குடும்பனின் பார்வையில்
✒️அத்திக்குளவியின் மகத்துவத்தை அறியத் தந்த ஐயாவுக்கு நன்றி...
https://www.facebook.com/share/v/hPPaZMFmoFFQuSFZ/?mibextid=xfxF2i
காகங்கள் காலையில் தன் கூட்டிலிருந்து புறப்பட்டதும் தெற்கு நோக்கித்தான் பறக்கின்றன என்ற செய்தியை நம்மில் பலர் அறிந்திருக்கவில்லை..
இவை போன்ற இயற்கையான நுட்பங்கள் நிறைந்த செய்திகள் நம் பிள்ளைகளுக்கு அறியத் தர வேண்டும்.
பருவ நிலை மாற்றங்களால் பூச்சிகள், பறவைகள் மட்டுமல்ல மனித குலமும் குழம்பிப் போய் இருக்கின்றன எனச் சொல்லி தன் உரையை நிறைவு செய்துள்ளதை நாம் மிக உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்..
முன்பெல்லாம் மூன்றாம் பாலினத்தவர்கள் இவ்வளவு எண்ணிக்கையில் தென்பட்டதில்லை..
மலட்டுத்தன்மைகள் அதிகம் இல்லை...
இளம் வயதில் மனமொத்த விவாகரத்துகள் இவ்வளவு இல்லை..
எல்லாவற்றிற்கும் பருவநிலை மாற்றம் மட்டுமே காரணமல்ல..
போதைப் பழக்கங்களும், கூடாத சேர்மானங்களும் தான் பிரதானக் காரணங்களாக முன் நிற்கின்றன..
சிட்டுக் குருவிகள், அக்காக் குருவிகள், செம்பூகங்கள், பச்சைக்கிளிகள், தூக்கணாங்குருவிகள் எனப் பல பறவைகள் இப்போது எண்ணிக்கையில் குறைந்துவிட்டன..
வீரிய ஒட்டுரகத் தானியங்களும், கலப்பினப் பசுக்களும் வந்த பிறகு மனித குலத்தின் மகரந்தச் சேர்க்கையும் கூட குறைந்துவிட்டன என்பது என் அவதானிப்பு.
முன்பெல்லாம் பாலில் தான் டீ கடைகளில் டீ குடித்தோம்..
இப்போது பாலைப் போன்ற ஒரு திரவம்...
குளத்து நீர் தன் தன்மையை இழந்து விட்டது..
செயற்கையாக த் தயாரிக்கப்பட்ட குடிநீர் உங்கள் வீடு தேடி வருகிறது..
குளங்கள் எல்லாம் மலடாய்ப் போய் விட்டன..
முன்பெல்லாம் கிராமங்களுக்குப் பொலிகாளைகளை ஓட்டி வருவார்கள்.
ஈனாத பசுக்களோடு இணைய விடுவார்கள். வேடிக்கை பார்த்து வியந்ததுண்டு..
அதன் விபரம் அறியக் கால தாமதம் ஆனது..
இப்போது செயற்கைக் கருவூட்டல் மையங்கள் வந்து விட்டன.
குடும்ப உறவுகள் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.
எல்லாவற்றிற்கும் அரசியல் புகுந்து விட்டன..
சிட்டுக் குருவிகள் அருகிப்போனதைப் பற்றிக் கவலைப்பட்டதைப் போல மனிதர்களும் அருகிப் போகிறார்கள் என்று கவலைப்படும் காலம் வந்து விட்டன.
மேலை நாட்டுக் கலாச்சாரம் தமிழ் மண்ணின் கலாச்சாரத்தைச் சிதைத்து வருகிறது என்பதை நாம் கவனிக்கத் தவறுகிறோம்..
மனித குலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் அரசியல் கூட்டணி பற்றிக் கவலைப்படுகிறோம்.
எல்லாவற்றிற்கும் பிரதானம் குடும்ப உறவு முறைகள் தான்..
அறிவியல் தொழில் நுட்பம் மட்டுமே வாழ்க்கையை மேம்படுத்தாது..
மகரந்தச் சேர்க்கைக்கு குந்தகம் விளைவிக்காத பருவ நிலையை மீட்டெடுப்போம்..
பிஞ்சிலேயே வெம்பிப் போகிற காய்களாக அடுத்த தலைமுறையை வளர்க்கிறோம்...
நாட்டுக்கோட்டைச் செட்டிமார்கள் அயல் நாடுகளில் சம்பாதித்து தாயகத்தில் வியக்கத்தக்க வீடுகளையும், கோயில்களையும் கட்டினார்கள்..
இன்று அமெரிக்கா, கனடா போன்ற அயல் நாடுகளுக்குப் பிழைக்கப் போன பலர் திருமணமே செய்து கொள்ளாமல் காலந்தள்ளுகிறார்கள் என்கிற செய்தி அதிர்ச்சி தருகின்றன.
இதில் மருத்துவர்களும், பொறியாளர்களும் அதிகம்..
வாழ்க்கை என்பது வெறும் உண்டு கழித்துச் சாவதில்லை..
குடும்பமாய்ச் .சமூகமாய்ச் சேர்ந்து வாழ்வதுதான் வாழ்க்கை..
அதற்கு இது மாதிரியான அரிய கதைகளும் துணை செய்யட்டும்..
வாழ்க தேவேந்திரனியம்.
©️✒️ யாழி
06.03.2024.
Comments
Post a Comment