குடும்பனின் பார்வையில்

 தமிழர்களின் வரலாறு என்பது பல நூறு தலைமுறைகளை தாண்டியது, மிக பழமையானது, சொல்லப்போனால் ஒருபோதும் ஒரே வழிவழியே தொடுக்க முடியாத பல்வேறு பிரிவுகளை, கிளைகளை, உட்பிரிவுகளை, உட்கிளைகளை கொண்டது.....!?



இங்கே யாருடைய சமூக பண்பாட்டையும் எடுத்துக்கொண்டு இதுதான் தமிழர்களின் கலாச்சாரம் பண்பாடு என்றெல்லாம் வரையறுத்துவிட முடியாது, செய்தால் அதைவிட அபத்தம் கதைகளில் கூட இருக்காது.....!!!!


சமகாலத்தில் ஒவ்வொரு சமூகத்திற்குமென தனித்துவமான சில வழக்கங்கள், பண்பாடுகள், மரபுக் கூறுகள் இருக்கவே செய்யும், அதைத்தான் வேல ராமமூர்த்தியும் கூறியிருக்கிறார், தமது சமூகத்தில் இருக்கும் தனித்துவமான மரபு வழக்கத்தை பெருமையோடு சுட்டியிருக்கிறார், இதற்காக அவர் மீது விழுந்து பிராண்ட தேவையில்லை, அப்படி செய்தால் தலீத்தியத்துக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.....???!


இங்கே எப்படி தலீத்தியம் வந்தது என்று கேட்கிறீர்களா, தலீத்தியம் மட்டுமல்ல, இன்றைய இந்திய நில பரப்பில் ஆளும் வர்க்கமாக இருக்கும் கூட்டத்திற்கு கொத்தடிமை வேலை செய்யும் திராவிட, திராவிட கம்யூனிச, முட்டாள் தமிழ் தேசிய கும்பல் மொத்தமும் அதைத்தான் செய்கிறார்கள்.....!!!?!


ஆளும் கூட்டம் ஒரே தேசம், அதை முன்னணியில் வைத்து ஒரே இனம், ஒரே மொழி, ஒரே ஆளும் கும்பல், ஒரே குப்பை வரலாறு என்று பண்பாட்டை உருவாக்கி எங்கிருந்தோ வந்த வரலாற்றை கொண்ட அவர்கள் இங்குள்ள வரலாறு மொத்தத்தையும் நீர்த்து போகச் செய்து இந்த நிலத்தை சொந்தம் கொண்டாட துடிக்கிறார்கள் என்றால் அதற்கு பல்வேறு தளங்களில் அடியாள் வேலை செய்து தனித்துவங்களை ஒழித்து தலீத்தியம் திராவிடம் திராவிட கொத்தடிமை என்கிற பெயரில் அவர்களுக்கு நம்பகமான அடிமைப் பணியை இந்த திராவிட கும்பல் அவர்களைவிட தீவிரமாக மூர்க்கமாக செய்கிறது, அதோட வெளிிப்பாடு தான் தமிழர்கள் என்றாலே அவர்களுக்கு ஒரே கலாச்சாரம் தான் இருக்க வேண்டும், பண்பாடு தான் இருந்திருக்க வேண்டும் என்று கூச்சல் போடுவது.....!?!!


அவரவருக்கு உண்டான தனித்துவத்தை நாம் மதிக்கத்தான் வேண்டும், இந்த ஆரிய திராவிட கும்பலை போல உங்களை யாரும் நெருக்காதவரை, ஒற்றை கலாச்சாரத்தை வம்படியாக புகுத்த நினைக்காதவரை (வேல ராமமூர்த்தி) அவர் மதனி வீட்டில் பெண் எடுப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?,

 அது அவர்கள் பண்பாடு, சமூக கட்டமைப்பு. அதை அவர்கள் உங்களிடமிருந்து திருடாத வரை (உங்கள் மீது திணிக்காத வரை) அவர்கள் மீது உங்கள் என்ன கோபம் வேண்டி கிடக்கிறது......???


பாரதிராஜா, பாலச்சந்தர், உதயகுமார், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், முத்தையா மாதிரியான ஆட்களின் சினிமாவை பார்த்துவிட்டு மனிதர்கள் யாவரையும் ஏதாவது ஒரு தொகுப்புக்குள் நிறுத்துவது என்பது எவ்வளவு அபத்தம் என்பது இப்போதாவது உணரப்பட வேண்டும், அப்போது தான் ஒவ்வொரு சமூகமும் அவரவர் தனித்துவத்தோடு, வரலாற்றில் அவர்கள் பரவியிருந்த புவி பரப்போடு, கொஞ்சமேனும் சுதந்திர உணர்வோடு வாழ வரலாற்றை தன் தலைமுறைக்கு கடத்த முடியும்......!!?!!


அதனால் என்ன என்கிறீர்களா, உங்கள் வரலாற்றை மட்டும் எந்தவித தயவு தாட்சன்யமும் இன்றி உங்கள் தலைமுறைக்கு கடத்திவிடுங்கள், அது என்ன செய்ய வேண்டும் என்பதை அந்த வரலாறு பார்த்துக்கொள்ளும்......☯️


வேல ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி.

 -ஆதி

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்