாயம் துணை செய்கின்றன..
வாக்களித்தவர்கள் தொடர்ந்து ஏழைகளாகவே இருப்பதும் பதவிக்குப் போனவர்கள் சுக போகங்களோடு வாழ்வதும் இப்படித்தான்..
நம்மாழ்வார் போன்ற சித்தாந்தவாதிகள் அரசியலுக்கு வர வேண்டும்.
ஒரு மனிதன் ஒரு நாளுக்கு உழைக்கும் சக்தி அவனது உடற்பயிற்சிக்கு இணையானதாக இருக்க வேண்டும் என்ற கருத்தை முன்மொழிந்தவர் நம்மாழ்வார்..
அதை விடுத்து அது போன்ற ஒன்றைச் செய்து உண்ணுகிறோம்.
உப்பு எப்போது அரைத்து பாக்கெட்டுகளில் விற்பனைக்கு வந்ததோ அன்றே நாம் விழித்திருக்க வேண்டும்.
குடிநீர் பாக்கெட்டுகளில், பாட்டில்களில் உங்கள் இல்லம் தேடி வந்ததோ அன்றே விழித்திருக்க வேண்டும்..
கள்ளுக்கடைகளை மூடிவிட்டு கலர் சாராயத்தை உருவாக்கினோம்..
இன்று விதவிதமான சிந்தடிக் போதைப் பொருட்கள் நாடு முழுக்கப் பரவி விட்டன என்பதோடு அதன் ஆணிவேர் தமிழகம் என்று அமெரிக்கா போன்ற மேலை நாடுகள் எச்சரிப்பதெல்லாம் லேசான காரியங்களல்ல..
வாழ்க்கையை வாழாமல் அது போன்ற ஒரு பாவனையைத் தான் செய்து கொண்டிருக்கிறோம்.
இதற்கெல்லாம் காரணம் ஒரு சிலரது அதிகார ஆசை என்பது மட்டும் தான்..
நம்மாழ்வார் ஒரு சாதாரண மனிதரல்ல.
மானுடம் நோயற்று வாழ வழிகாட்டியவர்.
©️✒️ யாழி .
14.03.2024.
Comments
Post a Comment