குடும்பனின் விளக்கத்தில்

 மக்களுக்கு புரியற மாதிரி சொல்லுங்க..!!!!!



அணையின் நீர்மட்டம் 

இத்தனை அடிக்கு உயர்ந்தது என்று கூவு கூவுவென்ற 

கூவுவார்களே தவிர, 

அணையின் கொள்ளளவு எவ்வளவு 

தற்போதைய இருப்பு எவ்வளவு என்பதை மட்டும் பெரும்பாலும்  சொல்லவே மாட்டார்கள்.


என்றைக்கும் அப்படித்தான், இத்தனை அடி உயர்ந்தது 

அத்தனை அடி உயர்ந்தது என்று 

ஒரே அடி புராணம்தான்.


ஒரு அணையை, அதன் பிரமாண்டத்தை விவரிக்கும் 

முக்கிய அம்சம் என்னவென்றால் அதன் கொள்ளளவு தான். 


இந்த அதிமுக்கிய விடயம் மட்டும் ஏனோ செய்தியை எழுதுபவர்களுக்கு  விளங்கவே மாட்டேங்கிறது. 


கர்நாடகாவின் 

மைசூரில் உள்ள 124 அடி 

கிருஷ்ணராஜ சாகர் எனப்படும் கேஆர்எஸ் அணையின்  

மொத்த கொள்ளளவு 45.4 டிஎம்சி. 


ஆனால் அதைவிட நான்கு அடி உயரம் குறைவான மேட்டூர் அணை, 

120 அடிக்கு தேக்கி கொள்ளும் 

நீரின் முழுகொள்ளளவு 93.4 டிஎம்சி. 


அவ்வளவு ஏன்? 

சோலையாறு அணை 

160 அடி உயரம் ஆனால் 

கொள்ளளவு வெறும் 5 டிஎம்சிதான்.. 


பவானி சாகர் 105 அடி, 

கொள்ளளவு 32 டிஎம்சி. 

ஆனால் 119 அடி கொண்ட சாத்தனூர் கொள்ளளவு 7.3 டிஎம்சி


அணையின் மொத்த கொள்ளளவு, தற்போதைய நீர் இருப்பு இதுதான் எல்லாவற்றையும்விட முக்கியமான விடயம். 

அதைவிட்டுவிட்டு 

ஒரே நாளில் எட்டடி உயர்ந்தது என்று பரபரப்பு காட்டுவதால் பலனில்லை. 


அணையை பொறுத்தவரை தரைமட்ட உயரத்திலிருந்து மேலே போகப்போக நீர்தேங்கும் பரப்பளவு அதிகமாகும்,

 அணையின் கீழ்பகுதியில் கிடுகிடுவென பத்தடி உயர வெறும் ஒரேயொரு டிஎம்சி தண்ணீரே போதுமானதாக இருக்கும், 


அதே அணையில் மேலேபோகப்போக, ஒரு அடி உயரவே ஒரு டிஎம்சி ப்ளஸ் தண்ணீர் தேவைப்படும்.


உதாரணத்திற்கு, 

120 அடி மேட்டூர் அணையில் 60 அடி என்பது பாதி உயரம். முழுக்கொள்ளளவு 93 டிஎம்சி என்றால் ‘’அறிவாளிகள்’’ கணக்குப்படி 41.5 டிஎம்சி இருக்கவேண்டும். 


ஆனால் மேட்டூர் அணையில் 60 அடி நீர்மட்டம் என்றால் 25 டிஎம்சி நீர்தான் இருப்பு இருக்கும் என்பதே உண்மை.


இன்னும் புரியிற மாதிரி சொல்லுவோம்.


60 அடி என்றால் 25 டிஎம்சிதான்

70 அடி என்றால் 33 டிஎம்சி

80 அடி 41 டிஎம்சி

90 அடி 50. டிஎம்சி

100 அடி 64 டிஎம்சி

110 அடி 76 டிஎம்சி

115 அடி 85 டிஎம்சி

120 அடி 93.4 டிஎம்சி


மேட்டூர் அணை 

100 அடியை தொட்டது !!!

100 அடியை தொட்டது !!!!

என்று கூப்பாடு போடுவார்கள். 

ஆனால் அணையில் 100அடிக்கு நீர் இருப்பு 64 டிஎம்சி தண்ணீர்தான். 


அதிகபட்சமான 120 அடியை தொட, மேற்கொண்டு 20 அடி உயரவேண்டும். அந்த வெறும் 20 அடிக்கு 30 டிஎம்சி நீர் வேண்டும். 

அதாவது மூன்றில் ஒரு பங்கு


இன்னும் சொல்லப்போனால் அணையின் கொள்ளளவில் எவ்வளவு சதவீதம் நீர் இருப்பு சொன்னால் தெளிவாக விளங்கிவிடும்


நமக்கு தெரிஞ்சி அவ்ளோதான்..

🙂


Elumalai Vengatesan

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்